Home ஆரோக்கியம் வாய் துர்நாற்றத்தினால் சங்கடமா… கவலைய விடுங்க… இப்படி செய்யுங்க

வாய் துர்நாற்றத்தினால் சங்கடமா… கவலைய விடுங்க… இப்படி செய்யுங்க

132

சிலருக்கு வாய் துர்நாற்றத்தின் காரணமாக பிறரிடம் பேசக்கூடக் கூச்சப்படுவர். தர்மசங்கடம் காரணமாக யாருடனும் சகஜமாகப் பழகுவதற்கு சிரமப்படுவார்கள். அவர்களுக்கு கைநிறைந்த பலனை சில கை வைத்திய முறைகள் தருகின்றன.

வாய் நாற்றம் உள்ளவர்கள, தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 டம்ளர் நீரைத் குடித்துவிட்டு, எலுமிச்சம் பழச்சாறு கலந்த தண்ணீரால் வாய் கொப்பளித்து வாய் நாற்றம் நீங்கும்.

கிச்சலிக் கிழங்கைக் காயவைத்துப் பொடியாக்கி, வாய் நாற்றம் உள்ள சமயங்களில் அரை சிட்டிகைப் பொடியை வாயில் போட்டு கொப்பளித்தால் வாய் நாற்றம் போகும்.

அகத்திக் கீரை, மணத்தக்காளிக் கீரைகள் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் வாய் நாற்றம் என்ற பிரச்னையே வராது.