Home ஆரோக்கியம் யாருக்கெல்லாம் சிறு நீர்க் குழாய் தொற்று நோய் உண்டாக அதிக வாய்ப்புகள் உள்ளன என தெரியுமா?

யாருக்கெல்லாம் சிறு நீர்க் குழாய் தொற்று நோய் உண்டாக அதிக வாய்ப்புகள் உள்ளன என தெரியுமா?

33

சிறு நீரகக் குழாயில் தொற்று ஏற்படுவது சாதரணமாக விட முடியாது. அது ஆரோக்கியமற்றதன்மையை வெளிப்படுவதாகும். நமது உடலின் உள்ளே இருக்கும் கிருமிகள் வெளியேறுவது சிறு நீரக குழாயின் மூலமாகத்தான். அதே போல் எளிதில் நுழையும் இடமும் சிறு நீரக குழாயின் மூலமகத்தான்.

போதிய நீர் குடிக்காமலிருந்தால் சிறு நீர் தங்ககிவிடக் கூடும். இதனால் கிருமிகள் எளிதில் உருவாகி தொற்றை உண்டாக்கிவிடும். அதேபோல் மலச்சிக்கல் அல்லது வயிற்று போக்கு இவ்விரண்டுமே சிறு நீரகத் தொற்றை உருவாக்கிவிடும். யாருக்கெல்லாம் இத்தொற்று அதிகம் தாக்கும் என்பதை பார்ப்போமா?

50 வயது ஆண்களுக்கு : பொதுவாக ஆண்களுக்கு 50 வயதை அடைந்த பின் புரோஸ்டேட் சுரப்பி பெரிதாகிவிடும். இதனால் சிறு நீரை வடிக்க முடியாமல் சிறு நீரகத்திற்கு பாதிப்பு உண்டாகும். எனவே அவர்களுக்கு சிறு நீர் வெளியே செல்ல முடியாதபடி தங்கும்போது தொற்று உண்டாகக் கூடும்.

மெனோபாஸ் பிறகு பெண்களுக்கு : மெனோபாஸ் பிறகு ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக இருப்பதால் அந்த சமயத்தில் அவர்களுக்கு எளிதில் சிறு நீரகக் குழாய் தொற்று உண்டாகும் வாய்ப்புகள் உள்ளன.

குழந்தைகளுக்கு : குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கு பிறப்புறுப்பில் இருக்கும் சதையை சுன்னத் செய்வதால் தொற்று உண்டாகும் வாய்ப்புகள் குறைவு. ஆனால் சுன்னத் செய்யாமல் இருக்கும் குழந்தைகளுக்கு நுனிப்பகுதியில் நீண்டிருக்கும் சதையினுள் சிறுநீர் தங்கிவிடுவதால் அடிக்கடி சிறு நீர் தொற்று உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.

கேத்தேடர் உபயோகப்படுத்தும் போது : ஏதாவது அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு சிறு நீரகம் வெளியே செல்ல சிறு குழாய் ஒன்றை உள்ளே செலுத்தியிருப்பார்கள். இந்த குழாயால் கிருமிகள் உள்ளே செல்ல வாய்ப்புகள் உண்டு. இதனால் தொற்று உண்டாகும்.

ஓட்டுநர் , நர்ஸ் மற்றும் ஆசிரியர்கள் : வாகன ஓட்டுநர்கள், நர்ஸ் மற்றும் ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட இடங்களில் மற்றும் பொது கழிவறைகளிலேயே நாள் முழுவதும் சிரு நீர் கழிக்க வேண்டியதிருக்கும். இவர்களுக்கு அதிகம் தாக்கும் வாய்ப்புகள் உள்ளது.

பெண்களுக்கு : ஒரு வாரத்தில் பலமுறை செக்ஸ் வைத்துக் கொள்ளும்பெண்களுக்கு சிறு நீரக தொற்று உண்டாகும் வாய்ப்புகள் அதிகம். பெண்களின் சுரு நீரக் குழாய் ஆண்களி காட்டிலும் சிறியது என்பதால் பேக்டீரியாக்கள் நுழைவது எளிது. சிறு நீரக் தொற்றுக் உண்டாகும்.