Home ஆரோக்கியம் சிறுநீர் இரத்தச் சிவப்பாக இருந்தால் ,நோய்கான அறிகுறிகள் தெரியுமா?

சிறுநீர் இரத்தச் சிவப்பாக இருந்தால் ,நோய்கான அறிகுறிகள் தெரியுமா?

78

நமக்கு உடலில் `பாதிப்புக்கள் உண்டானால் உடனடியாக சிறுநீர் பரிசோதனை செய்ய சொல்வார்கள்.கிருமித் தாக்கமோ அல்லது அயனிகள்அதிகரிப்போ? என பல விடயகளை சிறுநீர் அறிகுறியாக காட்டும்.

அவ்வாறு உங்கள் சிறுநீரில் இரத்தக்கட்டிகள் அல்லது இரத்தச் சிவப்பாக இருந்தால் உடலில் இரத்தக்கசிவு அல்லது வேறு ஏதாவது பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்

ஹிமடூரியா :

இரத்தச் சிவப்பாக இருந்தால் அதற்கு ஹிமடூரியா என்ற பிரச்சனை இருக்கும்.இதனை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

உடலில் ஏதேனும் ஒரு பாகத்தில் இரத்தப்போக்கு இந்த பிரச்சனை உண்டாகும்.

புகைப்பிடித்தல் :

அளவுக்கு அதிகமாக புகைப்பிடிப்பவர்களுக்கு சிறுநீரக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உண்டு.அவர்களுக்கு இரத்தக்கட்டிகளாக சிறுநீரில் வெளிப்படும்.

சிறுநீரகக் கற்கள் :

சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால், அதன் பாதிப்பாக சிறுநீரில் இரத்தம் வெளிப்படும்.அச் சமயங்களில் தேநீர்,காபி குடிப்பதை நிறுத்த வேண்டும்.

இல்லையெனில் பாதிப்பு இன்னும் அதிகமாகும்.

சிறுநீரக நோய்கள் :

சிறுநீரகக் குழாயில் உண்டாகும் கோளாறுகள், ப்ரோஸ்டேட் வீக்கம்,ப்ரோஸ்டேட் புற்றுநோய்,சிறுநீரக செயலிழப்பு, அதிகப்படியான மாத்திரைகள் ஆகியவற்றாலும் சிறுநீரில் இரத்தம் வெளிப்படும்

இரத்தநோய்கள் :

சிலவகை இரத்தம் சம்மந்தப்பட்ட நோய்களான; சிக்கில் செல் அனிமியா,இரத்தத்தட்டு போன்ற நோய்களாலும் சிறுநீரில் இரத்தம் வெளிப்படும்.

பரிசோதனை :

சிறுநீரில் இரத்தத்தோடு எரிச்சல்,அடிவயிறுவலி,காய்ச்சல்,வாந்தி,மயக்கம் ஆகியவைகளும் காணப்பட்டால் உடனடியாக

மருத்துவரிடம் சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.