Home ஆரோக்கியம் சிறுநீரின் கலரை எப்பவாவது கவனிச்சிருக்கீங்களா? இனிமேல் கவனிங்க.

சிறுநீரின் கலரை எப்பவாவது கவனிச்சிருக்கீங்களா? இனிமேல் கவனிங்க.

21

சிறுநீர் லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும். சில சமயங்களில் அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் என்று தான் பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது முற்றிலும் தவறு.

சிறுநீரில் மஞ்சளையும் தாண்டி இன்னும் சில நிறங்கள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் உங்கள் ஆரோக்கியம் பற்றியும் உடலில் உள்ள நோய்க்கான அறிகுறிகளையும் வெளிப்படுத்துகின்றன.

சிறுநீர் பரிசோதனை

சிறுநீர் பரிசோதனையைத் தான் மருத்துவர்கள் நோயாளிகளை அணுகுவதற்கான முதன்மை ஆதாரமாகக் கொள்கிறார்கள். குறிப்பாக, உடலில் உள்ள ஈரப்பதம் குறித்து சிறுநீரின் நிறத்தை வைத்துத் தெரிந்து கொள்ள முடிகிறது. நாம் எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ அதைப் பொறுத்து நம்முடைய மூளை, சருமம் ஆகியவை ஆரோக்கியமாக இருக்கும். உடலில் ஈரப்பதம் குறையும் போதுதான் பிரச்னைகள் ஆரம்பிக்கத் தொடங்குகின்றன.

சிறுநீரின் நிறங்கள்

நிறமில்லாதது

எந்தவொரு நிறமும் இல்லாமல் தண்ணீரைப் போன்று பளிச்சென இருந்தால், நீங்கள் நிறைய தண்ணீர் குடிக்கிறீர்கள் என்று அர்த்தம். சில சமயங்களில் நீங்கள் குடிக்கும் அதிகப்படியான தண்ணீர் கூட உடனடியாக சிறுநீராய் வெளியேறிவிடும். அதனால், ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் வரையிலும் குடிக்கலாம். எப்படி குடிக்க வேண்டும் என்று மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

வெள்ளைநிறம்

வெள்ளை நிறத்தில் சிறுநீர் வருவது உங்கள் பிறப்புறுப்புகளில் இருக்கும் அலர்ஜி, மற்றும் நோய்த்தொற்றுகளைக் குறிக்கிறது.

வெளிர் மஞ்சள்

வெளிர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் இருந்தால், உடல் ஆரோக்கியம் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம்.

அடர் மஞ்சள் நிறம்

அடர் மஞ்சள் நிறமும் ஆரோக்கியமாக இருப்பதற்கான அறிகுறி தான். ஆனால் சில சமயங்களில் இயல்பாக அந்த நிறம் இருப்பதில்லை. வைட்டமின் மாத்திரைகளைப் பயன்படுத்தும் போது, இதுபோன்று மஞ்சள் நிறத்தில் சிறுநீர் இருப்பதும் உண்டு.

டாக் பிரௌன் கலர்

டார்க் பிரௌன் கலரில் சிறுநீர் வருகிறதென்றால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அது கல்லீரலைப் பாதிக்கும். கல்லீரல் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.