Home உறவு-காதல் உங்கள் உறவை நீங்களே சீரழித்து வருகிறீர்கள் என்பதை வெளிகாட்டும் 10 அறிகுறிகள்!

உங்கள் உறவை நீங்களே சீரழித்து வருகிறீர்கள் என்பதை வெளிகாட்டும் 10 அறிகுறிகள்!

34

நம் வாழ்வில், நமது உறவில் எந்த ஒரு மாற்றம் நேர்ந்தாலும் அதற்கு நாம் தான் காரணமாக இருக்க முடியும். நம்மை தவிர வேறு யாரும் நமக்கு பெரிதாக தீங்கு விளைவித்துவிட முடியாது. நாம் எடுக்க தவறிய சரியான முடிவுகள், நாம் எடுத்த தவறான முடிவுகள் தான் நமது வாழ்க்கையில் விளைவுகளை உண்டாக்குகின்றன. அந்த வகையில் நமது உறவை நாமே சீரழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை வெளிகாட்டும் அறிகுறிகள் பற்றி இங்கு காணலாம்…

சண்டை உறவில் ஏற்படும் பிரச்சனை என்ன? அதற்கு எப்படி தீர்வு காண்பது என்பதை விட்டு, உங்களுக்குள் இருக்கும் குழந்தையை வெளியே விட்டு சண்டையிட்டு கொண்டே இருப்பது.

கண்டுகொள்ளாமல் இருப்பது… உங்களுக்கு அவரை பிடிக்கும் தான். ஏதோ ஒரு புள்ளியில் நீங்கள் அவர் மீது அதீத காதலை உணர்ந்திருப்பீர்கள். அதற்காக அவர் செய்யும் தவறுகள் அனைத்தையும் கண்டுக்கொள்ளாமல் இருப்பது நீங்கள செய்யும் மிகப்பெரிய தவறு.

மாற்றம்! உங்களுக்காக அவர் மாற வேண்டும், உங்களுக்கு பிடிக்காத விஷயங்களை விடுத்து, அவரை முழுமையாக மாற்றிக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்க கூடாது. இருவரும் ஒரே மாதிரி இருந்தால் வாழ்வில் சுவாரஸ்யமே இருக்காது.

பொறாமை! காரணமே இல்லாமல் பொறாமை பட கூடாது. நீங்கள் இருவரும் காதலில் இருக்கிறீர்கள் என்பதால் உங்கள் துணையை வேறு யாரும் விரும்ப கூடாது, அவருடன் யாரும் பழக கூடாது என நினைக்க கூடாது. விரும்புதல் எல்லா உறவிலும் இருக்கும் செயல், இருக்க வேண்டிய செயல்.

காரணம் காட்டுதல்… உங்கள் வாழ்வில் எல்லா விஷயமும் அவர் சார்ந்த இருக்க வேண்டும் என நினைப்பது. உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் தவறு நடந்தால் அதற்கு அவர் உடன் இல்லாதது தான் காரணம் என நல்லது, கெட்டது அனைத்திற்கும் அவரையே காரணம் காட்டுவது கூடாது.

விலக மறுத்தல்! அவரை விட்டு விலகி இருக்க மறுப்பது. நீங்கள் அவரை விட்டு விலகி வந்தால் அவர் மாறிவிடுவார் என அஞ்சுவது. வேலை, குடும்பம் என பல காரணத்தால் நாம் விலகி இருக்க நேரிடலாம். அந்த நேரத்தில் தான் காதல் அதிகரிக்கும். இதை அறியமால் எந்நாளும் ஒட்டியே இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ள வேண்டாம்.

ஏற்றவர் இல்லை… நான் அவருக்கு ஏற்றவர் இல்லை என்ற எண்ணம் கொள்வது. இது நீங்களே உங்கள் மீது நம்பிக்கை இன்றி இருப்பதை காட்டும் அறிகுறி.

ஒப்பீடு! அவர் செய்யும் எந்த ஒரு செயலையும் உங்கள் முன்னாள் காதலருடன் ஒப்பிட்டு பார்ப்பது. இதை அறவே நிறுத்த வேண்டும். அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

ஆசை! எல்லா விஷயங்களையும் சேர்ந்தே செய்ய வேண்டும் என நினைப்பது. இது அனைவருக்கும் இருக்கும் ஆசை தான். ஆனால், எல்லா செயல்களையும் சேர்ந்தே செய்ய முடியாது என்பதையும் புரிந்துக் கொள்ளுங்கள். அவரவர் நேரம் எல்லா சந்தர்பத்திலும் சேர்ந்தே இருக்க ஒத்துழைக்காது.

காது கொடுக்க மறுப்பது! அவர்கள் என்ன கூடுகிறார்கள் என காதுக் கொடுத்து கேட்காமல் இருப்பது. இதனால் தான் சண்டைகள் உறவில் அதிகரிக்கின்றன.