Home பாலியல் மாதவிடாய் வராமல் தவறுவதற்கான சில வேறுபட்ட காரணங்கள்

மாதவிடாய் வராமல் தவறுவதற்கான சில வேறுபட்ட காரணங்கள்

55

கர்ப்பமடைய முயற்சி செய்யும் பெண்களுக்கு ஒரு மாதம் மாதவிடாய் வராமல் தவறினால் அவர்கள் கர்ப்பமடைந்து விட்டிருக்கலாம் என்று எண்ணி சந்தோஷப்படுவார்கள். ஆனால் இன்னும் சிலருக்கு இது வெறும் பிரச்சனையாக மட்டுமே இருக்கலாம்.

இது தவிர்த்து, மாதவிடாய் வருவது உடல் ஆரோக்கியமாக இருப்பதன் ஓர் அடையாளமாகும். மாதவிடாய் என்பது ஒரு பெண் ஆரோக்கியமாக இருப்பதன் ஓர் அடையாளம் எனலாம்.

அப்படியானால், மாதவிடாய் வராமல் போவதற்கு என்ன காரணம் இருக்கக்கூடும்? (So, what are all those reasons that might be a cause of a missed period?)

பெண்ணின் உடலில் மாதவிடாய் சுழற்சியின் போது எண்ணற்ற ஹார்மோன் மாற்றங்கள் நிகழும், மன அழுத்தம் மற்றும் பதற்றத்தால் அவர்களின் மாதவிடாய் வராமல் தவறிப்போகலாம். ஆம்! மன அழுத்தத்தால் கூட மாதவிடாய் பாதிக்கலாம்.

இன்னும் விவரமாகப் பார்ப்போம்:

மாதவிடாய் சுழற்சி (Menstruation cycle): மாதவிடாய் சுழற்சிக்கு சற்று காலம் தேவை. புதிதாக மாதவிடாய் சுழற்சி தொடங்கியவர்களுக்கு அல்லது மாதவிடாய் முற்றிலுமாக நிற்கும் தருவாயில் உள்ள பெண்களுக்கு மாதவிடாய் ஓரிரு மாதங்கள் வராமல் தவறுவது நடக்கும். மாதவிடாய் முதலில் தொடங்கிய சில ஆண்டுகளில் அவ்வப்போது மாதவிடாய் சீராக இல்லாமல் போவதுண்டு. அதேபோல், மாதவிடாய் முற்றிலுமாக நிற்கும் சமயத்திலும் மாதவிடாய் வருவது படிப்படியாக குறையும்.
மன அழுத்தம், மனக்கலக்கம் மற்றும் பதற்றம் (Stress, anxiety and tension): இது பெருமளவில் உங்கள் உணர்வுசார்ந்த ஆரோக்கியத்தைச் சார்ந்தது. மன அழுத்தம், மனக்கலக்கம் மற்றும் பதற்றம் போன்றவை இருந்தால் ஒரு பெண்ணின் உடலில் பல்வேறு ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். அது போன்ற சமயங்களில் சுரக்கும் அட்ரினலின், கார்ட்டிசால் போன்ற மன அழுத்த ஹார்மோன்கள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கலாம்.
மருந்துகள் (Medications): ஏதேனும் உடல்நலப் பிரச்சனைக்காக நீங்கள் மருந்துகள் எடுத்துக்கொள்கிறீர்கள் எனில், மாதவிடாய் வராமல் தவற அதிக வாய்ப்புள்ளது. மன இறுக்கத்திற்காகப் பரிந்துரைக்கப்படும் மருந்துகள், புற்றுநோய் சிகிச்சையில் அளிக்கப்படும் மருந்துகள் மற்றும் சில ஸ்டிராய்டு மருந்துகளும் மாதவிடாய் வராமல் தவறக் காரணமாகலாம். மாத்திரை எடுத்துக்கொண்ட அடுத்த நாளும் மாதவிடாயைப் பாதிக்கலாம்.
நீரிழிவுநோய் மற்றும் பிற மருத்துவப் பிரச்சனைகள் (Diabetes and other medical conditions)

தாய்ப்பாலூட்டுதல் (Breastfeeding): குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு வழக்கமாகவே மாதவிடாய் தவறுவதுண்டு. இது, கர்ப்பத்தைத் தவிர்ப்பதற்காக இயற்கையே வழங்கியிருக்கும் ஒரு கருத்தடை முறையாகும். ஆனாலும் இதனை 100% வெற்றிகரமான கருத்தடை முறை என்று கருத முடியாது.
குறைந்த வயதில் சினைப்பை செயலிழத்தல் (Premature ovarian failure): பெண்களுக்கு சராசரியாக 40 வயதில் சினைப்பை செயலிழக்கத் தொடங்கும். இதற்கு முன்பே சினைப்பை செயலிழப்பதை, குறைந்த வயதில் சினைப்பை செயலிழப்பது (POF) என்கிறோம்.
நேர மண்டலத்தில் மாற்றம் (Change in schedule): வெவ்வேறு நேர மண்டலங்களுக்கு நீங்கள் பயணித்தால் அல்லது உங்கள் தினசரி வழக்கத்தில் திடீரென்று ஏதேனும் மாற்றினாலும் மாதவிடாய் வராமல் தவறக்கூடும்.
அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி (Excess workouts): அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்தாலும் மாதவிடாய் தவறக்கூடும். மாதவிடாய் வர உடல் இயல்பான ஆரோக்கியமான நிலையில் இருக்க வேண்டும். ஆகவே அதிகமாக உடற்பயிற்சி செய்வதாலும் மாதவிடாய் பாதிக்கப்படுகிறது.
தைராய்டு பிரச்சனைகள் (Thyroid problem): தைராய்டு சுரப்பி சரியாக செயல்படாவிட்டால், அது மாதவிடாயை முற்றிலுமாக பாதிக்கலாம்.
உடல்நலமின்மை (Being sick): சிலசமயம் உடல்நலமில்லாவிட்டாலும் மாதவிடாய் வராமல் தவறக்கூடும். உடலின் ஆற்றல் எதற்கு முக்கியமாகத் தேவையோ அதற்கு மட்டும் செலவிடும் வகையில் திசைமாற்றி செலுத்துவதற்கான இயற்கை வழியே மாதவிடாயைத் தவிர்ப்பதாகும்.
மாதவிடாய் தவறுவதற்கான சரியான காரணம் என்ன என்று தெரிந்துவிட்டால், மீண்டும் அதனை சீராக்க முடியும். சற்று காலம் தேவைப்படும்.

சரியான காரனங்ககுள் ஏதுமின்றி, அதிக காலம் மாதவிடாய் தவறினால் என்ன காரணமாக இருக்கலாம் எனக் கண்டறிய உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.