Home ஜல்சா உல்லாசம் அனுபவித்துவிட்டு ஏமாற்றிய காதலன்… பட்டதாரி பெண் செய்த விபரீதச் செயலால் அதிர்ச்சி!

உல்லாசம் அனுபவித்துவிட்டு ஏமாற்றிய காதலன்… பட்டதாரி பெண் செய்த விபரீதச் செயலால் அதிர்ச்சி!

39

கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஜகஜானந்தா தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ். கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்தார். இவருடைய மனைவி ஜோஸ்பின். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஜெயதேவி (வயது 30). இவர் எம்.எஸ்சி. படித்து முடித்து, சிதம்பரத்தில் உள்ள வேளாண்மை அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

ஜெயராஜும், அவருடைய மனைவி ஜோஸ்பினும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டனர். இதனால் பெற்றோரை இழந்த சகோதரிகள் 3 பேரும், சிதம்பரத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

அதேபகுதியை சேர்ந்தவர் சிகாமணி மகன் கருணாநிதி(34). இவர் சிவில் என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு சென்னையில் வேலை பார்த்து வருகிறார். ஜெயதேவி, கருணாநிதி இருவரும் ஒரே பகுதியில் வசித்து வந்ததால், படிக்கும் போதே இருவரும் அடிக்கடி ஒருவரையொருவர் சந்திக்கும் நிலை ஏற்பட்டது. நாளடைவில் இது அவர்களுக்கிடையே காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு பகுதிகளுக்கு வேலைக்கு சென்ற போதிலும் போன் மூலம் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில், கருணாநிதி, ஜெயதேவியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்து இருக்கிறார். இதையடுத்து, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கருணாநிதியிடம் ஜெயதேவி கேட்டார். ஆனால், அவர் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்.

காதலன் மீது புகார்

இதனால் தனது வாழ்க்கை பாழாகிவிட்டதே என்கிற சோகத்தில் ஜெயதேவி இருந்தார். இதுபற்றி, சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் ஜெயதேவி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாநிதியிடம் விசாரணை நடத்தினர்.

விஷம் குடித்து தற்கொலை

இருப்பினும் தனது வாழ்க்கையை எண்ணி ஜெயதேவி மனவேதனையில் இருந்ததாக தெரிகிறது. நேற்று காலை வீட்டில் குளியலறைக்கு சென்ற ஜெயதேவி, அங்கு விஷத்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.
உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அவரை, சகோதரிகள் இருவரும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி ஜெயதேவி உயிரிழந்தார்.

உருக்கமான கடிதம்

இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் உயிரிழந்த ஜெயதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே தற்கொலை செய்வதற்கு முன், ஜெயதேவி எழுதிய 3 பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் அவர் தனது முடிவுக்கான காரணத்தை உருக்கமாக எழுதியுள்ளார்.

உடலை வாங்க மறுப்பு

இதனிடையே இச்சம்பவம் பற்றி அறிந்த ஜெயதேவியின் உறவினர்கள், அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். அப்போது ஜெயதேவியை காதலித்து ஏமாற்றிய கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரை உடனடியாக கைது செய்யவேண்டும், மேலும் நேற்று முன்தினம் ஜெயதேவி அளித்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்காத போலீசார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போது தான் ஜெயதேவியின் உடலை பெற்று செல்வோம் என்று தெரிவித்தனர்.

இதனால், அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்திலேயே வைக்கப்பட்டது.
காதலன் கைது

இதனிடையே அனைத்து மகளிர் போலீசில், ஜெயதேவி அளித்த புகாரின் பேரில் கருணாநிதியை நேற்று போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.