Home ஆண்கள் ஆண்மை பெருக உடலுறவுக்கொள்ளும் போது பதட்டமா இருக்கா? கவலைய விடுங்க!

உடலுறவுக்கொள்ளும் போது பதட்டமா இருக்கா? கவலைய விடுங்க!

275

என்னதான் அனைவருக்கும் பிடித்தமான செயல் எனினும். முதல் முறை எனும் போது சிலருக்கு பதட்டமும், தயக்கமும் இருக்கத்தான் செய்யும். காதல் திருமணமாக இருந்தாலும் சரி வீட்டில் பார்த்து வைத்த திருமணமாக இருந்தாலும் சரி. இங்கு பிரச்சனை ஆண்களுக்கு அவரது உடலுறவு கொள்ளும் உறுப்பு அல்ல, மூளை தான். மூளையின் அவசர நிலையம், பதட்டமான சூழ்நிலையும் தான் இந்த பிரச்சனைக்கு காரணமாக திகழ்கிறது. தீர்வுகள் இல்லாத பிரச்சனைகளே இந்த உலகில் கிடையாது. இதற்கும் தீர்வுகள் இருக்கிறது. எந்த விஷயத்தையும் பிளான் பண்ணி பண்ணினால் தான் வெற்றி காண இயலும்.

கருத்தரிப்பதை அதிகரிக்கும் சில இயற்கை வழிகள்!!!

உடலுறவுக்கொள்ளும் போது பதட்டம் ஏற்பட காரணங்களாக இருப்பவை, சரியாக ஈடு கொடுக்க இயலுமா, நமது உறுப்பின் அளவு அவர்களுக்கு பொருந்துமா, சரியாக உச்சம் அடைய இயலுமா என நடப்பதற்கு முன்னரே மூளை போடும் வீண் கணக்குகள் தான். இவை எல்லாம் தேவை இல்லாத விஷயங்கள். நீங்கள் ஒன்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு செல்லவில்லை என்பதை முதலில் நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்கான வாய்ப்பு தினம் தினம் காத்திருக்கையில் பின் ஏன் வீண் பதட்டம். சரி இந்த பதட்டத்தை போக்குவதற்கான வழிகளை பற்றி இனி தெரிந்துக்கொள்ளலாம், தொடர்ந்து படியுங்கள்….

ஆண்களுக்கு விந்தணு குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

உடலுறவுக்கொள்ளும் பலருக்கு பதட்டம் ஏற்பட இதுதான் காரணம். அனைவரும் சினிமா நடிகர்கள் போலவோ அல்லது நடிகைகள் போலவோ தோற்றமளிக்க முடியாது. ரீல் வேறு ரியல் வேறு. அய்யோ நாம் குண்டாக இருக்கிறோம், ஒல்லியாக இருக்கிறோம். நமது துணைக்கு இது பிடிக்காமல் போய் விடுமோ என அச்சம்

உங்களது உடலுறவை ஆபாச படங்களுக்கு இணையாக நினைக்க வேண்டாம்
பலரது பதட்டத்திற்கு மற்றுமொரு முக்கிய காரணம் ஆபாச படங்களுக்கு நிகராக தங்களது உறவையும் எதிர்பார்ப்பது. இது முற்றிலும் தவறு. அங்கு எடிட்டிங் வேலைபாடுகள் எல்லாம் நடக்கும் அதனால் அதை போல உங்களது உடலுறவும் அமையும் என எதிர்பாக்க வேண்டாம்.

ஆணுறுப்பின் அளவை பற்றி கவலை வேண்டாம்

உடலுறவின் போது ஆண்கள் பெரும்பாலும் அவர்களுது உறுப்பின் அளவினால் தான் பதட்டம் அடைகின்றனர். ஆறு அங்குலம் ஏழு அங்குலம் அளவெல்லாம் இந்தியர்களின் சராசரி அளவு கிடையாது. இந்தியர்களின் சராசரி ஆணுறுப்பின் அளவு 5.5 அங்குலம் தான் எனவே ஆண்கள் இது குறித்து வீண் குழப்பம் காரணமாய் பதட்டம் அடைய வேண்டாம்.

முந்தைய அனுபவத்தை மறந்துவிடவும்

சில சமயங்களில் நீங்கள் முந்தைய முறை சரியாக உறவுக்கொள்ள முடியாமல் போயிருக்கலாம், அதை நினைத்துக்கவலை பட வேண்டாம் அது உங்களுக்கு முதல் அனுபவம் என்பதனாலோ அல்ல அன்றைய உடல்நிலையின் காரணமாகவோ அப்படி ஏற்பட்டிருக்கலாம். எனவே, முந்தைய அனுபவத்தை எண்ணி இன்றைய வாய்ப்பை தவறவிட வேண்டாம்.

முதல் முறை

முதல் முறை
முதல் முறை உடலுறவு கொள்ளும் பலருக்கு பதட்டம் ஏற்படுகிறது. இங்கு பலர் என்னவோ முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்தால் தான் அணியில் இடம் கிடைக்கும் என்பதை போல நினைகின்றனர், இது தவறு. முதல் தடவை என்பது நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டிய சமயம். எனவே, வீண் பதட்டத்திற்கு இடம் தராதீர்கள்.

தகுந்த மருத்துவரை அணுகுங்கள்

Top 10 Insurance Schemes By Modi
10 Bollywood Celebrities With Side Business
10 Bollywood actors who have successful side business!
தகுந்த மருத்துவரை அணுகுங்கள்
ஒருவேளை ஏதாவது பிரச்சனை என்றால் தகுந்த மருத்துவ நிபுணர்களை அணுகுங்கள். அதைவிடுத்து உங்களுக்குள்ளேயே தவறாக நினைத்துக்கொண்டு பதட்டம் பட வேண்டாம். நீங்கலாக ஒன்றும் இல்லாததை பெரிதாக்கி உறவினுள் விரிசல் ஏற்பட காரணமாக இருக்காதீர்கள்

தோல்வி தான் வெற்றிக்கு முதல் படி

இது பழமொழி! உடலுறவுக்கும் அப்படி தான். வெற்றிகள் மட்டுமே குவிக்க இது உலககோப்பை விளையாட்டு அல்ல. நம் உடல்நிலையை பொறுத்து தான் வலுவும் இருக்கும். அனைத்து நாட்களும் இன்பமாக இருக்க பில் கேட்ஸ் நினைத்தாலும் முடியாது. அனைவருக்கும் பிரச்சனைகள் ஏற்பட தான் செய்யும். அலுவலகம், வீடு என்று பல பிரச்சனைகளை சந்திக்கும் போது சில சமயங்களில் உடலுறவில் சரியாக செயல்படாமல் போக வாய்ப்புகள் இருக்கின்றன.

Previous articleவிந்து விரைவாக வெளியேறுவதை தடுக்க சுலபமான வழிகள் என்ன?
Next articleபெண்களை மிகுதியாக பால் வகை மகிழ்வுணர செய்யும் 5 இடங்கள் இவைதானாம்!