Home காமசூத்ரா உடலுறவில் செயல்திறனை அதிகரிக்க சூப்பரான 7 டிப்ஸ்!!

உடலுறவில் செயல்திறனை அதிகரிக்க சூப்பரான 7 டிப்ஸ்!!

83

உடலுறவில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும். ஆண்களுக்கு இது சற்று அதிகமாகவே இருப்பது இயல்பு தான். தனது துணையை திருத்திப்படுத்த வேண்டும் என்பது ஆண்களின் குறிக்கோளாக இருக்கும். நீங்கள் உடலுறவில் சிறப்பாக செயல்பட இந்த வழிமுறைகளை கையாளுவதன் மூலம் உடலுறவில் முழுமையான இன்பம் பெற முடியும்.

1. உணவுகள் நீங்கள் உடலுறவுக்கு முன் சாப்பிடும் உணவானது உங்களது பாலியல் உணர்வை தூண்டும் வகையில் இருப்பது அவசியம். இந்த பாலியல் உணர்வுகளை தூண்டும் உணவுகளை சாப்பிடுவதால் நீங்கள் உடலுறவில் சிறப்பாக செயல்பட முடிகிறது. சாக்லேட், வாழைப்பழம் மற்றும் ஜிங்க் நிறைந்த உணவுகள் உங்களது பாலியல் உணர்வை தூண்டக்கூடியவை.

2. உடற்பயிற்சி உடலுறவுக்கு முன்னர் வியர்வை வழிய உடற்பயிற்சி செய்வது உடலுறவில் சிறப்பாக செயல்பட உதவுகிறது. யோக மற்றும் பாக்ஸிங் செய்வது கூட நீங்கள் படுக்கை அறையில் சிறப்பாக செயல்பட உதவும்.

3. கர்ப்பத்தடை மாத்திரைகள் நீங்கள் கர்ப்பத்தடை மாத்திரைகளை பயன்படுத்துபவராக இருந்தால், கர்ப்பத்தடை மாத்திரை பயன்படுத்துவதற்கு முன்னரும் பயன்படுத்திய பின்னரும் உள்ள வேறுபாடுகளை உற்று நோக்க வேண்டியது அவசியம். தொடர்ந்து இவற்றை உபயோகப்படுத்துவதால் ஹார்மோன் மாற்றங்கள் உருவாகலாம்.

4. மன அழுத்தம் மன அழுத்தம் உடலுறவில் சிறப்பாக செயல்படுவதை சீர்குலைக்கும் ஒரு காரணியாகும். எனவே மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். மொபைல், டிவி, கம்யூட்டர் போன்ற மின் சாதங்கள் உபயோகிப்பதை சற்று நேரமாவது தள்ளிப்போடுங்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக அந்த நேரத்தை செலவிடுங்கள்.

5. தனியாக இதை செய்யுங்கள் தனிமையில் இருக்கும் போது பல்வேறு விதமாக சுய இன்பம் காண்பது உடலுறவில் நீங்கள் சிறப்பாக செயல்பட உதவும். எனவே இதனை முயற்சி செய்து பாருங்கள்.

6. கவர்ச்சியாக தோன்ற! மனதளவில் மட்டும் பாலியல் உணர்வு இல்லாமல் உடலளவிலும் கவர்ச்சியாக தோன்ற வேண்டும் என நினைப்பவராக இருந்தால் நீங்கள் பெல்லி நடனம் மற்றும் யோக போன்றவற்றை செய்யலாம்.

7. கட்டாயப்படுத்த வேண்டாம் இருவரும் உடலுறவு கொள்ளும் மனநிலையில் இருந்தால் மட்டுமே உடலுறவு வைத்துக்கொள்ளுங்கள். கட்டாயப்படுத்தி உடலுறவுகொள்வது சரியான வழிமுறையாக இருக்காது. இருவராலும் சரியாகவும் செயல்பட முடியாது.

TAGSABOUT