Home அந்தரங்கம் உச்சகட்டத்தை விரும்பும் பெண்கள்;ஆய்வுகள 18+

உச்சகட்டத்தை விரும்பும் பெண்கள்;ஆய்வுகள 18+

58

நாம எல்லாரும் தெரிஞ்சிக்க, புரிஞ்சிக்க, விவாதிக்க விரும்புற ஆனா இப்படியெல்லாம் செய்ய ஏனோ தயங்குற ஒரு விஷயமாத்தான் இருக்கு “செக்ஸ்” சம்பந்தப்பட்ட எல்லாவிதமான கருத்துகளுமே நம்ம சமுதாயத்துல இதுவரைக்கும்! அளவான எல்லா விஷயங்களுமே நல்லதுதான்னு நம்ம எல்லாருக்குமே தெரியும்! அப்படிப்பட்ட ஒரு விஷயம்தான் செக்ஸ்கூட!

ஆனா செக்ஸை சுத்தி நாம மூட நம்பிக்கைகள், தயக்கங்கள், பயங்கள், தவறான புரிதல்கள் இப்படி எத்தனையோ சுவர்கள எழுப்பி, செக்ஸை பத்தின அடிப்படை உண்மைகள், யதார்த்தங்கள் இப்படி எதுவுமே வெளியில் தெரியாமலும், விளங்காமலும் போவதற்க்கான ஒரு சூழ்நிலையை உருவாக்கிட்டோம்! விளைவு, செக்ஸை எப்படி அணுகுவதென்று தெரியாமல், செக்ஸ் குற்றங்கள், கற்பழிப்புகள், கள்ள உறவுகள் இப்படி பலவகையான சிக்கல்களையும், குழப்பங்களையும் தொடர்ந்து சேர்த்துக்கிட்டே வர்றோம். இதெல்லாம் என்னைக்கு பூதாகரமா வெடிக்கப்போவுதோ தெரியல?!

செக்ஸ் சம்பந்தப்பட்ட எத்தனையோ குழப்பங்கள்ல ஒன்னுதான் இந்த உச்சக்கட்டம்! உச்சக்கட்டம் அப்படீன்னா என்னன்னு கேட்டா, ஒரு பதில் இல்ல, கிட்டத்தட்ட ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியான பதிலைத்தான் சொல்வாங்க! ஏன்னா, உச்சக்கட்டம் என்பது விவரிக்கமுடியாத, அனுபவித்துமட்டுமே உணரக்கூடிய ஒரு சிக்கலான உணர்வு! ஆனா, விஞ்ஞானமும், உளவியலும் உச்சக்கட்டத்துக்கு வெவ்வேறு விளக்கங்களைக் கொடுக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது! அந்த விளக்கங்கள நாம இன்னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம். இப்போ இன்றைய பதிவுச் செய்தியை பார்ப்போம் வாங்க….

உச்சக்கட்டம் அப்படீங்கிறது அடிப்படையில, பால் உறுப்புகளின் தூண்டுதலில் தொடங்கி, உடலளவிலான பலவகையான மாற்றங்களையும், மனதளவிலான சில மாற்றங்களையும் உள்ளடக்கிய ஒரு எழுச்சி நிலை. இந்த எழுச்சி நிலைக்கு உடலின் பல்வேறு பாலுறுப்புகளிலிருந்து மூளைக்கு செல்லும் ரசாயன சமிக்ஞைகளும், அதற்க்கான மூளையின் எதிர்வினையாய் உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் உடலியக்க மாற்றங்களுமே காரணம்!

ஆர்கஸம்/அனார்கஸ்மியா பிரச்சினைகளும் சில பாலியல் ஆய்வுகளும்!

இந்த உச்சக்கட்டத்தை ஆங்கிலத்தில் ஆர்கஸம் என்கிறார்கள். உலகில் செக்ஸில் ஈடுபடும் எல்லாருக்குமே, உடலுறவின்போது உச்சக்கட்டத்தை அடைவதுதான் குறிக்கோள். ஆனாலும், உச்சக்கட்டத்தை அடைவது என்பது பலருக்கு கைவராத ஒரு கலையாகத்தான் இருக்கிறது என்கிறது விஞ்ஞானம்! உச்சக்கட்டத்தை அடைந்தால் சந்தோஷம் இல்லைன்னா என்ன உசுரா போய்விடும் அப்படீன்னு நீங்க யோசிக்கலாம். செக்ஸில் ஈடுபடுவோரால் தொடர்ந்து உச்சக்கட்டத்தை அடையமுடியவில்லையென்றால் அது அனார்கஸ்மியா (anorgasmia) எனும் செக்ஸ் குறைபாட்டில்தான் முடியும் என்கிறார்கள் பாலியல்துறை ஆய்வாளர்கள்!
இந்தப் பிரச்சினை அதுபாட்டுக்கு இருந்துட்டுப்போய்டா ஒன்னும் பிரச்சினையில்ல. ஆனா, ஒருத்தரோட வாழ்க்கைத்தரத்தையும், உறவுகளையும் பாதிக்கக்கூடியது இந்தக் குறைபாடு என்கிறார் அமெரிக்காவின், லாஸ் ஏஞ்ஜலீஸிலுள்ள செடார் சினாய் மருத்துவ மையத்தின் உளவியல் ஆய்வாளர் வாகி வில்லியம் இஷக்!
உச்சக்கட்டத்தை எட்டமுடியாமை என்பது பெண்களிடையே ஒரு பொதுவான பிரச்சினையாக இருக்கிறது என்கிறார் இஷக். கடந்த 2001 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 20 முதல் 40 வயதான பெண்களில், சுமார் 24% பெண்களுக்கு மாதக்கணக்கில் உச்சக்கட்டத்தை எட்டமுடியாமை இருப்பது கண்டறியப்பட்டது என்றும், அனார்கஸ்மியா குறைபாட்டினால் அவதிப்படும் இவர்களில் ஒரு சிலரே மருத்துவரை நாடுகிறார்கள் என்றும் கூறுகிறார் விஞ்ஞானி இஷக்! காரணம், சமுதாயத்தில் செக்ஸ் செயல்பாடில் திறமையின்மை என்பது ஒரு அவமானமாக கருதப்படுகிறது என்பதே என்கிறார்!

உளவியல் விஞ்ஞானி அவர்களின் தலைமையிலான சமீபத்திய ஒரு ஆய்வில், நான்கில் ஒரு பெண்ணுக்கு ஒரு பகல்கனவாகவே இருக்கும் உடலுறவின்போது உச்சக்கட்டம் என்னும் குறைபாட்டை தீர்க்க மருத்துவமும், இதுவரையிலான ஆய்வுகளும் போதவில்லை என்று தெரியவந்துள்ளது! பெண்களின் உச்சக்கட்டக் குறைபாடு குறித்து இதுவரை நடத்தப்பட்ட சுமார் 101 ஆய்வுகளை அலசிய இந்த ஆய்வில், பெண்களின் செக்ஸ் பிரச்சினைகளிலேயே இரண்டாவது தலையாய பிரச்சினையான உச்சக்கட்டத்தை எட்டமுடியாமை என்பதற்க்கான சிகிச்சைகள் மிக மிகக் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது என்கிறார்கள் இஷக் தலைமையிலான ஆய்வுக்குழுவினர்!

பலவகையான செக்ஸ் தெரபிகளை மேற்கொள்ளக்கூடிய திறமைசாலியான் பல பாலியல் மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்றபோதும், இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் மருந்துகள் என்று பார்க்கையில், ஒரு மருந்து சரியா, தவறா என்றறியும் சோதனை முயற்ச்சிகளே என்கிறார்

ஆர்கஸம் குறித்த குழப்பங்களும், அனார்கஸ்மியாவுக்கான தீர்வுகளும்!
உச்சக்கட்டம் தொடர்பான பிரச்சினை காரணமாக ஒருவர் மருத்துவரை அணுகினாலும், தீர்வுக்கான சிகிச்சை சிக்கலானது. காரணம், உச்சக்கட்டத்தைப் பொருத்தவரை இத்தனை நாட்களில், இத்தனை தரம் உச்சக்கட்டத்தை அடைவதுதான் இயல்பானது என்று சொல்லும் ஒரு திட்டவட்டமான வரையரை கிடையாது! ஆக, மருத்துவர்கள் நோயாளிகளின் வயது, செக்ஸ் அனுபவம் மற்றும் திருப்தி ஆகியவற்றைக் கொண்டே ஒரு தீர்வை காண முயலவேண்டும் என்கிறார்

ஆர்கஸம் தொடர்பான குழப்பம் ஒரு பக்கமென்றால், அனார்கஸம் ஏன் ஏற்படுகிறது என்பதற்க்கான அடிப்படைக் காரணங்களை கண்டறிவது என்பது இன்னொரு பெரிய பிரச்சினை! அனார்கஸம் குறைபாடுள்ளவர்களில் பலருக்கு குறைபாட்டுக்கு காரணம் உளவியல்பூர்வமானது. உதாரணமாக, கடந்தகால பாலியல் துன்புறுத்தல்கள், செக்ஸ் தொடர்பான குற்ற உணர்வு மற்றும் தோற்றம் குறித்த குற்ற உணர்வு! முறிந்துபோன திருமண உறவுகள் மற்றும் செக்ஸ் குறித்த விவாதமின்மை ஆகியவை வேறு சில காரணங்கள்! உறவுகள் குறித்த கௌன்சிலிங் மற்றும் சைக்கோதெரபி ஆகியவை இவர்களுக்கான சிறந்த சிகிச்சைகள்!
வேறு சில பெண்களுக்கு, அனார்கஸ்மியாவுக்கான காரணங்கள் மருத்துவ ரீதியானது! உதாரணமாக, சிறுநீரகக் கோளாறுகள், ஃபைப்ரோமயால்ஜியா மற்றும் அத்தீரோஸ்க்ளீரோசிஸ் என்னும் கொலஸ்டிரால் மூலம் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு ஆகியவை என்கிறது ஒரு ஆய்வு! குழந்தைப்பிறப்புக்குப் பின்னான விலா எலும்புகளின் உறுதியின்மையும் மற்றுமோர் காரணமாம். இம்மாதிரியானவர்களுக்கு, ஹார்மோன் மாத்திரைகளான டெஸ்டோஸ்டீரோன் மற்றும் ஈஸ்ட்ரஜன் பலன் தரக்கூடுமென்றாலும், டெஸ்டோஸ்டீரோனால் ஆண்தன்மை அதிகரிக்கும் ஆபத்தும், ஈஸ்ட்ரஜனால் கேன்சர் வரும் ஆபத்தும் இருக்கிறது என்பது கவனத்தில் கொள்ளவேண்டியவை!!

அனார்கஸ்மியாவுக்கு தீர்வுகாண வேண்டும் பல ஆய்வுகள்!
பெண்களின் உச்சக்கட்டம் தொடர்பான குறைபாடுகளைக் குணப்படுத்துவதற்க்கு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைப்பான எஃப்.டி.ஏ வின் தரச்சான்றிதழ் மற்றும் ஒப்புதல்பெற்ற மருந்துகள் இதுவரை இல்லை!! இப்பிரச்சினைக்கான தீர்வு என்று கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட ஃப்லிபான்செரின் (flibanserin) என்னும் மருந்து தரமானதில்லை என்று எஃப்.டி.ஏ வால் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது!
இஷக் அவர்களின் சமீபத்திய ஆய்வில், ஹார்மோன் தெரபிகள், வயாக்ரா போன்ற மருந்துகள் உச்சக்கட்டம் தொடர்பான குறைபாடுகளுக்கு பலனளிக்கக்கூடியவை என்று முந்தைய சில ஆய்வுகள் சொல்லியிருந்தாலும், அந்த ஆய்வுகள் முழுமையானதாக இல்லை என்று கண்டறியப்பட்டது! கடந்த ஆண்டு, தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட செஸ்ட்ரா (Zestra) என்னும் எண்ணை பெண்களுக்கு உச்சக்கட்டத்தை ஏற்படுத்தியது என்று ஒரு ஆய்வு சொன்னாலும், ஆய்வில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை வெறும் 20 பெண்கள் என்றும், அதில் 10 பேருக்கு இந்த எண்ணையும், மற்றவர்களுக்கு ப்ளாசிபோ என்னும் மருந்தில்லா பொருளுமே கொடுத்து சோதனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது!மிகச்சிறிய இந்த ஆய்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் இல்லை என்கிறார்

ஆக, உச்சக்கட்டம் தொடர்பான குறைபாடுகளான அனார்கஸ்மியா போன்றவற்றிற்க்கு தீர்வு காண, புதிய மருந்துகளை சோதிக்கும்போது, பெரிய எண்ணிக்கையில் பெண்களை சோதனைக்கு உட்படுத்தும், பெரிய அளவிலான ஆய்வுகள் மிகவும் அவசியம் என்றும், தரமான வாழ்க்கையை வாழக்கூடிய ஒரு மனிதச் சமுதாயத்தை உருவாக்க, செக்ஸ் குறைபாடுகளை தீர்க்க வேண்டியது மிக மிக அவசியம் என்கிறார் ஆய்வாளர்