Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உடல்வாகும் அதற்கேற்ற உடற்பயிற்சியும்

உடல்வாகும் அதற்கேற்ற உடற்பயிற்சியும்

22

நம்முடைய உடல்வாகுக்கு ஏற்றவாறு நம்முடைய மரபணுக்கள் வேலை செய்யும் என்பது தெரியுமா உங்களுக்கு? அதனால் உடல் எடையைக் குறைக்கவோ அல்லது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் அவர்களுடைய உடல்வாகுக்கேற்ற உடற்பயிற்சியை மேற்கொள்வது உணவுக் கட்டுப்பாடுடன் இருப்பதும் முக்கியம்.

அப்படி முறையாக சில விஷயங்களைப் பின்பற்றினால் மட்டுமே நம்முடைய உடல் நாம் சொல்வதைக் கேட்கும்.

பெரிய தொப்பையை இருப்பவர்களாக இருந்தால் அவர்களுடைய உடல் உள்ளுறுப்புகள் ஆங்காங்கே இடம் நகர்ந்து காணப்படும். எப்போது மனஅழுத்தத்துக்கு உள்ளாகிறார்களோ அப்போதெல்லாம் அவர்களுடைய மரபணுக்களில் மாற்றங்கள் உண்டாகின்றன.

மிகக்குறைந்த அளவிலான தூக்கம், அளவுக்கு அதிகமாக எதையாவது சிந்தித்துக் கொண்டேயிருத்தல் ஆகியவற்றாலும் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புண்டு. இப்படி உடல் எடை அதிகரிப்பதால் சோம்பேறித்தனமும் அதிக அளவில் தலைமுடி உதிர்தலும் உண்டாகிறது.

இதுபோன்று எடை அதிகமாக இருப்பவர்கள் உப்பு மற்றும் கொழுப்பு உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

அகலமான இடுப்பு கவர்ச்சியாக இருக்குமென்பது உண்மை தான். ஆனால் இடுப்புப் பகுதியில் தான் கொழுப்பு அதிகமாகத் தேங்குகிறது. இதுபோல் இடுப்புப் பகுதியில் கொழுப்பு அதிகம் தெங்குவதால் கர்ப்பப்பை பாதிப்பு உண்டாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஈஸ்ட்ரஜோன் அதிகமாக சுரக்கும்.

இவர்கள் தங்களுடைய டயட்டில் பழங்கள் மற்றும் பேரிட்சைப் பழங்கள் அதிகமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.

அதே பானை போன்ற வட்ட வடிவ தொப்பை இருப்பவர்கள் ஜீரண மண்டலத்தை சீராக்க வேண்டும்.

அதிக அளவிலான பச்சைக் காய்கறிகளை உண்ண வேண்டும். சாலட், தானியங்கள், பழங்கள் ஆகியவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.