Home பெண்கள் உடல் கட்டுப்பாடு என்ன! ஒரே நாளில் தொப்பையைக் குறைக்க முடியுமா? அதெப்படி?…

என்ன! ஒரே நாளில் தொப்பையைக் குறைக்க முடியுமா? அதெப்படி?…

26

உடல் எடையைக் குறைப்பதற்கு அதிக அளவிலான முயற்சியும் அர்ப்பணிப்பும் தேவை. அதிலும் குறிப்பாக, எடையைப் பராமரிப்பதில் நம்முடைய உணவுப்பழக்கமும் உடற்பயிற்சியும் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஜீரண மண்டலத்தின் செயல்பாடுகளை முறைப்படுத்திக் கொண்டாலே எடை கூடுதல், தொப்பை போன்ற தொல்லைகள் ஏதும் இருக்காது.

ஒரே நாளில் உங்கள் தொப்பையைக் குறைப்பதற்கான வழிகள் சில உண்டு.

ஜீரண மண்டலத்தை சீராக்குவதற்கான டீயைத் தயாரித்துக் குடிக்கலாம்.

சிறிய துண்டு இஞ்சியை எடுத்துக் கொண்டு, ஒரு கப் தண்ணீரில் போட்டு, சிறிது டீத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்தால் மெட்டபாலிசம் டீ ரெடி. இது ஜீரண மண்டலத்தைச் சீராக்குவதோடு, உப்பு மற்றும் சர்க்கரை சாப்பிடுவதை தானாகவே குறைத்துவிடும்.

நாள் முழுக்க வெறுமனே தண்ணீர் குடிப்பதைவிட, 8 கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் துருவிய இஞ்சியையும், நறுக்கிய வெள்ளரிக்காய், நறுக்கிய எலுமிச்சை துண்டுகள், கொஞ்சம் புதினா ஆகியவற்றைச் சேர்த்து ஊற வைத்துக் குடிக்க வேண்டும்.

காலையில் எழுந்தவுடன் யோகா, உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.

சரிவிகித உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. கார்போஹைட்ரேட் உணவுகளை முற்றிலுமாகத் தவிர்த்தல் வேண்டும். குறிப்பாக, வேகவைத்த காய்கறிகள், வாழைப்பழங்கள், ஸ்ட்ராபெரி, சிட்ரஸ் பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

உணவு நேரங்களுக்கு இடையில், சிறிய அளவில் ஆரோக்கியமான மீல்ஸ் எடுத்துக் கொள்வது நல்லது. சாலட், கிரீன் டீ ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். அப்படி எடுத்துக் கொள்ளும்போது, மதிய உணவு அதிகமாக எடுத்துக் கொள்வது குறையும்.

கேக், குக்கீஸ்களை கையில் தொடவே கூடாது.
திடீரென பசித்தால் பழங்களைச் சாப்பிடுங்கள். பப்பாளியும் அன்னாசிப்பழமும் எடுத்துக் கொள்வது தொப்பையைக் குறைக்க உதவும்.

டார்க் சசாக்லேட் சாப்பிடுவதும் உங்கள் உடல் பருமனைக் குறைக்க உதவி செய்யும்.