Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உடற்பயிற்சி செய்தால் தசைகளை விரைவில் விரிவுபடுத்தலாமா..? இத முதல்ல படிங்க..!

உடற்பயிற்சி செய்தால் தசைகளை விரைவில் விரிவுபடுத்தலாமா..? இத முதல்ல படிங்க..!

31

தசைகளை விரிவுபடுத்துவதென்பது இன்றைய இளைஞர்களால் அதிகம் விரும்பப்படும் ஒன்று. அதனால் அடிக்கடி உடற்பயிற்சி நிலையங்களுக்கு செல்வது மட்டுமல்லாது விரைவில் தசைகளை விருத்தி செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறார்கள்.

வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் உடற்பயிற்சி செய்தால் தசைகளை விரைவில் விரிவுபடுத்த முடியும் என்ற எண்ணமே இதற்கு முக்கிய காரணம். ஆனால் அவ்வாறு செய்வதுச ரியா? தவறா?

இதன் உண்மைத் தன்மைகளை தெரிந்து கொள்ள கட்டாயம் இதைப் படியுங்கள்!

தசைகள் விரிவுபடுத்த செய்யும் உடற்பயிற்சிகளை வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் செய்தால் தசைகளுக்கு வலிவும், வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைக்கும் என்று நினைத்து பலரும் அதை பின்பற்றுகின்றனர். ஆனால் இது தவறானது.

இம் மாதிரியான பயிற்சிகளை மிகவும்மெதுவாக செய்ய வேண்டும். உதாரணமாக குனிந்து நிமிர்வது, இடுப்பு தசைகளை முறுக்கும் பயிற்சிகள், மற்றும் குனிந்து விரல்களால் பாதங்களை தொடுவது முதலான பயிற்சிகளை வேகமாகச் செய்யும் போது தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு வலியும், தசைநார் கிழிதல் முதலான மோசமான விளைவுகளும் ஏற்படும்.

ஆகவே தசைகளை தளர்வாக வைத்துக் கொண்டு மெதுவாக ஆனால் திரும்ப, திரும்ப செய்யும் போது தசைகளுக்கு வலிவும், பொலிவும் வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைக்கும்.

வேகமாக செய்ய வேண்டிய பயிற்சிகளை வேகமாகவும், நிதானமாக செய்ய வேண்டிய பயிற்சிகளை மெதுவாகவும் செய்ய வேண்டும். எந்த பயிற்சியாக இருந்தாலும் பயிற்சியாளரில் அனுமதி பெற்ற பின்னரே செய்ய வேண்டும். ஏனெனில் உங்களின் உடல் நிலைக்கு ஏற்றபடியான பயிற்சிகள் எது என்று பயிற்சியாளரால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

உங்கள் விருப்பத்துக்கு ஏற்ற உடற்பயிற்சிகளை தெரிவு செய்து செய்வதை தவிருங்கள்