Home ஜல்சா இரண்டு பிறப்புறுப்புடன் பிறந்த பெண் படும் கஷ்டத்தை நீங்களே பாருங்க…

இரண்டு பிறப்புறுப்புடன் பிறந்த பெண் படும் கஷ்டத்தை நீங்களே பாருங்க…

101

ஒரு பெண் பிறக்கும்போதே இரண்டு பிறப்புறுப்புடன் பிறந்தால், நிஜ வாழ்க்கையில் அவள் என்ன மாதிரியான கஷ்டங்களை சந்திக்க நேரிடும் என்பது பற்றிய ஒரு பெண்ணின் உண்மைக்கதை இது.

கேட்பதற்க வேண்டுமானால் நமக்கு சிரிப்பாகவோ அல்லது அருவருப்பாகவோ இருகு்கலாம். ஆனால் உண்மையில்அந்த பெண் இதனால் என்னென்ன மாதிரியான பிரச்னைகளை சந்தித்திருப்பாள் என்று கொஞ்சம் நினைத்துப் பாருங்களேன்.

அமெரிக்க பெண் கிறிஸ்டா
அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டாவுக்கு வயது 32. இவர் பிறக்கும்போதே இரண்டு பிறப்புறுப்பும் இரண்டு கருக்குழாயுடனும் பிறந்திருக்கிறார். அதில் ஒன்று மற்ற பெண்களுக்குப் போன்று நார்மல் சைஸ் மற்றொன்று அதைவிட கொஞ்சம் சிறிய அளவிலும் இருக்கிறது. இரண்டும் அருகருகேயே அடுத்தடுத்து இருப்பது போல் அமைந்துள்ளது. அது மட்டுமல்ல, இவருக்கு கருப்பை, கருக்குழாய் ஆகியவையும் இரண்டு இருக்கிறது.

மாதவிலக்கு துயரம்
சாதாரண உடல்கூறுகள் உள்ள பெண்களே மாதவிலக்கு என்றால், வலியால் துடித்துப் போவார்கள். இவருக்கோ இரட்டை பிறப்புறுப்பு இருப்பதால் சாதாரணமாக சிறுநீர் கழிப்பதில் இருந்து எல்லா விஷயங்களிலும் சில தர்ம சங்கடங்கள் இருந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு காலங்களில் வலியால் தரையில் புரண்டு அழுவாராம்.

மருத்துவப் பரிசோதனை
கிறிஸ்டாவின் 12 ஆவது வயதில் மருத்துவப் பரிசோதனையின் போது, இரண்டு கருக்குழாயும் இரண்டு கருப்பையும் இருப்பது கண்டறியப்பட்டது. அப்போதே மருத்துவர்கள் இந்த பெண்ணால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று தெளிவாகக் கூறியிருந்தார்கள்.

குழந்தை பிறக்காது
இவருடைய நார்மல் சைஸில் இருக்கும் பெண்ணுறுப்போடு இணைந்திருக்கும் கருக்குழாய் வழியாக விந்து செல்வதற்கான வழியே கிடையாது. அதனால் உறுதியாக இவரால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று மருத்துவர்கள் கூறியிருந்தார்கள். ஆனால் அப்போது இரண்டு பிறப்பறுப்பு இருப்பது யாருக்கும் தெரியவில்லை. ஏன்… அது கிறிஸ்டாவுக்கே தெரியாதென்றால் பாருங்களுன்.

இரண்டு பிறப்புறுப்பு
கிறிஸ்டா தன்னுடைய முப்பதாவது வயதில் தான் தனக்கு இரண்டு பெண்ணுறுப்பு இருப்பதை அடையாளம் கண்டிருக்கிறார். அது எப்படி என்று சந்தேகம் வருகிறதா?… அதுவரையிலும் இந்த இரட்டை பிறப்புறுப்பின் சதைப்பகுதி போதிய வளர்ச்சி இல்லாமல் இருந்ததுதான் அதற்குக் காரணம்.

கருத்தடை சாதனம்
20 வயதிலேயே திருமணம் முடிந்த கிறிஸ்டா தன்னுடைய கணவரிடம் தன்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்ற விவரத்தை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். அதனால் அவர்கள் உடலுறவின் போது, கருத்தடை சாதனங்கள் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை.

100 முறை கருச்சிதைவு

100 முறை கருச்சிதைவு
இப்படி கருத்தடை சாதனம் பயன்படுத்தாமல் கணவருடன் உறவு கொண்டதால் இயல்பாக உண்டாவது போல், அவ்வப்போது கரு உண்டாகி, கலைந்து கொண்டே இருந்தது. இதுபோல் 100 முறைக்கு மேல் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டிருக்கிறது.

குழந்தை ஏக்கம்
தங்களுக்கு ஒரு குழந்தை இல்லையென்ற கவலை கிறிஸ்டாவுக்கு அவருடைய கணவருக்கும் நிறையவே இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, மாதவிலக்கு தள்ளிப்போன போது, வழக்கமான விரக்தியோடு கருச்சோதனை செய்திருக்கிறார்.

அதில் அவர்களுக்கு பாசிடிவ் ரிசல்ட் காட்ட கணவன், மனைவி இருவரும் அதிர்ந்து போனார்களாம். இருவரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடிக்க அழுகை முட்டிக்கொண்டு வர, இருவரும் மாறிமாறி, அழுகையும் ஆறுதலுமாக இருந்திருக்கிறார்கள். ரிசல்ட் பாசிடிவ் என்றதும் கையால் தரையை ஓங்கி அடித்துக் கொண்டு, சந்தோஷத்தில் கிறிஸ்டா அழுதிருக்கிறார்.

மெடிக்கல் மிராக்கிள்

மெடிக்கல் மிராக்கிள்
மருத்துவர்களால் இது எப்படி சாத்தியம் என்று பெருங்குழப்பத்தில் இருக்கிறார்கள். அதுவும் விந்து செல்ல வாய்ப்பில்லை என்று சொன்ன அந்த இடதுபக்க கருப்பையில் தான் குழந்தை வளர்கிறது. அந்த இடதுபுறம் உள்ள பெண்ணுறுப்பு தான் மிகச்சிறியதாக இருக்கிறது. இப்போது கிறிஸ்டா வயிற்றில் வளரும் குழந்தைக்கு 5 மாதம் ஆகிறது.

பிரசவ குழப்பம்
மருத்துவர்கள் பெருங்குழப்பத்தில் குழந்தையை எப்படி 10 மாதத்துக்குப் பிறகு வெளியே எடுப்பது என்ற விழி பிதுங்குகிறார்கள். சிசோியன் தான் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூற, தான் ஆரோக்கியமாக குழந்தையைப் பெற்றெடுப்பேன் என்றும் அதுவும் தனக்கு சுகப்பிரவசம் ஆக வேண்டும். அதுவும் ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் ஆசை இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

கிறிஸ்டாவும் அவருடைய கணவரும் தங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்கு பெயர் சூட்டி, ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

உலக சுகாதார நிறுவனம்

உலக சுகாதார நிறுவனம்
உலக சுகாதார நிறுவனம் இதுகுறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதாவது இதுபோன்று உலகில் கிட்டதட்ட 3000 பேர் இதுபோன்ற இரட்டைவித சதை வளர்ச்சி கொண்டிருப்பதாகத் தெரிவிக்கிறது. பிறக்கம்போது கருப்பையின் கீழ்ப்பகுதியில் உண்டாகும் ஜவ்வு போன்ற பகுதிஇரண்டாகப் பிரிந்து வளர்ச்சியடையும் பெரும்பாலானோருக்கு இரண்டு கருக்குழாய்கள் உண்டாவதாகவும் மிக அரிதாக சிலருக்கு இரண்டு பிறப்புறுப்புகள் வளர்வதாகவும் தெரிவிக்கிறது.