Home அந்தரங்கம் மனைவியின் “இன்னிக்கு வேணாம்ங்க” இந்த வார்த்தைக்கு பின் அவ்வளவு அர்த்தம் இருக்கா.?

மனைவியின் “இன்னிக்கு வேணாம்ங்க” இந்த வார்த்தைக்கு பின் அவ்வளவு அர்த்தம் இருக்கா.?

361

கணவன் மனைவி உறவு:எவ்வளவு வேலை இருந்தாலும் தாம்பத்தியத்திற்கு என்று நேரத்தை கணவன் மனைவி ஒதுக்கிக் கொள்ள வேண்டும். மனைவிக்கு கணவனிடம் பிடிக்காத விஷயங்கள் இருந்தால் அன்பாகச் சொல்லி திருத்த வேண்டும். கணவனும் மனைவிக்குப் பிடிக்காத பழக்கங்களை மாற்றிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். ஒருவரையொருவர் புரிந்து கொள்வது… பிரச்னைகளை வெளிப்படையாகப் பேசிக் களைவது… சுமுகமாக நடந்து கொள்வது என தம்பதியர் இருந்தால் பிரச்னைகள் எப்பொழுதும் எட்டிக்கூடப் பார்க்காது.

ஆனால், தாம்பத்தியம் என்பது ஒருவரின் மனநிலை சார்ந்தது. அது நிறைவேறவில்லை என்றால் இணை மீது வெறுப்பும் கோபமும்தான் ஏற்படும். கணவனோ, மனைவியோ ஆர்வம் இல்லையென்றால் அதற்கான காரணத்தைப் பக்குவமாகச் சொல்லிப் புரிய வைப்பது அவசியம். சிலருக்கு உடல் சோர்வாக இருக்கும். அலுவலக வேலையின் காரணமாகக் கூட செக்ஸில் ஆர்வம் குறையலாம். காரணம் எதுவாகவும் இருக்கட்டும்… தம்பதியிடையே நெருக்கத்தை குறைத்து, இருவரையும் நிரந்தரமாகப் பிரிக்கக் கூடிய சக்தி தம்பதிய மறுப்புக்கு உண்டு.

தாழ்வு மனப்பான்மை, வெறுப்பு, கோபம், மன உளைச்சல், ஒருவருக்கொருவர் குற்றம் கண்டுபிடித்தல் இப்படி பிரச்னைகள் வளர்ந்து கொண்டே போகும். தாம்பத்திய உறவில் ஏற்படும் இப்பிரச்னை காலப்போக்கில் இருவரையும் பிரித்துவிடும். திருமணத்தைத் தாண்டிய உறவு வைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை அதிகமாக்கிவிடும். அந்த மாதிரியான ஆசையை வெளிப்படையாக சொல்லத் தயங்குவதால் கூட இது போன்ற சிக்கல்கள் ஏற்படும். வீட்டில் சண்டையிடும் பெற்றோரைப் பார்க்கும் பிள்ளைகளுக்கு திருமண உறவின் மீதே வெறுப்பு உண்டாகிவிடும்.

கணவன் மனைவி மனம்விட்டுப் பேசி, விட்டுக் கொடுத்து, ஒருவரையொருவர் புரிந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும். ஆண்கள் உடல் பிரச்னைகள் இருந்தால் மருத்துவரிடம் பரிசோதித்து, சரி செய்து கொள்ள வேண்டும். பெண்கள் கோபம், மனக்குறைகளுக்கு தாம்பத்தியத்தை ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது. அந்த விஷியத்திற்கு மறுப்புச் சொல்லி, ஆணின் தன்னம்பிக்கையை மனைவி குலைத்துவிடக் கூடாது.