Home சமையல் குறிப்புகள் திண்டுக்கல் தலப்பாக்கட்டி மிட்டன் பிரியாணி

திண்டுக்கல் தலப்பாக்கட்டி மிட்டன் பிரியாணி

80

பிரியாணி என்றாலே முதலில் மனதில் நியாபகம் வருவது திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணிதான். தமிழகத்தில் மிகப் பிரபலமான ரெசிபி. இன்று திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி எப்படி செய்யலாம் எனப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மட்டன் – 1/2 கிலோ
சீரக சம்பா அரிசி – 3 கப்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 3
தக்காளி – 2 ( நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
தனியாதூள் – 2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
கொத்தமல்லி தழை – 1/4 கப் ( நறுக்கியது)
புதினா இலை – 1/4 கப் ( நறுக்கியது)
தண்ணீர் – 4.5 கப்

பிரியாணி மசாலா பொடி

பட்டை – 4 இன்ச்
சோம்பு – 1.5 டீஸ்பூன்
மராத்தி மோக்கு -5
கல்பாசி – 5
சீரகம் – 2 டீஸ்பூன்
கிராம்பு – 5
ஏலக்காய் – 5
நட்சத்திர சோம்பு – 1

செய்முறை

அரிசியை தண்ணீரில் கழுவி தனியாக எடுத்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

அதனுடன், தக்காளி சேர்த்து நன்றாக மசியுமாறு வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாதூள் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்னர், மட்டன், 1 கப் தண்ணீர் ஊற்றி கிளறி விட்டு 8 விசில் விட்டு தீயை குறைத்து 15 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கி விட வேண்டும்.

விசில் போனதும், குக்கரை திறந்து தண்ணீர் இருந்தால் அதை வற்ற வைத்து அரிசியைப் போட்டு நன்கு கிளறி, பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தண்ணீர் கொதித்ததும் குக்கரை மூடி 1 விசில் விட்டு , தீயை குறைத்து 5 நிமிடம் வேகவைத்து இறக்கினால், திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி ரெடி!