Home பெண்கள் உடல் கட்டுப்பாடு தினமும் ஒரு மணி நேரம் செலவழித்தால் போதும் 15 நாட்களில் தொப்பை குறையும்!

தினமும் ஒரு மணி நேரம் செலவழித்தால் போதும் 15 நாட்களில் தொப்பை குறையும்!

23

அன்றாட இயந்திர உலகத்திற்குள் நுழைந்து விட்டாள் அதற்கடுத்து அவனுக்கு ஓய்வு என்பதே இருக்காது. தினமும் ஏதாவது ஒரு இலக்கு இருக்கும் அதைத் தேடி, அதை அடைய தினமும் ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும். நடுவில் சின்ன தடங்கள் ஏற்பட்டாலும் இயந்திரத்தில் சுழல முடியாமல் சிக்கித் தவிக்க நேர்கிறது. மனதளவிலும் உடல் அளவிலும் அவர்கள் சந்திக்கிற மாற்றங்கள் உங்களது அன்றாட வேலையை சில நேரத்தில் குலைத்துவிடக்கூடியது என்று சொன்னால் அது மிகையாகாது. இன்றைக்கு பல நோய்கள் உடலில் ஏற்படுவதற்கு முக்கிய வழியாக காண்பிக்கப்படுவது, அல்லது குற்றம்சாட்டப்படுவது தொப்பை தான்.

தொப்பையை குறைக்க வேண்டும் என்று விதவிதமாக முயன்று கொண்டிருக்கிறார்கள் நம் மக்கள். இந்நிலையில் தொப்பையை குறைக்க ஒர் வழி…. இது மிகவும் எளிமையாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்காதீர்கள். கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும் ஆனால் நிரந்தர பலன் உங்களுக்கு கிடைக்கக்கூடும்.

தொப்பை : தொப்பையின் அளவு அதிகரிக்க அதிகரிக்க அவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் ஏரளமாக இருக்கின்றன. சிலருக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் ஆகியவையும் வரக்கூடும். அதே போல பென்சல்வேனியா மாநில பல்கலைக்கழகத்தில் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் ஸ்லீப் மெடிசின் என்று ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது அதில், தொப்பை அதிகமிருப்பவர்களுக்கு பகல் நேரத்தில் தூக்கம் வருவது, எப்போதும் சோர்வாக உணர்வார்கள் என்று கூறப்பட்டிருந்தது. தொப்பை ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

மெட்டபாலிசம் : உங்கள் வயதிற்கேற்ப உங்கள் உடலின் மெட்டபாலிசம் இயக்கத்தில் மாற்றங்கள் உண்டாகும். அவை குறைந்தால் உணவு சரியாக செரிக்காமல் உங்களுக்கு தொப்பை ஏற்படலாம். ஆண்களை விட பெண்களுக்கு தொப்பை வரும் வாய்ப்புகள் அதிகம். சிலர் என்ன தான் உணவு உட்கொண்டாலும் ஒல்லியாகவே இருப்பார்கள் சிலர் ஒன்றுமே சாப்பிட மாட்டார்கள் குறிப்பாக கொழுப்பு நிறைந்த உணவுகளை எல்லாம் கவனமாக தவிர்ப்பார்கள் ஆனால் இவர்களுக்கு தொப்பை இருக்கும். இதன் காரணம் உடலில் செயல்படுகிற மெட்டபாலிசம் தான்.

ஜெனிட்டிக் : மரபணு ரீதியாக உங்கள் உடலில் இருக்ககூடிய சில செல்களும் உங்களின் தொப்பைக்கு காரணமாக அமைந்திடலாம். உங்களின் தாத்தா பாட்டி, பெற்றோர் இவர்கள் வழியாக கூட உங்களுக்கு தொப்பை ஏற்படலாம்.

இரண்டு வகை : பொதுவாக மனிதர்களில் இரண்டு வகை உடல் அமைப்புகள் இருக்கின்றன. அவை பியர் ஷேப்டு பாடி மற்றும் ஆப்பிள் ஷேப்டு பாடி என்று சொல்வார்கள். பியர் ஷேப்டு பாடி என்பவர்களுக்கு உடலின் இடுப்புக்கு கீழே கொழுப்பு சேரும். இவர்களுக்கு பின்பகுதி, இடுப்புப்பகுதி பெரிதாகிக் கொண்டே போகும். ஆப்பிள் ஷேப்டு பாடி என்றால் தொப்பை பெரிதாக இருக்கும். பிறரை விட இவர்களுக்கு தொப்பை வேகமாகவும் கூடும்.

வாழ்க்கை முறை : தொப்பை ஏற்படுவதற்கு எழுபது சதவீத காரணம் உங்களது அன்றாட வாழ்க்கை முறை தான். உடற்பயிற்சி ஏதும் செய்யாமல், பெரும்பாலான நேரம் ஒரேயிடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, நொறுக்குத் தீனிகளை அதிகம் விரும்பி உண்பது, தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருப்பது போன்றவை காரணங்களாக சொல்லப்படுகிறது. இதைத் தவிர அதிகமான உணவுகளை அளவுக்கு மீறி ருசிக்காக எடுத்துக் கொள்வது, நீங்கள் உட்காரும் முறை கூட தொப்பைக்கு காரணியாக இருக்கிறது.

ஸ்ட்ரஸ் : தொப்பை ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பது ஸ்ட்ரஸ். ஆம், ஸ்ட்ரஸ் அதிகமிருந்தால் கூட உங்களுக்கு தொப்பை கூடும். இது கொரிஸ்டால் அளவை அதிகரிக்கும் அதே போல மார்பகப் புற்றுநோய், தூக்கமின்மை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதயம் தொடர்பான குறைபாடுகள் ஆகியவை இருந்தாலும் அவை உங்கள் தொப்பையை அதிகரிக்கக்கூடும். பெண்களுக்கு மெனோபாஸ் நேரத்திலும் தொப்பை அதிகரிக்கக்கூடும்.

உடற்பயிற்சி : தொப்பையை குறைக்க வேண்டும், உடல் எடையை குறைக்க வேண்டும் என்று சொன்னாலே சர்க்கரை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும், கொழுப்பு நிறைந்த உணவுகள் தொடவே கூடாது, ப்ரோட்டீன் உணவுகள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லப்படுகிறது. அதோடு பல உணவுப்பட்டியல், விதவிதமான டயட் முறைகளும் கடைபிடிக்கப்படுகின்றன. இவற்றைத் தாண்டி உணவுகளை விட முக்கியமான ஒரு விஷயம் இங்கே இருக்கிறது அவை உடற்பயிற்சி. தினமும் அரை மணி நேரம் இதைச் செய்தால் கூட போதும் சிறந்த பலன் உங்களுக்கு கிடைக்கும்