Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உங்கள் தொடை அழகை அதிகரிக்க செய்யவேண்டியது இதுதான்

உங்கள் தொடை அழகை அதிகரிக்க செய்யவேண்டியது இதுதான்

36

உடல் அழகு:உடல் எடை அதிகரிப்பு தான் இன்றைக்கு பலரது தலையாய பிரச்சினையாக இருக்கிறது. பெண்களுக்கு இடுப்பு மற்றும் தசைப்படுதிகளிலும் ஆண்களுக்கு வயிற்றுப் பகுதிகளிலும் தான் அதிகப்படியான தசை சேர்ந்திடும்.

தொடர்ந்து நீங்கள் அதிகப்படியான கலோரி எடுக்கும் பட்சத்தில் அவை உடல் முழுவதும் சேர்ந்திடும்.

நாளடைவில் இடுப்புப் பகுதி மட்டும் பெரிதாவதற்கு அதுவே காரணமாக அமைந்திடும். அதை கரைக்க வேண்டும் என்று சொன்னால் நீங்கள் தொடர்ந்து நிறைய மெனக்கடல்களை எடுக்க வேண்டும். இங்கு தொடை, மற்றும் இடுப்புப் பகுதி ஆகியவற்றை குறைக்க சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

உடற்பயிற்சி
உடல் எடையை குறைக்க வேண்டும். குறிப்பாக குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் தசையை மட்டும் குறைக்க வேண்டும் என்று சொன்னால் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உடற்பயிற்சிகள் மாறிடும்.

கார்டியோவஸ்குலர் பயிற்சி
தொடையில் உள்ள சதையை குறைக்க கார்டியோவஸ்குலர் பயிற்சி என்பது மிகவும் சிறந்ததாகும். இது தொடை தசையைத் தவிர முழு உடலை குறைக்கவும் பயன்தரும். இதற்கு ஒரு நாளைக்கு அரைமணி நேரம் செலவழித்தாலே போதும். தொடர்ந்து செய்து வர உடலில் கீழ்பாகம் குறையும்.

ஜாக்கிங்
இது மிகவும் எளிமையான ஒன்று. இந்த பயிற்சியை தொடர்வதால் தசையை குறைக்க உதவுவதுடன் தொடை ஷேப் பெறவும் பயன்படுகிறது.

ட்ரட்மில்லில் ஜாக்கிங் பயிற்சியை மேற்கொள்வதை விட சமமான தளத்தில் வெளியில் ஓட்டப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இது உங்கள் மூச்சினையும் சீர் செய்யும்.

ஏரோபிக் உடற்பயிற்சி
ஏரோபிக்ஸ் கால்களுக்கு மட்டுமல்ல முழு உடலுக்கு நல்லதாகும். முழு உடலுக்கு கொழுப்பை குறைக்க உதவிடும். இதுவும் கால்களுக்கு வலுவூட்டும் என்பதால் தொடை தசை குறைந்திடும்.

நடைபயிற்சி மேற்கொள்வது, படிகள் ஏறிச்செல்ல லிஃப்ட் பயன்படுத்தாமல் இருப்பது, நடனம் ஆகியவை இவற்றில் சேர்ந்திடும்.

இந்த பயிற்சியை குறைந்தது ஒரு நாளைக்கு 45 நிமிடங்களாவது நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பயிற்சிகளை தொடர்ந்து 7 நாட்கள் செய்து பாருங்கள் பாரிய மாற்றங்களை உணர முடியும்.