Home குழந்தை நலம் குழந்தைகளுக்கு திடப் பொருட்களை அறிமுகம் செய்தல்

குழந்தைகளுக்கு திடப் பொருட்களை அறிமுகம் செய்தல்

37

அநேக பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு, திட உணவு கொடுக்கத் தொடங்க சரியான நேரம் எது என அறிய ஆவலாக இருக்கிறார்கள். குழந்தை இரவு முழுவதும் நித்திரை செய்ய உதவி செய்வதற்காக, குறித்த காலத்துக்கு முன்னதாகவே தொடங்கும்படியாக வேறு பெற்றோர்களிடமிருந்து அவர்கள் ஆலோசனையைப் பெற்றுக்கொள்கிறார்கள். தாத்தா பாட்டிமார் அதைவிரைவாக, முதல் மாதத்திலேயே தொடங்கும்படி சொல்லுவார்கள்; ஏனென்றால் அவர்கள் கடந்த காலங்களில் அப்படித்தான் செய்திருக்கிறார்கள். ஆயினும், குறித்த காலத்துக்கு வெகு முன்னதாகவே திட உணவுகள் கொடுப்பது பெரும்பாலும் தீங்கற்றதாகக் கருதப்பட்டாலும், உங்கள் குழந்தையின் உடல் ஏறக்குறைய ஆறு மாதங்கள் வரை திட உணவைப் பெற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்று மருத்துவ ஆராய்ச்சி காண்பிக்கிறது. உலக நல சங்கத்தின் கூற்றுப்படி, ”சிசுக்களுக்கு முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மாத்திரம் ஊட்டுவது தான் அவர்களுக்கு உணவூட்டுவதற்கு அநுகூலமான வழியாகும். அதன் பின்னர், இரண்டு வயது அல்லது அதற்கும் மேலும், சிசுக்கள் நிறைவு செய்யும் உணவுடன், தொடர்ச்சியாகத் தாய்ப்பாலும் பெற்றுக்கொள்ள வேண்டும்”.
ஆறு மாதங்கள் பூர்த்தியாவதற்கு முன்னர், உங்கள் குழந்தையின் சமிபாட்டுத் தொகுதி திட உணவுகளைக் கையாளக்கூடிய அளவில் முதிச்சியடைந்திருக்காது. உங்கள் குழந்தையின் நாக்கு, உணவு போன்ற பிற பொருட்களை வெளியே தள்ளும்; இது நாக்கின் அனிச்சைச் செயல் என்று அழைக்கப்படுகிறது மற்றும் இது அந்நிய பொருட்கள் உங்கள் சிசுவின் தொண்டையில் சிக்கிக் கொள்வதிலிருந்து பாதுகாப்பளிக்கிறது. குடல்களில் சமிபாட்டுக்குத் தேவையான நொதிகள் காணப்படமாட்டாது. சில குறிப்பிட்ட உணவுகளை சமிபாட்டுத் தொகுதியினால் கையாளமுடியாது; ஆறு மாதங்கள் பூர்த்தியாவதற்கு முன்னர் திட உணவுகளைக் கொடுப்பது, உணவு ஒவ்வாமைக்கான அல்லது சகிப்புத்தன்மையின்மை போன்றவற்றிற்கான அதிகளவு ஆபத்துக்கு வழி நடத்தும். அத்துடன், ஆறு மாதங்கள் பூர்த்தியாவதற்கு முன்னர் உங்கள் குழந்தைக்கு திட உணவு கொடுக்கத் தொடங்குவது அடிக்கடி தாய்ப்பாலூட்டும் சமயங்களைக் குறைத்துவிடும். அதனால் தாய்ப்பால் சுரப்பதும் குறைந்துவிடும்.
உங்கள் குழந்தை திட உணவு உட்கொள்ளும் நிலைக்குத் தயாராவதற்கு முன்பே நீங்கள் திட உணவு கொடுத்தால், அவன் அதை உண்ண மறுத்து விடுவான். இது, எதிர்காலத்தில் உணவு உண்ணும் நேரத்தில் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளிவிடும். அத்துடன் உங்கள் குடும்பத்தில் உணவு ஒவ்வாமைக்கான ஒரு பலமான சரித்திரம் இருக்குமானால், உங்கள் பிள்ளைக்கு திடமான உணவுகள் கொடுக்கத் தொடங்குவதற்குமுன் ஆறு மாதங்கள் பூர்த்தியாகும்வரை காத்திருப்பது பெரும்பாலும் நல்ல யோசனையாக இருக்கும்.
ஆயினும், திட உணவுகள் கொடுக்கத் தொடங்க நீண்ட காலம் காத்திருக்கவேண்டாம். ஆறு மாதங்களுக்கு மேற்பட்ட குழந்தைகள் தங்கள் வழிகளில் ஊறிப்போய் விடுவார்கள் மற்றும் ஒத்துப்போவதில் குறைபடுபவர்களாயிருப்பார்கள். ஆகவே, அவர்கள் புதிய நறுஞ்சுவை மற்றும் திட உணவின் தன்மை என்பவற்றை ஏற்றுக்கொள்ள விரும்புவதிலும் குறைவுபடுபவர்களாக இருப்பார்கள். இந்தப் பருவத்தில் திட உணவை மெல்லுதல் மற்றும் விழுங்குதலைக் கற்றுக்கொள்வதை எதிர்க்கக்கூடியவர்களாயிருப்பார்கள். ஆறு மாதங்களுக்கு மேலாகத் திட உணவுகளைக் கொடுக்காது தாமதிப்பது, உணவு ஒவ்வாமைகள், ஆஸ்துமா, அல்லது எக்ஸிமா போன்ற நோய்களிலிருந்து உங்கள் குழந்தையைப் பாதுகாக்கும் என்பதற்கு தற்போது எந்த அத்தாட்சியும் இல்லை.
உங்கள் குழந்தை திட உணவு உண்ணத் தொடங்கத் தயாராயிருக்கிறான் என்பதைக் காட்டும் சில அறிகுறிகள் பின்வருமாறு:
அவனைத் தூக்கி நிறுத்த வைக்கும்போது அவனால் தலையை மேலே தூக்கி வைக்கமுடியும். இந்த சமயத்தில் அவனுக்கு வடிகட்டப்பட்ட உணவுகளைக் கொடுக்கமுடியும். தன் தலையைச் சரிவர மேலே தூக்கமுடியாத குழந்தைகளுக்கு வடிகட்டப்பட்ட உணவுகளைக் கொடுக்கவேண்டாம். அத்துடன், உங்கள் குழந்தைக்கு தலையணைகள் மற்றும் கம்பளங்களால் முட்டு கொடுத்தும் அவனால் ஒரு உயர்ந்த கதிரையில் கொஞ்சம் கூட இருக்கமுடியவில்லை என்றால் அவனுக்கு வடிகட்டப்பட்ட உணவுகள் கொடுக்கத் தொடங்குவதை நீங்கள் ஒத்தி வைக்க விரும்பலாம். குழந்தை தானாகவே எழுந்து இருக்க முடியும்போது, பெரும்பாலும் ஏழு மாதங்களளவில், மேலும் கட்டியான உணவுகள் கொடுக்கத் தொடங்கலாம்.
நாக்கை வெளியே தள்ளும் அனிச்சைச் செயல் மறைந்துவிட்டது. பால் கலவையுடன் அல்லது தாய்ப்பாலுடன் மிகச் சிறிதளவு அரிசிச் சீரியல் கலந்து உங்கள் குழந்தையின் வாயில் வைக்க முயற்சிக்கவும். நீங்கள் பல முறைகள் முயற்சி செய்த பின்பும் உங்கள் குழந்தையின் நாக்கு உணவை வெளியே தள்ளினால், நாக்கின் அனிச்சைச் செயல் இன்னும் இருக்கிறது என்பதை அர்த்தப்படுத்துகிறது. திட உணவை அறிமுகப்படுத்துவதற்கு இன்னும் கொஞ்சக் காலம் நீங்கள் பொறுத்திருக்க வேண்டும்.
உங்கள் குழந்தையால் தன் நாக்கை உபயோகித்து உணவை வாயின் முன்பக்கத்திலிருந்து பின் பக்கத்துக்குத் தள்ள முடிகிறது. முதலில் இதற்குக் கொஞ்சம் பயிற்சி தேவைப்படும்.
உங்கள் குழந்தையால் தன் கீழ் உதட்டை அசைக்க முடிகிறது. இந்தச் செயலை ஒரு கரண்டியிலிருந்து உணவை எடுக்க உபயோகிக்கிறான்.
உங்கள் குழந்தை உணவு உண்பதில் அக்கறை காண்பிக்கிறான். அவன் உங்கள் முள்ளுக்கரண்டியைப் பறித்தெடுக்கக்கூட்ம், உங்கள் உணவை எடுக்கிறான் அல்லது உங்கள் உணவைச் சுட்டிக்காட்டுகிறான், மற்றும் நீங்கள் உணவு உண்ணும்போதெல்லாம் ஆர்வத்துடன் உங்களை அவதானிக்கிறான்.
திட உணவை அறிமுகப்படுத்துதல்
குழந்தையின் முதல் உணவு ஒரு மிக முக்கியமான நிகழ்ச்சி! ஆனால், உயரமான கதிரையை இழுத்துப்போட்டு வீடியோ படக்கருவியைத் தயார் செய்வதை விட அதிகமான காரியங்கள் செய்யவிருக்கின்றன. இது சந்தோஷமான மற்றும் மகிழ்ந்தனுபவிக்கும் நிகழ்ச்சியாவதை நிச்சயப்படுத்திக்கொள்ள நீங்கள் விரும்பினால், முதல் உணவின் நேரத்தையும் சூழல் அமைப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
எல்லாவற்றிற்கும சரியான நேரமே முக்கியம்
எல்லாவற்றிற்கும் முதலாக, திட உணவு கொடுக்கும் முதற் சில மாதங்கள், உங்கள் குழந்தை உணவின் சுவை மற்றும் தன்மையை பழக்கப்படுத்திக்கொள்ளும் காலப்பகுதி என்பதை நினைவில் வையுங்கள். தாய்ப்பால் அல்லது புட்டிப்பால் குடித்துக்கொண்டிருக்கும்வரை உங்கள் குழந்தை உண்ணும் உணவின் சரியான அளவு முக்கியமில்லை. உண்மையில், முதலில் சில நாட்களுக்குக் கொடுக்கப்படும் உணவு ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டியளவே இருக்கும்
உங்கள் குழந்தை உற்சாகமாக மற்றும் சந்தோஷமாக, மற்றும் பரபரப்பற்று அல்லது அதிக களைப்படையாது இருக்கும் ஒரு நேரத்தைத் தெரிவு செய்யுங்கள். உணவூட்டுதல் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும். அதனால் மற்ற வேலைகளில் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்கும் நேரத்தைத் தெரிவு செய்யாதிருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். ஒரு நாளில் ஒரு முறை தான் பெரும்பாலும் உங்கள் குழந்தை பசியாயிருப்பான் என்றால், அந்த நேரத்தை நீங்கள் தெரிவு செய்ய விரும்பலாம்.
தொடங்குதல்
உங்கள் குழந்தையின் பசியைத் தூண்டுவதற்காக கொஞ்சம் கலந்த பால் அல்லது தாய்ப்பால் கொடுப்பதில் தொடங்குங்கள். அதனால் புதிய அனுபவத்தைச் சகிப்பதற்கு அவன் அதிக பசியுள்ளவனாக இருக்கமாட்டான். அதிகளவு கலந்த பால் அல்லது தாய்ப்பாலை அவனுக்குக் கொடுக்கவேண்டாம். அது அவனுக்குப் பசியைக் கட்டுப்படுத்திவிடும்.
உங்கள் குழந்தைக்கு ஒரு தேக்கரண்டியின் காற்பங்கு உணவு கொடுக்கவும். அவன் உதடுகளுக்கிடையில் கரண்டியை விட்டு அவன் எப்படி செயற்படுகிறான் என்று பார்க்கவும். மேலுமான உணவுக்காக உங்கள் குழந்தை வாயைத் திறக்கலாம். இந்த நிலைமையில் அடுத்த வாய் உணவை அவன் இலகுவாக விழுங்குவதற்காக இன்னும் உள்ளே தள்ளி வைக்கலாம். மறுபட்சத்தில், உணவு வெளியே தள்ளப்படலாம். இது தொடர்ந்து சம்பவித்தால், உங்கள் குழந்தை திட உணவு உண்ணத் தயாரான நிலையில் இல்லை என்பதைக் கருத்தில் கொள்ளவும். ஒரு வாரம் அல்லது அதற்குப் பின்னர் திரும்பவும் முயற்சித்துப் பார்க்கவும். உங்கள் குழந்தை திட உணவு உண்ணத் தாயார் நிலையிலிருந்தால் , அவன் வெளியே துப்பிவிடும் உணவைவிட அதிக் உணவை உட்கொள்ளத் தொடங்குவான்.
முதற் சில நாட்களுக்கு ஒரு நாளுக்கொரு முறை திட உணவைக் கொடுக்கவும். உங்கள் குழந்தை இதற்குப் பயிற்றுவிக்கப்பட்டால், இன்னொரு உணவைப் புதிதாகக் கொடுக்கவும், சில நாட்களின்பின் மூன்றாவது நாளாந்த உணவை அறிமுகப்படுத்தவும்

Previous articleநம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
Next articleஏழே நாட்களில் வெள்ளையாக ஆசையா..? இத ட்ரை பண்ணுங்க..!