Home காமசூத்ரா காதல் உடலுறவு எனும் அற்புதக் கலை

காதல் உடலுறவு எனும் அற்புதக் கலை

21

சரியான நேரத்தில் சரியான நபரிடமிருந்து சரியான இடத்தில் ஸ்பரிசம் கிடைக்கப்பெற்றால் உடலுறவு அனுபவம் என்றென்றும் மறக்க முடியாததாகிப் போகும். நமக்கு நம் உடலைப் பற்றி மட்டுமே தெரியும், நமது எண்ணங்கள் மற்றும் உணர்வுகளால் தாக்கமடையக் கூடிய ஆற்றல்களைப் பற்றி அதிகம் தெரியாது. பாலுறவு என்பது, சொற்களைப் பயன்படுத்தாமல் நம் காதலை, அன்பை உன்னதமாக வெளிப்படுத்தும் சிக்கலான ஒரு வழி.

வெறும் பாலுறவு எனும்போது, அது உடல் சார்ந்த திருப்தியை மட்டுமே அளிக்கிறது, அதாவது உடல் பசியைத் தீர்த்துக் கொள்வது எனலாம். ஆனால் காதலால் கலப்பது என்பது, இருவரின் மனமும், உடலும் இதயமும் கலந்து பின்னிப் பினைவது. காதலில் கலப்பது என்பதில் வெறும் உடலுறவைப் போல ஒரே தன்மை கொண்டு சலிப்பை ஏற்படுத்துவதல்ல, ஏனெனில் இதில் உங்கள் உள்ளுணர்வே உங்களை இயக்கும், ஆகவே இதில் சந்தேகங்களுக்கோ கவலைகளுக்கோ இடமில்லை. வாழ்நாள் முழுதும் உங்கள் இணையரின் இன்பத் தூண்டல் புள்ளிகளைப் பற்றி நீங்கள் மேலும் மேலும் தேடிக் கண்டறிந்து கொண்டே இருக்கலாம், புதிது புதிதாகக் கற்றுக்கொண்டே இருக்கலாம், ஆனால் வெறுப்போ சலிப்போ ஏற்படவே ஏற்படாது. ஒயின் பழையதாகும்போது தான் இன்னும் சுவை கூடும் என்பார்கள், அதே போல, காதலும் காதலின்பால் ஊற்றெடுக்கும் காமமும் கூட நாள் செல்லச் செல்ல மென்மேலும் வளரக்கூடியது.

காதலில் கலப்பது என்றால் என்ன என்பது பற்றி அறிந்துகொள்ள சில குறிப்புகளை இங்கு காணலாம்:

முதலில், இணையருடன் உறவில் இருப்பது உங்களுக்குப் பிடித்திருக்க வேண்டும். உங்கள் மனத்தடைகள் அனைத்தையும் விட்டுவிடச் செய்யுமளவிற்கு நீங்கள் பாதுகாப்பாக உணர வேண்டும், சிறிதளவு சந்தேகமோ, பொய்யோ இருந்தாலும் கூட காதல் இனிக்காமல் போகக்கூடும்.
உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை உங்கள் இணையரே கண்டுபிடித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். உங்கள் எண்ணங்கள், உணர்வுகளை பேசித் தெரிவிக்க வேண்டும், அவர்கள் உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றி வார்த்தைகளால் கூற வேண்டும்.
நீங்கள் அவரை எந்த அளவிற்குக் காதலிக்கிறீர்கள் என்பதைக் காட்டுவதே உடலுறவு. வெறுமென உடல் பசியைத் தீர்த்துக்கொள்வதல்ல. வேகமாக இருப்பதோ, மெதுவாகச் செயல்படுவதோ பொருட்டல்ல, மொத்தத்தில் உங்கள் இணையர் இன்பம் அடைகிறாரா என்பதில் கவனம் செலுத்தினால் போதும், உங்கள் முழு இருப்பையும் உங்கள் காதலை வெளிப்படுத்தப் பயன்படுத்த வேண்டும்.
உடலுறவின்போது உங்கள் இணையருடன் நீங்கள், ஆன்மீகம், உடல், உணர்வு எனப் பல்வேறு தளங்களில் இணைகிறீர்கள், ஒன்றாகிறீர்கள். இந்தப் பல்வேறு தளங்களில் ஒன்றிணைவதற்கு உடல் தொடர்பு முக்கியம். கைகளைப் பற்றிக்கொள்ளலாம், ஒருவரையொருவர் தழுவிக் கொள்ளலாம். பொதுவாக ஆண் மேலே பெண் கீழே இருக்கும் பொசிஷன் உடலுறவுக்கு மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இந்த நிலையில் இருவரின் உடல்களும் அதிகபட்ச ஸ்பரிசத் தொடர்பில் இருக்கும்.

சீண்டுதல், முத்தமிடுதல், தலையைக் கோதிவிடுதல் போன்ற செயல்களின் மூலமும் அன்பை வெளிப்படுத்தலாம். அழுத்தமாக முத்தமிடும்போது உங்கள் மொத்த அன்பையும், ஆசையயும் அந்த அழுத்தத்தில் காண்பிக்க வேண்டும். முத்தம் என்பது வெறுமென கன்னத்தைத் தொட்டுவிட்டு வருவது மட்டுமல்ல. இணையரின் முகத்தை உங்கள் இரு கைகளால் பற்றிக்கொண்டு, முத்தமிட்டு முத்தத்தில் மூழ்கிப் போக வேண்டும், புதைந்து போக வேண்டும், முத்தத்தில் கரைந்தே நீங்கள் மறைந்தும் போக வேண்டும் உங்களை மறந்தும் போக வேண்டும்.

உடலுறவின்போது உங்கள் காதலை வார்த்தைகளால் வெளிப்படுத்துவதும் மிக முக்கியம். உங்கள் உணர்வுகள், உங்களுக்கு என்ன பிடிக்கும், எதெல்லாம் உங்களுக்கு அதிக இன்பம் கொடுக்கும் என்பது பற்றியெல்லாம் உங்கள் இணையரிடம் நீங்கள் சொல்ல வேண்டும். இதனைச் சொற்களாலும் சொல்லலாம், பிற சைகைகளாலும், செய்கைகளாலும் கூடத் தெரிவிக்கலாம். அதெல்லாம் உங்கள் இணையரின் விருப்பத்தைப் பொறுத்து நீங்கள் முடிவு செய்துகொள்ள வேண்டும்! எந்தக் கட்டுப்பாடும் தயக்கமும் கொள்ளாமல், உங்கள் மொத்தத்தையும் வெளிப்படுத்தி இன்பத்தைக் கொட்டுங்கள், கொள்ளையிடுங்கள்.
டென்ஷன் இல்லாமல், இயல்பாக இருப்பதும், வேடிக்கைத் தனமாக இருப்பதும் உங்கள் உறவு அனுபவத்தை மேலும் நெருக்கமாக, சிறப்பானதாக மாற்றும்.

தடவிக்கொடுப்பது, கட்டியணைப்பது, முத்தமிடுவது என்பதெல்லாம் ஃபோர்பிளேவுக்கு மட்டுமல்ல. உடலுறவுக்குப் பிறகு, பாலியல் சாராத உடல் தொடுகைகளும் மிக முக்கியம். குறிப்பாக, உடலுறவுக்குப் பிறகு தடவிக்கொடுப்பது, கொஞ்சுவது, கட்டி அணைத்துக்கொள்வது போன்றவை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். தலையைக் கோதிவிடுவது, லேசாக மசாஜ் போன்று செய்வது போன்றவை ஆண்களுக்குப் பிடிக்கும்.

காதலின் வெளிப்பாடாக உடலுறவில் இன்பம் காண்பது மிகப்பெரிய அனுபவம். எல்லாமே, நீங்கள் உங்கள் இணையரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்துள்ளது. ஏனெனில் உடலுறவு என்பது ஆழ்தளத்தில் ஒருவருடன் ஒருவர் இணைவது, வெறும் சுயநல நோக்கோடு நடந்தேறும் செயலல்ல, உங்கள் அன்பையும், பாசத்தையும் இணையருக்குக் காண்பிப்பது.