Home ஆரோக்கியம் தலைச்சுற்று, பித்தம், அஜீரண பிரச்சனைக்கு தீர்வு தரும் இஞ்சி

தலைச்சுற்று, பித்தம், அஜீரண பிரச்சனைக்கு தீர்வு தரும் இஞ்சி

27

உணவுக்கு சுவை தரும் இஞ்சியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. வைட்டமின்களுடன், நார்ச்சத்தும் இருப்பதால் சீதள நோய்களை நீக்கி, உடல் இறுக்கம், குடல் புண்களை குணப்படுத்துகிறது. குறிப்பாக திரிகடுக சூரணங்களான சுக்கு, மிளகு, திப்பிலியுடன் இஞ்சி சாறு, தேன் கலந்து அருந்துவதால் ஆஸ்துமா நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. குரல்வளை, தொண்டை பகுதி, சுவாச பாதைகளில் உள்ள சளியை நீக்கி, சுவாச பாதையை சீர் செய்கிறது.

இஞ்சியை பயன்படுத்தி பசியை தூண்டச் செய்யும் பச்சடி தயாரிக்கலாம். இந்த பச்சடியை நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாதத்துடன் சாப்பிடும் போது, பசியை தூண்டும் மருந்தாகவும், சுவையின்மையை நீக்கும் மருந்தாகவும் அமையும்.

இஞ்சியின் பயன்கள் ஏராளம். இஞ்சி, எச்சிலை சுரக்கச் செய்கிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. நச்சுக்களை வெளித் தள்ளுகிறது. வயிற்றுப்புண் மற்றும் ஜலதோஷத்தில்இருந்து உடனடி நிவாரணம் தருகிறது. இஞ்சியை சர்க்கரையில் சேர்த்து சாப்பிடும் போது, பஸ் பயணங்களில் வாந்தியை தடுப்பதோடு, ரத்த ஓட்டத்தை சமநிலைப்படுத்தி, ரத்த நாளத்தில் உள்ள கொழுப்புகளை அகற்றி மாரடைப்பு வராமல் தடுக்கிறது. ரத்த வட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது.

இஞ்சி சாறுடன் உப்பு சேர்த்து தொடர்ந்து 3 நாட்கள் குடித்து வந்தால், பித்தம், தலைச்சுற்று நீங்கும். இஞ்சியை தோல் நீக்கி தேனில் ஊற வைத்து தினமும் ஒரு சிறிய துண்டு சாப்பிடுவது மிகவும் நல்லது.