Home சமையல் குறிப்புகள் நாவுறும் செட்டிநாடு நண்டு குழம்பு ருசிக்க ஆசையா ?

நாவுறும் செட்டிநாடு நண்டு குழம்பு ருசிக்க ஆசையா ?

105

செட்டிநாடு நண்டு குழம்பு செய்ய தேவையான பொருட்கள் :

நண்டு – 1/2 கிலோ
வெங்காயம் – 2
தக்காளி – 2
சீரகம் – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
பூண்டு – 5 பல்
மிளகு – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
தனியா தூள் – 3 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறையை பார்ப்போம்

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

நண்டை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்பு மிக்ஸியில் சீரகம், சோம்பு, பூண்டு மற்றும் மிளகு போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும்ம் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் அரைத்து வைத்துள்ள சோம்பு, மிளகு கலவை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

அடுத்து, அதில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

தண்ணீர் நன்கு கொதித்ததும், அதில் கழுவி வைத்துள்ள நண்டு சேர்த்து மூடி வைக்க வேண்டும்.

நண்டு நன்கு வெந்த பின், அதில் கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையைத் தூவி இறக்கினால், செட்டிநாடு நண்டு குழம்பு தயார்.