Home ஆரோக்கியம் Teens Sex Alcohol இளம் பருவத்தினர் ஆல்கஹால் மற்றும் போதைப் பொருட்களை ...

Teens Sex Alcohol இளம் பருவத்தினர் ஆல்கஹால் மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்த 10 காரணங்கள்

45

டீனேஜ் என்பது புதிய விஷயங்களை குழந்தைகள் தெரிந்துகொள்ள விரும்பும், மிகவும் முக்கியமான வயதாகும். ஒருவரின் வாழக்கையில் டீனேஜ் பருவம் என்பது மிகவும் கடினமான காலமாக கருதப்படுகிறது. மேலும் அந்த பருவத்தில் உள்ள குழந்தைகளை வளர்ப்பதற்கு பெற்றோர்களும் சிரமப்படுவதாக கருதப்படுகிறது. குழந்தைப்பருவத்திற்கும் இளம்பருவத்திற்கும் இடையே உள்ள காலகட்டத்தை குழந்தைகள் கடக்கும் சமயத்தில், போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த நேரத்தில்தான் பெரும்பாலான இளைஞர்கள் பல்வேறு காரணங்களுக்காக ஆல்கஹால் அல்லது போதைப் பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிடுகிறார்கள்.

முதல் 10 காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
1. மற்றவர்களின் பேச்சைக் கேட்டு நாமும் முயற்சிசெய்து பார்க்கவேண்டும் என்ற எண்ணம் (Peer pressure):
டீனேஜ் குழந்தைகள் மிகவும் எளிதாக நண்பர்கள் தாக்கம் மற்றும் அவர்களைப் பின்பற்ற முயற்சி செய்து. “கூல் கிட்ஸ்”ஆக இருப்பதற்காக தங்களுக்கு பொருத்தமில்லாத புதிய விஷயங்களைச் செய்ய முயற்சி செய்வர். எனவே நண்பர்கள் அவர்களை குடிக்க அல்லது போதைப் பொருளைப் பயன்படுத்தக் கூறினால், நட்பை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தால் மறுப்பு சொல்வதற்கு சிரமமாக இருக்கலாம். மேலும் இல்லை என்று கூறுதல் கிண்டல் மற்றும் தாக்கப்படுதல் போன்றவற்றிற்கு வழிவகுக்கலாம்.

2. பெரியவர்களைப் போன்று உணர்வதற்காக (To feel like adults):
இளம்பருவத்தினர், மற்றவர்கள் தங்களைப் பெரியவர்கள் போன்று நடத்தவேண்டும் என்று சில விஷயங்களை செய்வர். “நான் ஒன்றும் குழந்தை இல்லை” என்று அவர்கள் அடிக்கடி கூறுவர். மதுப்பழக்கம் உட்பட பெரியவர்கள் செய்யும் அனைத்து செயல்களையும் செய்யவேண்டுமென்று முயற்சிப்பர். தங்களை வயது முதிர்ந்தவராக அல்லது பெரியவர்களாக காண்பிக்கும் விஷயங்களை நோக்கி அவர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். இதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. இந்த உணர்வுகள் தான் ஆல்கஹால், புகை மற்றும் போதைப்பொருள் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை அவர்களுக்குத் தூண்டுகிறது.

3. பெற்றோர்களைப் பின்பற்றுதல் (Imitating parents):
குழந்தைகள் எப்போதுமே பெற்றோர்களின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவார்கள். எனவே தங்கள் பெற்றோர்கள் ஆல்கஹால் அல்லது போதைப் பொருளை அடிக்கடி பயன்படுத்துவதைப் பார்த்தால், அவர்களும் அதைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டத் தொடங்கிவிடுவார்கள். நம் பெற்றோரால் இதை செய்ய முடிகிறது, நம்மால் செய்ய முடியாதா? என்ற எண்ணம் தோன்றிவிடும். அனைத்து பிறகு, அவர்கள் பார்த்து, அவர்களின் முன்மாதிரியாக பெற்றோர்கள் கவனித்து என்ன வேண்டும் என்று.

4. ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கம் (Influenced by media):
நிறைய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களைச் சரியான பழக்கங்களாகவும், சாதாரண விஷயமாகவும் காண்பிக்கின்றன. சரியான மற்றும் தவறான பழக்கங்கள் எவை என்பதை வேறுபடுத்தி அறியத்தெரியாத இளைஞர்கள், இது போன்ற சித்தரிப்புகளைப் பார்த்து அவற்றை செய்யத்தொடங்கி விடுகிறார்கள்.

5. சலிப்புத்தன்மை (Boredom):
இளம் வயதினர் அனைத்து நேரமும் பிஸியாக இருக்க விரும்புவார்கள். தனியாக இருந்தாலோ அல்லது செய்வதற்கு எந்த வேலையும் இல்லையெனில் அவர்களுக்கு சலிப்புத்தன்மை ஏற்பட்டுவிடும். இந்த சலிப்புத்தன்மையை போக்குவதற்கு பொழுதுபோக்கான மற்றும் உற்சாகமான புதிய விஷயங்களைச் செய்யத் தொடங்குவார்கள். இத்தகைய சூழ்நிலை ஆல்கஹால் அல்லது போதைப் பொருளைப் பயன்படுத்தும் எண்ணத்தை அவர்களுக்குத் தூண்டலாம்.

6. கீழ்ப்படியாமை (Disobedience):
சில பெற்றோர்கள் தங்கள் இளம்வயது குழந்தைகள் மீது அதிக கவனத்துடனும், மிகவும் கண்டிப்பாகவும் இருக்கிறார்கள். பெற்றோர்களின் இது போன்ற கண்டிப்பான வழிமுறைகள் மற்றும் தொடர்ச்சியான நச்சரிப்பினால் குழந்தைகள் விரக்தி அடைகிறார்கள். தங்களின் இந்த மன அழுத்தம் அல்லது கோபத்தை எளியமுறையில் சரிசெய்ய முயற்சிசெய்து ஆல்கஹால் அல்லது போதைப்பொருள் பயன்படுத்துவதைத் தொடங்கிவிடுகிறார்கள்.

7. மருந்தாக (Self-medication):
உணர்வு ரீதியான பிரச்சனைகளைப் போராடிக்கொண்டிருக்கும் இளம்வயதினர், ஆல்கஹால் மற்றும் போதைப்பழக்கத்திற்கு ஆளாகின்றனர். ஆல்கஹால் மற்றும் போதைப்பொருள்கள் அவர்களின் வலியைக் குறைத்து, அவர்களுக்கு ஒரு நல்ல உணர்வை அளிப்பதாக எண்ணுகின்றனர். உதாரணமாக வீட்டில் முறைகேடாக நடத்தப்படும் ஒரு இளம் நபர், தன மனவேதனையை சமாளிப்பதற்காக போதைப்பொருளை உபயோகப்படுத்தலாம்.

8. உடனடி இன்பம் (Instant pleasure):
ஆல்கஹால் மற்றும் போதைப்பொருள்கள் குறைந்த நேரத்தில் அதிக இன்பத்தை தரக்கூடியவையாகும். எனவே விரைவான மற்றும் உடனடி இன்பத்தை தேடும் இளம்பருவத்தினர் இந்தப் பழக்கங்களுக்கு உள்ளாகிவிடுகின்றனர்.

9. அறியாமை (Ignorance):
பெரும்பாலும், ஆல்கஹால் மற்றும் போதைப்பொருள்கள் பற்றிய முழுமையான மற்றும் சரியான தகவல் இளைஞர்களுக்குத் தெரிவதில்லை. தங்கள் நண்பர்கள் கூறுவதைக் கேட்டு அதை சரி என்று நம்பிவிடுகின்றனர். ஆல்கஹால் மற்றும் போதைப்பொருள்கள் இன்பத்திற்கு என்றும், அது உடலுக்கு எந்தவித தீங்கையும் ஏற்படுத்துவதில்லை என்றும் நினைக்கின்றனர்.

10. ஆர்வம் (Curiosity):
ஆர்வமே, இளம்வயதினர் ஆல்கஹால் மற்றும் போதைப்பொருளைப் பயன்படுத்த முயற்சிப்பதற்கான முக்கியக் காரணமாகும். புதிய அனுபவங்களை முயற்சித்து பார்ப்பதில் இளம்பருவத்தினர் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். யாரவது ஆல்கஹால் உட்கொள்வதை பார்த்தால், அந்த உணர்வு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள அவர்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள்.