Home இரகசியகேள்வி-பதில் பருவ ஆண்களின் பாலியல் மாற்றங்கள் டாக்டர் கேள்விக்கு பதில்

பருவ ஆண்களின் பாலியல் மாற்றங்கள் டாக்டர் கேள்விக்கு பதில்

239

இரகசியகேள்வி-பதில்:மனிதனின் பரிணாம வளர்ச்சியே மிகவும் வியக்கத்தக்கது. அறிவியலின் அற்புத படைப்பே மனிதன். அவன் வாழ்க்கை சக்கரம் மிகவும் வித்தியாசமானது. அதிலும் ஆணின் வாழ்க்கை சுழற்சி கொஞ்சம் மாறுபட்டதே. ஒரு ஆண், குழந்தையாக பிறந்து சிறுவனாக தவழ்ந்து, வாலிபனாக பருவமடைந்து, தந்தையாக பக்குவமடைந்து, கடைசியில் இயல்பான வயோதிக்கத்தை அடைவதே இவர்களின் வாழ்க்கை சுழற்சியாக கருதப்படுகிறது. இது சற்றே வித்தியாசமாக பெண்களுக்கு மாறுபடும். பெண்கள் பருவமடைந்தால் என்னென்ன நடக்கும், எத்தகைய விதமான மனநிலையில் அவர்கள் இருப்பார்கள் என்பதை பற்றி நமக்கு தெரியும்.

ஆனால் ஒரு ஆண் பருவமடைந்தால் எத்தகைய மாற்றங்கள் அவன் உடல் அளவிலும், உளவியல் சார்ந்தும் அடைவான் என்பதை பற்றி நமக்கு பல்வேறு கேள்விகள் இன்றளவும் இருக்கத்தான் செய்யும். அதிலும் சிறுவன் என்ற நிலையில் இருந்து வாலிபன் என்ற பருவத்தை வயதுக்கு வந்தபோது அவன் கடக்க முற்படுவான். அந்த சமயங்களில் அவனுக்குள் ஏற்படும் எண்ணற்ற சந்தேகங்களுக்கு விடைகள் தெரியாமல் சில தவறுகளும் நடக்க கூடும். இவற்றையெல்லாம் சரியான முறையில் கையாள இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1. ஒரு ஆண் வயதுக்கு வந்தால் அவன் உடலில் ஏற்படும் முதல் மாற்றம் என்ன..?
அ. குரல் மாற்றம்

ஆ. பிறப்புறுப்புகள் வளர்ச்சி அடைதல்

இ. மனநிலை மாற்றம்

விடை :- பிறப்புறுப்புகள் வளர்ச்சி அடைதல்

விளக்கம் :-

ஆண்கள் வயதுக்கு வந்தால் அவர்கள் உடலில் ஏற்படும் முதல் மாற்றம், பிறப்புறுப்புகள் வளர்ச்சி அடைவதே. மேலும் அவர்களின் பிறப்புறுப்புகள் மிக கடினமாகவும், நீண்டும் வளர செய்யும். இந்த மாற்றம் ஆண்கள் பருவம் அடையும் நிலை முடிந்தால் மட்டுமே இதன் வளர்ச்சி நிற்கும். அதுவரை இதன் வளர்ச்சி தொடரும்.

2. வயதுக்கு வந்தால் ஏன் ஆண்களின் உடலில் ஒரு வித நாற்றம் வருகிறது..? அ. ஹார்மோன்களினால் ஆ. உடல் பருமனால் விடை :- ஹார்மோன்களினால் விளக்கம் :- பொதுவாக ஆண்கள் வயதுக்கு வந்தால் அவர்களின் உடலில் டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோன் அதிகரிக்கும். இதனால் உடலில் அதிக வியர்வை ஏற்படும். குறிப்பாக அக்குள் மற்றும் கால் பகுதிகளில் அதிக வியர்வை ஏற்பட்டு ஒருவித நாற்றத்தை ஏற்படுத்தும்.

3. பொதுவாக விறைப்பு தன்மை ஒரு இரவில் எத்தனை முறை ஏற்படும்…? அ. 2 முறை ஆ. 10 முதல் 12 முறை இ. 3 முதல் 5 முறை விடை :- 3 முதல் 5 முறை விளக்கம் :- இயல்பாகவே ஆண்களுக்கு விறைப்பு தன்மை இரவு நேரங்களில் ஏற்படும். அதுவும் 3 முதல் 5 முறை இது ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் விறைப்பு தன்மை இத்தனை முறை அடைவது பற்றி ஆண்களுக்கே தெரியாதாம்.

4. சுய இன்பம் கொள்வதால் பிறப்புறுப்புகள் பாதிப்படையுமா..? அ. ஆம் ஆ. இல்லை விடை :- இல்லை விளக்கம் :- பருவம் அடைந்த 14 வயதுக்கு மேல் உள்ள இரண்டில் ஒரு ஆண், சுய இன்பம் அடைவதாக ஆராய்ச்சிகள் சொல்கிறது. ஆனால் அவர்கள் வெளியில் இதை பத்தி பேச அதிகம் தயங்குவார்கள். மேலும் சுய இன்பம் கொள்வதால் பிறப்புறுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் பல வதந்திகள் இன்றளவும் திரிக்கப்பட்டு தான் வருகிறது. சுய இன்பம் அடைவதால் எந்தவித பாதிப்பும் இல்லை என்பதே உண்மை.

5. ஆண்களும் பெண்களை போல விரைவாக பருவம் அடைவார்களா..? அ. ஆம் ஆ. இல்லை விடை :- ஆம் விளக்கம் :- இது ஒரு ஆச்சரியமான விஷயம்தான். ஆண்களும் பெண்களை போலவே விரைவாகவே பருவம் அடைவதுண்டு. இதற்கு காரணம் உடலில் ஹோர்மோன்கள் சுரப்பது அதிகரித்து, 9 வயதுக்குள்ளே பருவமடைந்து விடுவார்கள். சிலர் அதிக எடையுடன் இருந்தாலும் இந்த நிலை ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

6. ஈரமான கனவுகள் என்றால் என்ன..? அ. நீர் சார்ந்த கனவு ஆ. பாலியல் சார்ந்த கனவு இ. இதயம் சார்ந்த கனவு விடை :- பாலியல் சார்ந்த கனவு விளக்கம் :- தூங்கும்போது ஆண்களின் பிறப்புறுப்புகளில் இருந்து விந்து வெளிப்படும். அந்த சமயங்களில் அவை ஈரமான கனவுகளை தரும். அதாவது, உடலுறவு சார்ந்த கனவுகளை ஏற்படுத்தும். பருவம் அடைந்த ஆண்களுக்கு இந்த வித கனவுகள் வருவது இயல்பே. வயோதிக பருவத்தை அடைந்து விட்டால் இது போன்ற ஈரமான கனவுகள் வராதாம்.

7. ஆண்குறிகளில் விந்து அல்லது ஒருவித திரவம் வெளிப்பட்டால் என்ன அர்த்தம் …? அ. STD நோய் தொற்று ஆ. இயல்பான ஒன்றே விடை :- STD நோய் தொற்று விளக்கம் :- ஆண்குறியில் இருந்து அடிக்கடி விந்தோ அல்லது ஒருவித திரவம் வெளிப்படுவது ஆபத்தான விஷயமாகும். ஏனெனில் STD நோய் தொற்று உள்ளவரோடு உடலுறவு வைத்து கொண்டு அதன் மூலமாக STD நோய் தொற்றுகள் ஏற்பட்டிருக்கலாம். இவ்வாறு இருந்தால் உடனடியாக மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.

8. பிறப்புறுப்புகளில் இடித்து கொண்டால் ஏன் உயிர் போகும் அளவுக்கு வலிக்கிறது ..? அ. மிகவும் மென்மையான பகுதி ஆ. எலும்புகள் மற்றும் தசைகள் இல்லா பகுதி இ. சுரப்பிகள் இருப்பதால் விடை :- எலும்புகள் மற்றும் தசைகள் இல்லா பகுதி விளக்கம் :- பொதுவாகவே ஆண்கள் பிறப்புறுப்புகளில் இடித்து கொண்டால் பயங்கர வலி ஏற்பட கூடும். இதற்கு காரணம் அவர்களின் விரைகளில் எந்தவித தசைகள் மற்றும் எலும்புகள் இல்லாததே. எனவேதான் அந்த இடத்தில் அடிபட்டால் அதிக வலி தருகிறது.

9. பிறப்புறுப்புகளின் அளவை மாற்ற முடியுமா..? அ . ஆம் ஆ. இல்லை விடை :- இல்லை விளக்கம் :- தொலைக்காட்சியில் விளம்பரம் செய்வது போல் உங்கள் பிறப்புறுப்புகளின் அளவை மாற்ற முடியாது. இந்த டோனிக் குடித்தால் இப்படி ஆகலாம் என்ற வார்த்தைகள் முழுவதும் தவறானதே. பிறப்புறுப்புகளின் வளர்ச்சி உங்களின் உடல் அமைப்பை பொறுத்தே வளர்ச்சி பெரும். அதனை வேறு எந்த முறையிலும் மாற்ற முடியாது. மீறி அதன் அளவை மாற்ற முற்பட்டால் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.

Previous articleபெண்களுக்கு இந்த காரணத்தால் தான் அந்த முன்று நாட்கள் தள்ளிபோகிறது
Next articleஆண்களுக்கு பொதுவாக ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகள்