Home ஆரோக்கியம் Tamil x Doctor தோல் பிரச்சனைகளைப் போக்கும் துளசி

Tamil x Doctor தோல் பிரச்சனைகளைப் போக்கும் துளசி

22

துளசி உயர் மருத்துவ குணங்களைக் கொண்டது, எனவேதான் இது “இயற்கை மருந்துகளின் தாய்” என்று அழைக்கப்படுகிறது.துளசியில் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட், ஆன்டிபாக்டீரியல், ஆன்டிஃபங்கல், ஆன்டிவைரல் மற்றும் நோய்எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் பண்புகள் உள்ளது. இந்த பண்புகள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், கிருமிகள் மற்றும் நோய்த்தொற்றுகளுக்கு எதிராக உடலின் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.

துளசிச்செடி பொதுவாக பெரும்பாலான இந்திய வீடுகளில் காணப்படுகிறது.சருமப் பிரச்சனைகளான முகப்பருக்கள் மற்றும் கறைகளைப் போக்குவதில் இந்தச் செடியின் இலைகள் சிறந்த மருந்தாகப் பயன்படுகின்றன.

சரும நலனுக்காக துளசி இலைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கான சில எளிய வழிகள்:

முகப்பரு வராமல் தடுக்கிறது:

துளசி இலைகளை தினமும் உட்கொள்ளுதல் இரத்தத்தை சுத்தம் செய்து, முகப்பரு மற்றும் பருக்கள் வராமல் தடுக்கிறது. உங்கள் சருமத்தில் முகப்பரு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தால், துளசி இலைகள், பன்னீர், சந்தனம் மற்றும் எலுமிச்சைச் சாறு அடங்கிய ஃபேஸ் பேக்கை முகத்தில் பூசவும். இது முகப்பருக்களின் திடீர் எழுச்சியைக் குறைக்க உதவும்.

தோல் நோய்களுக்கு சிகிச்சையளிக்கிறது:

துளசி இலைகள், தோல் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் சிறந்த தீர்வாக உள்ளன. கடுகு எண்ணெயில் துளசி இலைகளை போட்டு, எண்ணெய் நிறம் மாறும்வரை கொதிக்கவைக்கவும். இந்த எண்ணெயை நன்கு கலக்கி, தோலில் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். இது தோல் நோய்களை குணப்படுத்தி, அவை ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

அரிப்புக்கு நிவாரணமளிக்கிறது:

அரிப்பு உள்ள இடங்களில் துளசி இலைகளை தேய்த்தல், உடனடி நிவாரணமளிக்கிறது. துளசி இலைச்சாறு மற்றும் எலுமிச்சைச் சாறை கலந்து தேய்ப்பதன் மூலம் அரிப்பைக் குணப்படுத்தலாம்.

சருமத்தை இறுக்க உதவுகிறது:

சருமத்தை இறுக்கமடையச் செய்ய, துளசி இலைகளை நீரில் 5 நிமிடம் கொதிக்க வைத்துப் பின்னர் 2-3 துளி எலுமிச்சைச் சாறுடன் சில துளி பன்னீர் சேர்த்து டோனரை உருவாக்கலாம். நீங்கள் இந்தச் சாற்றை ஸ்கின் டோனராக பயன்படுத்தலாம்.

தீப்புண் மற்றும் காயங்களுக்கு பயனுள்ளது:

தீப்புண் மற்றும் காயங்களுக்கு சிகிச்சையளிக்க துளசி இலையைப் பயன்படுத்தலாம். அதற்கு முதலில், துளசி இலைச் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்கவைக்க வேண்டும். கொதிக்க வைத்த கலவையை ஆறவைத்துப் பின்னர் தீப்புண் மற்றும் காயத்தின் மேல் தடவலாம்.

சருமத்தைப் பொலிவாக்க உதவுகிறது:

சிறிதளவு துளசி இலைகளை வெயிலில் காய வைக்கவும். காயவைத்த இலைகளை அரைத்து தூளாக்கி காற்றுப் புகாத கொள்கலனில் அடைத்து வைக்கவும். இப்போது அரைத்த இந்த துளசி இலைத் தூளை முல்தானி மட்டியுடன் சேர்க்கவும். சாதாரண நீர் அல்லது பன்னீரை அந்த தூளுடன் சேர்த்து பேஸ்ட் போல உருவாக்கி, முகம் முழுதும் தடவவும். 10-15 நிமிடங்கள் வரை உலர வைத்துப் பின்னர் கழுவவும். இது உங்கள் தோலை பொலிவாக்கும்.

தோல் நிறத்தை மாற்ற உதவுகிறது:

புதிதான துளசி இலைகளிலிருந்து எடுத்த சாற்றை எலுமிச்சைச் சாறுடன் சேர்த்து தோலில் பூசலாம். தோலின் நிறத்தை மாற்ற இது உதவுகிறது.

இவ்வாறாக “இயற்கை மருந்துகளின் தாய்” என்று அழைக்கப்படும் துளசியில் நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன.உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துகொள்ள துளசி இலைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கான எளிய வழிகள்தான் மேலே குறிப்பிடப்பட்ட வழிகள்.