Home பெண்கள் உடல் கட்டுப்பாடு Tamil X மார்பகங்களை சுயமாகப் பரிசோதனை செய்துகொள்ளும் முறை

Tamil X மார்பகங்களை சுயமாகப் பரிசோதனை செய்துகொள்ளும் முறை

18

Young woman performing breast cancer self-exam . You might also be interested in these:
பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோயில் அதிகம் காணப்படும் ஒன்று மார்பகப் புற்றுநோய் ஆகும். இது ஆண்களுக்கும் வரக்கூடிய ஒரு நோய்தான். ஆனால் ஆண்களுக்கு வருவது மிக அரிது. மார்பகத்தில் செல்கள் வழக்கத்திற்கு மாறாக வளர்ச்சியடைந்து கட்டியாக மாறுவதே மார்பகப் புற்றுநோய். இதனை எக்ஸ்-ரே சொதனையின்மூலம் கண்டறிந்துகொள்ள முடியும். மார்பகப் புற்றுநோய் உடலின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடும்.

எப்போது மார்பக சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்? (When to do a breast self-exam?)

நீங்களாகவே உங்கள் மார்பகங்களைப் பார்த்து சோதனை செய்து, மார்பகத்தில் கட்டி போன்றோ அல்லது வீக்கம் போன்று ஏதேனும் உள்ளதா எனப் பார்த்தறிவதே மார்பக சுய பரிசோதனை (BSE). சௌகரியமாக உங்கள் வீட்டிலேயே இதைச் செய்துகொள்ளலாம். மார்பக சுய பரிசோதனை செய்யச் சரியான காலம், மாதவிடாய் சுழற்சி தொடங்கிய நாளில் இருந்து 7 முதல் 10 நாட்களுக்கு உட்பட்ட நாட்களாகும். மாதவிடாய் நின்ற பெண்கள், ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நாளில் சுய பரிசோதனை செய்ய வேண்டும். காலை நேரத்தில் இயற்கையான சூரிய ஒளியில் இந்தப் பரிசோதனையைச் செய்வது நல்லது.

இப்படி மார்பக சய பரிசோதனை செய்யும் ஒவ்வொரு முறையும் கண்டறியும் மாற்றங்களை எல்லாம் ஒரு டைரியில் குறித்து வைத்துக் கண்காணிக்க வேண்டும். இப்படிச் செய்வதால் மார்பகங்களில் ஏதேனும் கட்டி போன்று உருவாகத் தொடங்கினால், உடனடியாகக் கண்டுகொள்ள முடியும். இயல்பாக உங்கள் மார்பகங்கள் பார்க்க, தொட்டுப்பார்க்க எப்படி இருக்கும் என்று உங்களுக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் மார்பகங்களில் ஏதேனும் கட்டி போன்று தெரிந்தால் பயப்படாமல் இருக்கலாம், ஏனெனில் இதுபோன்ற பெரும்பாலான கட்டிகள் கெடுதல் செய்பவையல்ல.

மார்பக சுய பரிசோதனை செய்யும் முறை (Steps for Breast Self-Exam)

முன்பு தோள்கள் நேராக இருக்கும்படி, இடுப்பில் கை வைத்து கண்ணாடியின் நிற்கவும். உங்கள் மார்பகங்களில் நிறம், வடிவம் அல்லது அளவில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்று கூர்ந்து கவனிக்கவும். மார்பகங்களில் தோல் சிவத்தல், தோல் தடித்தல், வீக்கம், கட்டி போன்றவை ஏதேனும் இருந்தால், குழி விழுவது போல் இருந்தால், அல்லது முலைக்காம்புகளின் அளவு, வடிவம் அல்லது இருக்கும் இடத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருந்தால், மார்பகங்களில் இருந்து ஏதேனும் திரவம் போன்றவை கசிந்தால் உடனடியாக உங்கள் மருத்துவரைத் தொடர்புகொள்ளவும்.
கைகளை தலைக்கு மேல உயர்த்திக்கொண்டு நின்றுகொள்ளவும், பிறகு மேலே முதல் படியில் கூறியது போலவே, மாற்றங்கள் ஏதேனும் தென்படுகின்றனவா என்று கண்டறியவும்.
முலைக்காம்புகளை லேசாக அழுத்தி இழுத்துப் பார்க்கவும். அப்போது இரத்தமோ, நீர் போன்ற அல்லது பால் போன்ற அல்லது மஞ்சள் நிறமான ஏதேனும் திரவம் கசிகிறதா என்று பார்க்கவும். ஏதேனும் கசிந்தால், உடனடியாக மருத்துவரைத் தொடர்புகொள்ளவும்.
படுக்கையில் படுத்துக்கொண்டு, உங்கள் மார்பகங்களைத் தொட்டுப்பார்க்கவும். இடது மார்பகத்தை வலது கையாலும் வலது மார்பகத்தை இடது கையாலும் தொட்டுப் பார்க்கவும்.விரல்களை வளைக்காமல் தட்டையாகவும், பிரிக்காமல் ஒன்றாகச் சேர்த்தபடியும் வைத்துக்கொண்டு, மென்மையாக வட்ட வடிவில் விரல்களால் தடவிப் பார்த்து இதைச் செய்ய வேண்டும்.
கடைசியாக, நின்றுகொண்டு அல்லது உட்கார்ந்துகொண்டு உங்கள் மார்பகங்களைத் தொட்டுப் பார்க்கவும். குளிக்கும்போதும் இதைச் செய்யலாம். ஏனெனில் அப்போது மார்பகங்கள் ஈரமாகவும் தடவித் தொட்டுப் பார்க்க எதுவாகவும் இருக்கும். மேலே விவரித்த அதே முறையில் விரல்களால் மார்பகங்களைத் தடவித் தொட்டுப் பார்க்கவும். மார்பகம் முழுவதையும் தொட்டுப் பார்க்க வேண்டும்.
வீட்டில் மார்பக சுய பரிசோதனை செய்துகொள்வது, மார்பகப் புற்றுநோயைக் கண்டறிவதற்கான மிகச் சிறந்த வழி என்று கூற முடியாது. ஆனாலும் ஆரம்பக் கட்ட சோதனையாக இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அமெரிக்கன் காலேஜ் ஆஃப் ஆப்ஸ்டெட்ரிஷியன்ஸ் அண்ட் கைனகாலஜிஸ்ட்ஸின் கருத்துப்படி, ஒவ்வொருவரும் மாதம் ஒரு முறையேனும் மார்பக சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறையேனும் பெண் மருத்துவரிடம் சென்று மார்பகங்களைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நாற்பது வயதிற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் மம்மொகிராம் சோதனை செய்துகொள்ள வேண்டும்.

Previous articleX Doctor Sex ஆண்மை குறைபாடு: சில பொய்களும்! பல உண்மைகளும்
Next articlebaby care இரண்டு வயது குழந்தையைச் சமாளிப்பது ஏன் அவ்வளவு பெரிய சவாலாக இருக்கிறது?