Home பெண்கள் தாய்மை நலம் Tamil Sex x doctors கர்ப்பமாக இருக்கும்போது எந்த மாதிரியான உடற்பயிற்சிகள் செய்யக்கூடாது?

Tamil Sex x doctors கர்ப்பமாக இருக்கும்போது எந்த மாதிரியான உடற்பயிற்சிகள் செய்யக்கூடாது?

46

பெரும்பாலானோர் சாதாரண நாட்களைவிட கர்ப்ப காலத்தில் அதிக நேரம் உடற்பயிற்சி செய்தால், குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும், சுகப்பிரசவம் உண்டாகும் என்றெல்லாம் மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள். உடற்பயிற்சி நல்லது தான். அதிலும் கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி கட்டாயம் தான் என்றாலும்கூட, சில தேவையில்லாத ரிஸ்க் எல்லாம் எடுத்து சிரமத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது.

ஒரு நாளைக்கு சராசரியாக, 30 நிமிடங்கள் வரை உடற்பயிற்சிக்காக நேரம் ஒதுக்கலாம். அதிலும் கர்ப்ப காலத்தில் சில வகையான உடற்பயிற்சிகளைத் தவிர்ப்பது பிரசவத்தின் போது, சிரமம் உண்டாகாமல் இருக்கும்.

கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உடற்பயிற்சிகள்

தொடைகளையும் கால்களையும் தரையில் படாமல், இடுப்பை மட்டும் தரையில் வைத்து உட்காருதல் கூடாது.

மல்லாந்து படுத்துக் கொண்டு, கால்களை மட்டும் உயரமாகத் தூக்கியோ மடக்கியோ வைக்கக்கூடாது.

மூச்சை தம் கட்டி, குறிப்பிட்ட நேரம் கழித்து காற்றை வெளியே விடும் மூச்சுப்பயிற்சியைக் கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டும். அப்படி செய்வதன் மூலம், தாய்க்கு மட்டுமல்லாது குழந்தைக்கும் ஆக்சிஜன் செல்வது தடைபடும்.

சில கஷ்டமான யோகா பயிற்சிகள் உண்டு. அதை செய்கிறேன் என்று ரிஸ்க் எடுப்பதைத் தவிர்த்திடுதல் வேண்டும். குறிப்பாக, ஒரு கையையும் பாதங்களையும் மட்டும் தரையில் ஊன்றிக்கொண்டு, உடலையும் மற்றொரு கையையும் மேலே உயரத் தூக்கும் யோகாவைப் பற்றி, கர்ப்ப காலத்தில் நினைத்துப் பார்க்கவே கூடாது.

படுத்துக்கொண்டு, இடுப்பை வளைப்பதோ, இடுப்பை மேல் நோக்கித் தூக்குவதோ கூடாது.

விளையாட்டுகளைப் பொருத்தவரையில், தேவையில்லாத ரிஸ்க் எடுக்கக்கூடாது. குறிப்பாக, ஜிம்னாஸ்டிக், ஜஸ் ஸ்கேட்டிங், குதிரைச்சவாரி, சைக்கிளிங் போன்ற விளையாட்டுகளில் எதையேனும் விரும்புபவராக இருந்தால், சில காலங்களுக்கு அவற்றை மறந்துவிடுங்கள்.