Home பெண்கள் தாய்மை நலம் Tamil Sex கர்ப்பமாயிருக்கும்போது சிகரெட் புகையை சுவாசிச்சாலே ஆபத்து! ஏன் தெரியுமா?

Tamil Sex கர்ப்பமாயிருக்கும்போது சிகரெட் புகையை சுவாசிச்சாலே ஆபத்து! ஏன் தெரியுமா?

30

கர்ப்பகாலத்தின் போது சிகரெட்டை ஒரு பெண் புகைப்பதனால் அல்லது தொடர்ந்து மற்றகர் விடும் சிகரெட் புகையை சுவாசிப்பதாலோ… அவளுடைய கருப்பொருள் உறுப்புகள் (போட்டல் ஆர்கன்) பாதிக்கப்படுகிறது.
குறிப்பாக கல்லீரலை பாதிக்ககூடும் என்ற உண்மையும் ஆய்வின் மூலம் நமக்கு தெரிய வருகிறது.

எடின்பர்க் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், இதனை பற்றி ஆராய்ந்து என்ன கூறுகிறார்கள் என்றால்…இந்த சிகரெட்டில் சக்தி வாய்ந்த 7,000 காக்டெய்ல் இரசாயன பொருட்கள் இருப்பதாகவும், அது குறிப்பாக பெற்றோர் ரீதியாக வளரும் கல்லீரல் செல்களை பாதிப்பதாகவும் கூறுகின்றனர். வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவதில் கல்லீரலின் பயன்பாடு அதிகமாகவே இருக்கிறதாம். மேலும் இது, உடம்பில் இருக்கும் நச்சு பொருள்களை நீக்க வல்லது எனவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல்…இந்த ஆய்வின் மூலம் தெரிய வருவது என்னவென்றால், இந்த இரசாயன பொருள்கள் ஆண் கல்லீரலையும், பெண்ணின் கருவையும் பாதிக்கிறது எனவும் கூறுகிறது. ஆண் திசுக்கள் கல்லீரலின் வடுவை காண்பிக்க…பெண் திசுக்கள் வளர்சிதை செல்களை பாதிப்பதையும் காட்டுகிறது எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆய்வின் மூலம் நச்சுதன்மையின் காப்பகங்கள் பற்றிய பத்திரிக்கையில் இவை வெளியிடப்பட, ஒரு குழு…தாய் புகைப்பிடித்தலால், கரு நிலை மூலக்கூறுகள் மூலம் கல்லீரல் திசுக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதனை பற்றிய ஆய்வினை மேற்கொண்டது. சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருப்பதால்…அது கருவை பாதிக்ககூடும் என்றும், விரிவான விளக்கங்களை நாம் தெரிந்துகொள்ள பொருத்தமான கருவிகள் கொண்டு கண்டுபிடிக்க முற்படுவதாகவும் அவர்கள் கூறினர். இந்த புதிய அனுகுமுறையின் மூலம்…புதுப்பிக்க கூடிய திசுக்கள், பிறக்காத கருவில் சிகரெட்டின் செல்லுலார் விளைவுகளைப் புரிந்துகொள்ள எங்களுக்கு உதவுகிறது என்றும் எடின்பர்க் பல்கலைகழகத்தின் டேவிட் ஹேய் கூறினார்.

ஆராய்ச்சியாளர்கள் பல்வகை செடி செல்களை பயன்படுத்தினர். மற்ற செல் வகைகளாக உருமாற்றம் செய்யக்கூடிய தனித்துவமான திறனைக் கொண்ட இந்த சிறப்பு செல்கள், கரு கல்லீரல் திசுக்களை உருவாக்ககூடியதாகும். சிகரெட்டில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் இரசாயன பொருள்கள், கல்லீரல் செல்களை பாதிக்கிறது. அதுவும் ஒரு தாய் புகைப்பிடிக்கும் பொழுது, கருவை சுற்றி அந்த இரசாயன பொருள்கள் பாதிக்க தொடங்குகிறது என்றும் கூறுகின்றனர்.

இந்த முடிவின் படி…இது ஒரு ரசாயன காக்டைய்ல் என்றும், இதேபோல் ஒன்று தான் சிகரெட்டிலும் உள்ளது என்பதும் நமக்கு தெரியவருகிறது. கரு கல்லீரலின் நலம், தனிப்பட்ட கூறுகளை விட அதிகம் பாதிக்கப்படுகிறது எனவும் IANSஇன் கூற்றுபடி தெரியவருகிறது.