Home பெண்கள் அழகு குறிப்பு Tamil Girls Bra பிரா அணியுமிடத்தில் உண்டாகும் தழும்புகளை எப்படி சரிசெய்யலாம்?

Tamil Girls Bra பிரா அணியுமிடத்தில் உண்டாகும் தழும்புகளை எப்படி சரிசெய்யலாம்?

49

Tamil Girls Bra உள்ளாடை உங்கள் தோற்றத்தினை முடிவுசெய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தவறான உள்ளாடைகள் உங்கள் மார்பு, முதுகு மற்றும் தோள் பகுதியில் தழும்புகளை விட்டுச் செல்கின்றது.

சரியான பிராக்களை தேர்வு செய்வதன் மூலம் அதை அணியும்போது அல்லது அணிந்து கழட்டியபின் உங்கள் உடம்பில் கடும் தழும்புகள் ஏற்படுவதை தவிர்க்கமுடியும்.

ஆனால் இது போன்ற தழும்புகள் ஏற்கனவே ஏற்பட்டிருந்தால் என்ன செய்வது, அதை எப்படி சிகிச்சைஅளித்து ஆறவைப்பது என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.

இறுக்கமான ஸ்ட்ராப்களை சற்று தளர்த்தி அது உங்கள் உடம்பில் பள்ளங்களை ஏற்படுத்தி தழும்பை உருவாக்காமல் இருக்குமாறு செய்யுங்கள். தழும்புகளைத் தவிர்க்க இது சிறந்த மற்றும் முதலில் செய்யக்கூடிய வழிமுறை.

பிராவின் எலாஸ்டிக் எங்கெல்லாம் அழுத்தம் தருகிறதோ அங்கெல்லாம் பெட்ரோலியம் ஜெல்லியை தடவுங்கள். இது உங்கள் உடம்பில் அழுத்தம் உள்ள இடங்கள் ஈரப்பதத்துடன் இருக்கவும் அங்கு சருமம் பாதிக்கப் படாமலிருக்கவும் உதவும்.

இந்த பகுதியில் உராய்வினாலும் அசைவினாலும் ஏற்படும் கருமையாகவோ அல்லது சிவந்தோ போய்விட வாய்ப்புண்டு. அப்படியானால் அங்கு இறந்த சரும செல்களில் சேர்க்கை அதிகமாக இருக்கும். அதனால் அவற்றை நீக்கி சுத்தப்படுத்தவேண்டும்.

மேற்கூறியவாறு இறந்த செல்களை அகற்றியபிறகு, அங்கு ஈரப்பதத்தை தக்கவைக்க தேவையான மாயிஸ்சரைசர் அல்லது ஈரப்பதம் தரும் ஏதாவது ஒன்றை தடவவேண்டும். இது உராய்வைக் குறைக்கும்.

சோற்றுக் கற்றாழை குளிர்ச்சியைத் தரக்கூடியது என்பதால் நாள் முழுவதும் பிரா அணிந்துவிட்டு சோர்வடையும்போது இதமாக இருக்கும். இந்த ஆலோவெரா ஜெல்லை சிறிது தடவினால் அது தழும்பு மற்று உராய்வினால் ஏற்படும் பாதிப்பை குணப்படுத்தும்.

மிகவும் அழுத்தமான பிராவை அணிந்தபிறகு ஏற்படும் அசவுகரியம் மற்றும் வலிக்கு இந்த ஐஸ் பேக் ஒத்தடம் ஒரு இதமான சக்திய்வாய்ந்த வலி நிவாரணி. இதனால் பிராவில் உள்ள ஸ்ட்ராப் தழும்புகளைத் தவிர்க்க இது மிகவும் உதவும்.

மஞ்சளை அரைத்து பிரா எலாஸ்டிக் அழுத்தத்தினால் நிறம் மாறிய இடங்களில் தடவுங்கள். இது நிறம் மாறிய சருமத்தை வெண்மையாக்கவும் தழும்புகளை படிப்படியாக குணமாக்கி ஆறுதல் அளிக்கவும் செய்யும்.

Previous articleTamil x doctors sex care இது ஒரு ஸ்பூன் போதும் கர்ப்பப்பை சுத்தமாகிவிடும்…
Next articleTamil Kaama uravu வயசாகிட்டே போகுதா? இளமையும் ஆண்மை குறையாமல் இருக்கனுமா? முருங்கைப்பூ சாப்பிடுங்க!