Home இரகசியகேள்வி-பதில் கணவன் என்னை தொடுவதில்லை ,என் உணர்சிகளை போக்க சுயஇன்பம் செய்கிறேன்

கணவன் என்னை தொடுவதில்லை ,என் உணர்சிகளை போக்க சுயஇன்பம் செய்கிறேன்

513

இரகசியகேள்வி-பதில்:எனக்குத் திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. திருமணமான புதிதில் என் மேல் அன்பாக இருந்த கணவர், ஒரு குழந்தை பிறந்த பிறகு என்னை நெருங்குவதே இல்லை. உணர்ச்சிகளை அடக்க நான் சுய இன்பம் செய்ய வேண்டியிருக்கிறது. கணவருக்கு என் மேல் மீண்டும் நாட்டம் வர சிகிச்சை உண்டா? -பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

பொதுவாகவே திருணமான புதிதில் செக்ஸ் வாழ்க்கையில் இருக்கிற ஈடுபாடு, காலத்துக்கும் அப்படியே இருப்பதில்லை. உங்கள் கணவருக்கு அது ஒரேயடியாகக் குறைய என்ன காரணம் என முதலில் கண்டு பிடியுங்கள். ஒரு குழந்தை பெற்ற பிறகு தன்னை அழகாக, சுத்தமாக வைத்துக் கொள்கிற எண்ணம் பெரும்பாலான பெண்களுக்குப் போய் விடுகிறது. தினம் இரண்டு வேளைகள் குளியுங்கள். கஸ்தூரி மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால், அது கணவரை இல்லற வாழ்க்கைக்கு ஈர்க்கும். நீங்கள் அணிகிற உடைகள் மற்றும் உள்ளாடைகள் அழுக்கின்றி, வியர்வை நாற்ற மின்றி சுத்தமாக இருக்கட்டும். படுக்கையறையை சுத்தமாக வைத்திருங்கள். தினம் காலையில் கணவருக்குக் கைப்பிடியளவு பச்சைப் புதினாவை சாப்பிடக் கொடுங்கள். கருணைக் கிழங்கு மற்றும் பசலைக் கீரை அதிகம் சமைத்துக் கொடுங்கள். முருங்கைப்வை நெய்யில் வதக்கிக் கொடுங்கள். இரவு படுக்கும் முன்பாக வெற்றிலை, பாக்குடன், சிறிது ஜாதிக்காய் சேர்த்துக் கொடுங்கள். இதெல்லாம் கணவருக்குத் தாம்பத்திய ஈடுபாட்டை அதிகப்படுத்தும். படுக்கையறையில் வீட்டுப் பிரச்சினைகள் பேசாதீர்கள். சுய இன்பம் என்பது எப்போ தாவது ஒரு மாறுதலுக்குச் செய்யலாம். நாளைக்கே உங்கள் கணவர் மீண்டும் உங்களிடம் நெருக்கமா கும்போது உங்களின் அந்தப் பழக்கம் அவருக்கு நெருடலை உண் டாக்கும்.

———————————

என் வயது 29. சமீப காலமாக இல்லற வாழ்க்கையில் ஈடுபட்ட அடுத்த சில நாட்களில் எனக்கு பயங்கரமான நீர்க் கடுப்பு உண்டாகிறது. எதனால் இப்படி? சிகிச்சை உண்டா? – சி. ஜானகி, மேட்டூர்.

மண்பானை செய்கிறவர்களிடம் சுத்தமான களிமண் வாங்கி, அதைத் தேங்காய் ஓட்டில் போட்டு சுடுநீரில் குழைத்து இரவு படுக்கும் முன்பாக தொப்புளைச் சுற்றித் தடவிக் கொண்டு, காலையில் குளித்து விடவும். இதை வாரம் மூன்று முறைகள் செய்யலாம். முள்ளங்கி வேக வைத்த தண்ணீரில் சர்க்கரை சேர்த்துக் குடியுங்கள். உணவில் அடிக்கடி பயத்தம் பருப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடலாம். முடிந்தால் மண் சட்டியில் சமைத்து சாப்பிடவும். தினம் காலையில் கைப்பிடியளவு கொத்த மல்லித் தழையை பச்சையாக சாப்பிடவும். நாட்டு அவரைக்காய், பீன்ஸ், முருங்கைக்கீரை, கறிவேப்பிலை, வெந்தயக் கீரை போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும்.
——————————————
என் வயது 18. பூப்பெய்தி நான்கு வருடங்கள் ஆகிறது. என் மார்பகங்களில் காம்புகள் உள்ளே இழுத்த படி உள்ளன. நாளுக்கு நாள் மார்பகங்கள் சிறுத்துக் கொண்டே போகிறது. தீர்வு சொல்வீர்களா? -சுகன்யா, கோவை.

இது இன்வர்ட்டட் நிப்பிள்ஸ் எனச்சொல்லக் கூடிய பிரச்சினையாக இருக்கலாம். அப்படியிருப்பின் நீங்கள் கல்யாணமாகி, கர்ப்பம் தரிக்கும்போது மார்பகங்கள் பெரிதாகிற சமயத்தில் இந்தப் பிரச்சினை தானாகச் சரியாகும். மற்றபடி மார்பகங்களில் ஏதேனும் வீக்கம் இருக்கின்றனவா எனப் பாருங்கள். கட்டிகள் ஏதேனும் இருக்கின்றனவா எனத்தெரிய வேண்டும். நல்ல மகப்பேறு மருத்து வரை நேரில் கலந்தாலோசியுங்கள். வலி இருந்தாலும் உடனடி மருத்துவப் பரிசோதனை அவசியம். பிரசவத்துக்குப்பிறகு, குழந்தை தாய்ப்பால் குடிக்கிறபோது சரியாகும். கவலை வேண்டாம்.
———————————————————-
என் வயது 28. மார்பகங்கள் சிறியதாக இருப்பதால் கணவர் வெறுக்கிறார். மற்ற பெண்களுடன் சகவாசம் வைத்திருக்கிறார். மார்பகங்களைப் பெரிதாக்க ஏதேனும் மருந்தோ, சிகிச்சையோ இருந்தால் சொல்லுங்கள். வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொடுங்கள். – நிர்மலா தேவி, ரத்தினபுரி.

மார்பகங்களின் அளவு என்பது பரம்பரை வாகு, உடலமைப்பு போன்ற பல விஷயங்களைப் பொறுத்தது. மார்பகங்கள் என்பவை வியர்வை சுரப்பிகள் மாதிரி ஒரு வகை சுரப்பிகள் என்பதை உங்கள் கணவரிடம் சொல்லுங்கள். சரியான அளவுள்ள பிரா, உடற்பயிற்சி போன்ற சில விஷயங்கள் உங்கள் பிரச்சினைக்கு உதவும். மார்பகங்களைப் பெரிதாக்குவதாகச் சொல்லப்படும் மாத்திரைகள், மருந்துகள் போன்றவை பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அவையெல்லாம் ஆபத்தானவை. கணவரிடம் பொறுமையாகப் பேசிப் புரிய வையுங்கள்.

—————————————————–
என் வயது 30. உறவு குறித்து எனக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளன. என் கணவர் ஆபாச ஆங்கிலப் படங்களை டி.வியில் போட்டுக் காட்டி அதன்படி உறவு கொள்ள என்னையும் வற்புறுத்துகிறார். அதெல்லாம் அறுவருப்பானதில்லையா? உடல்நலத்தைப் பாதிக்காதா? நான் கர்ப்பமாக இருக்கிறேன். கர்ப்ப காலத்தில் எந்தெந்த மாதங்களில் உறவு கொள்ளலாம்? செக்ஸ் உணர்வு அதிகரிக்க எப்படிப்பட்ட உணவுகள் உட்கொள்ள வேண்டும்? – வ. குயிலி, தூத்துக்குடி.

உறவு அலுத்துப் போகாமலும், நெருக்கம் அதிகரிக்கவும் உங்கள் கணவரை மாதிரி செக்ஸில் புதுமைகளைக் கையாள்பவர்கள் உண்டு. அதில் உங்கள் இருவருக்கும் விருப்பம் இருக்கிற பட்சத்தில் தவறேதுமில்லை. உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. அதற்கு உடன்படுவதும், மறுப்பதும் உங்கள் தனிப்பட்ட விருப்பம். கர்ப்பம் தரித்த முதல் மூன்று மற்றும் ஏழாவது மாதம் முதல் பிரசவம் வரை உறவைத் தவிர்ப்பது பாதுகாப்பானது. இடைப்பட்ட மாதங்களிலும் பக்க வாட்டு, பின் பக்க நிலைகளில் வயிற்றுக்கு அதிக அழுத்தம் கொடுக்காத போஸ்களில் உறவு கொள்வதே பாதுகாப்பு. உடலுறவு என்பது மனம் சம்பந்தப்பட்ட விஷயம். எப்படிப்பட்ட ஆரோக்கியமான உணவும் ஆரோக்கியமான செக்ஸுக்கு உதவும். அதிகக் கலோரிகள் உள்ளவற்றைத் தவிர்க்கவும். மனம் ஆரோக்கியமாக இருந்தால், உறவும் நன்றாக இருக்கும்.

—————————————
நான் ஒரு கல்லூரி மாணவி. என் மார்புப் பகுதியில் கட்டிகள் மாதிரி இருக்கிறது. காம்புகள் உள் நோக்கி இருக்கின்றன. புற்று நோயாக இருக்குமோ என பயப்படுகிறேன். வீட்டில் சொல்லவும் பயமாக இருக்கிறது. மார்பகப் புற்று நோய்க்கு எங்கே சிகிச்சை அளிக்கிறார்கள்? எவ்வளவு செலவாகும்? – பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

தாமதிக்காமல் முதலில் மருத்துவரை அணுகுங்கள். அது புற்று நோய்தானா அல்லது வெறும் நீர்க் கட்டிகளா எனப்பாருங்கள். நீர்க் கட்டிகளாக இருந்தால், அவற்றை அகற்றுவது சுலபம். புற்றுநோய் என நீங்கள் சந்தேகப்படும் பட்சத்தில் உடனடியாக வீட்டில் விஷயத்தைச் சொல்லி சிகிச்சை மேற்கொள்ளுங்கள். தாமதித்தால், அது பரவி, மார்பகங்களையே அகற்றும் நிலை ஏற்படலாம். மகப்பேறு மருத்துவரை முதலில் போய் பாருங்கள். எல்லா மருத்துவமனைகளிலும் இன்று இதற்கான சிறப்பு மருத்துவர்கள் இருக்கிறார்கள்.

Previous articleதாம்பத்ய வாழ்கையில் திருப்தி இல்லாமல்அவதிப்படும் நபரா நீங்கள்..?
Next articleகட்டில் உறவில் நுழைவதும் அவ்வளவு சுலபம் அல்ல