Home இரகசியகேள்வி-பதில் நான் சுயஇன்பம் அனுபவிக்கிறேன் இதனால் பெண்ணுடன் உடலுறவு கொள்ள முடியுமா ?

நான் சுயஇன்பம் அனுபவிக்கிறேன் இதனால் பெண்ணுடன் உடலுறவு கொள்ள முடியுமா ?

153

சுய இன்பத்திற்கு அடிமையானவரா..?

மன அழுத்தம் மற்றும் பாலியல் டென்ஷன்களை நீக்க சுய இன்பம் காண்பது உதவுவதால், அது உடல் நலத்திற்கு நல்லது என பலரும் கூறுகின்றனர். ஆனால் சுய இன்பம் காண்பதால் அதற்கு நாம் அடிமையாகி விடுகிறோம் என்பதே உண்மையாகும். இதனால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நீங்கள் பல வலிகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
ஆய்வுகளின் படி, ஒரு வாரத்துக்கு 3 முதல் 7 தடவை வரை சுய இன்பம் காணலாம். ஆனால் இந்த கணக்கு அதிகரிக்கையில் தான் நீங்கள் அதற்கு அடிமையாகி விடுகிறீர்கள்.
அளவுக்கு அதிகமாக சுய இன்பம் காண்கையில் ஆண்கள் மற்றும் பெண்களின் பிறப்புறுப்புகளில் புண்களும் வீக்கமும் ஏற்படும். பல சூழ்நிலையில், அடிமையானது கட்டுக்கடங்காமல் போய் விட்டால், ஆண்களுக்கு விந்தணு சுரப்பது கடினமாகி விடும். அதற்கு காரணம் சீரான முறையில் சுய இன்பம் காண்கையில் விந்தணு எண்ணிக்கை குறையத் தொடங்கி விடும்.
தனிமையை தவிர்க்கவும்
தனிமையை தவிர்க்கவும். சுய இன்பம் காண்பதை நிறுத்துவதற்கான எளிய வழிகளில் இதுவும் ஒன்றாகும். நீங்கள் தனியாக இருக்கையில், பொழுதை கழிக்க இதில் எல்லாம் தான் கவனம் செல்லும்.
சீக்கிரமாக தூங்குதல்
அளவுக்கு அதிகமாக சுய இன்பம் காண்பதை நிறுத்த மற்றொரு வழி – சீக்கிரமாக தூங்குவது. ஆராய்ச்சிகளின் படி, நேரம் கழித்து தூங்கச் செல்பவர்களுக்கு நீல படம் பார்ப்பதிலும் காம புத்தகங்கள் படிப்பதிலும் ஈடுபாடு செல்லுமாம். இதனால் சுய இன்பம் காண்பது அதிகரிக்கும் தானே.
ஆன்மிகம் உதவும்
ஆன்மிகத்தில் ஈடுபட்டால் உங்கள் மனம் அமைதி பெறும். அதனால் ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டு இந்த தீய பழக்கத்தை கைவிட முயற்சி செய்யுங்கள்.
கைகளை சுறுசுறுப்பாக வைத்திடுங்கள்
கைகளை பிறப்புறுப்பு பகுதிக்கு கொண்டு போகாமால், எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும். அந்த உணர்வு வந்துவிட்டால், உடனே கைகளை கொண்டு சுத்தப்படுத்துதல், தோட்ட வேலை அல்லது வீடியோ கேம் விளையாடுவது போன்ற வேளைகளில் ஈடுபடுங்கள்.
அந்த பொம்மைகளை தூக்கி எறியுங்கள்
சுய இன்பம் காணும் பழக்கத்தை விடுவதில் நீங்கள் உறுதியாக இருந்தால், அந்த உணர்வை தூண்டும் பொம்மைகளை முதலில் தூக்கி எறியுங்கள். சில விலையுயர்ந்த பொம்மைகளை தூக்கி எறிய மனசு வராது தான். ஆனால் அது உங்கள் உடல் நலத்துக்கு நல்லதாச்சே.
குளிப்பது அந்த உணர்வை தூண்டுகிறதா?
குளியல் தொட்டி அல்லது ஷவரில் குளிக்கும் போது அந்த உணர்வை தூண்டுகிறதா? அப்படியானால் குளியலறையில் நீண்ட நேரம் செலவிடாதீர்கள்.
உணவு பழகத்தில் மாற்றம்
சுய இன்பம் காணும் பழக்கத்தை கை விட உங்கள் உணவு பழக்கத்தை மாற்றுவதும் கூட எளிய வழிகளில் ஒன்றாக விளங்குகிறது. மற்ற நடவடிக்கைகளில் வெற்றிகரமாக ஈடுபட, அதற்கு தேவையான ஆற்றல்களை பெறுவதற்கு அதற்கான உணவுகளை உண்ணுங்கள்.
தியானம்
தியானம் என்பது மனதுக்கும் உடலுக்கும் நல்லது. தியானத்தில் ஈடுபடும் போது, சுய இன்பம் அனுபவிப்பதை மறந்து பிற விஷயங்களை பற்றி சிந்திக்க, மனதும் உடலும் ஒத்துழைக்கும்.

ஹெச்ஐவி பாதித்த கணவருடன் ஆணுறை அணிந்து உடலுறவு செய்த பெண்ணுக்கு எய்ட்ஸ் வருமா?…

எனக்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் வரக்கூடாது. என் கணவர் ஹெச்.ஐ.வி. வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதால், ஆணுறையைப் பயன்படுத்தித்தான் உறவுகொள்கிறோம். அப்படியிருந்தும் எனக்கு ஹெச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டிருக்கிறது. பாதுகாப்பாக உறவு கொண்டும் நான் எப்படிப் பாதிக்கப்பட்டேன் என்பது புரியாமல் குழம்பித் தவிக்கிறேன். தெளிவுபடுத்த முடியுமா?
ஆணுறை இல்லாத மனிதன் அரை மனிதன் என்று சொல்லும் அளவுக்கு இன்று பாலியல் நோய்களைத் தவிர்க்க ஆணுறை அவசியமாகிறது.
கணவன் மனைவியே ஆனாலும் ஆணுறை இன்றி கலவிகொள்ளக்கூடாது என்று வலியுறுத்தும் அளவுக்குக் கலவி வழித் தொற்றுநோய்கள் பல உள்ளன.

ஆனால் சில சமயங்களில் மட்டமான லேட்டெக்ஸால் ஆன ஆணுறையை உபயோகிக்கும் போது அதில் ஒரு பொத்தலோ, கிழிசலோ இருந்தால் திரவங்கள் கசிந்து, நோய்த் தொற்றை ஏற்படுத்திவிடுகின்றன.
இதைத் தவிர்க்க நம்பகமான தயாரிப்பாளர்களின் ஆணுறைகளைப் பயன்படுத்துவது முக்கியம்.

சில சமயங்களில் ஆணுறையை எப்படி அணிந்து கொள்வது என்று தெரியாமல் எசகு பிசகாக மாட்டிக் கொள்கிறார்கள் சிலர். இதைப் பற்றி எல்லாம் ஆலோசனை வழங்க எல்லா அரசு மருத்துவமனைகளிலும் ஒருங்கிணைந்த தன்னார்வ ஆற்றுப்படுத்தல் மற்றும் பரிசோதனை மையங்கள் உள்ளன. இது மாதிரியான சந்தேகங்ளுக்கு பதில் சொல்வது தான் அவர்கள் வேலையே. அதனால் தயங்காமல், கவலைப்படாமல் ஆலோசகரைத் சந்தியுங்கள்.
ஆணுறையைச் சரியாக அணியும் முறை உட்பட பல முக்கிய தகவல்களைத் தருவார்கள். அதன்படி நடந்தால் நோ பிராப்ளம்!
ஆனால், உங்களுக்கு இப்போது துரதிர்ஷ்டவசமாக ஹெச்.ஐ.வி. கிருமி தாக்குதல் ஏற்பட்டுவிட்டது என்றாலும், கவலை வேண்டாம். எதிர்ப்பு ரெட்ரோ வைரல் தெரபி என்கிற ஏ.ஆர்.டி. சிகிச்சை எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகக் கிடைக்கிறது.
இந்த மருந்துகளை உட்கொண்டால் கிருமி பாதிப்பு நிலையை தவிர்த்து வரலாம். கூடவே கிருமி தாக்குதலுக்குள்ளான நபர்களை நல்வழிப்படுத்த தொண்டு நிறுவனங்கள் உள்ளன. அவற்றோடு இணைந்தால் வாழ்க்கை இலகுவாகும்.
———————
விந்து உடலில் தங்குவதால் பிரம்மச்சாரிகளுக்கு பாதிப்பு வருமா?

விந்து உடலில் தங்கினால் ஆபத்து என்று படித்தேன். அப்படியானால் பிரம்மச்சாரியாக சிலர் வாழ்வது எப்படி? அவர்களின் ஆணுறுப்பு ஆரோக்கியமாக இருக்குமா?
விந்து உடலில் தங்கினால் ஒரு ஆபத்துமில்லை. இது எல்லாம் அறியாமையினால், அந்த காலத்திலிருந்து நாம் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கும் ஜமக்காளத்தில் வடிகட்டிய முட்டாள் தனமான மூடநம்பிக்கை.
பிரம்மச்சாரிகளுக்கு உடலமைப்பும், விந்து வெளியேற்றும் பிறரைப் போல் தான் இருக்கும். அவர்களுக்கு மனக்கட்டுப்பாடு அதிகம். தட்ஸ் ஆல்!
மனதைக் கட்டுப்படுத்துவதுதான் ஆண்மையின் உச்சக்கட்ட அறிகுறி. ஆண்மை ரசாயனமான டெஸ்டோஸ்ட்ரானை நேர்த்தியாக அடக்கி ஆண்டால் மட்டுமே அது சாத்தியம் என்பதால் பிரம்மச்சாரிகளின் ஆண்மை ரொம்பவே அதிகமாகுமே தவிர குறையாது.
இது தவிர சில ஆண்களுக்கு மரபணு, உறுப்பு, ஹார்மோன் கோளாறுகள் காரணமாக அவர்களுக்கு தாம்பத்தியம் பிடிப்பதில்லை. இதுவெல்லாமே விருப்பத்தைப் பொறுத்த விஷயங்கள்தான்.
—————————
இந்த மாதிரி உடலுறவு கொண்டால் ஆண்குழந்தை பிறக்குமா?

ஆண் குழந்தையைப் பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். மாத்திரைகளின் மூலமாகவோ அல்லது உறவுகொள்ளும் முறையில் ஏதாவது மாற்றங்கள் செய்தோ அதை சாத்தியமாக்க முடியுமா?
ஆண் பிள்ளை பிறக்க வேண்டுமானால் அந்த குழந்தையின் 46 குரோமோஸோம்களில் ஒன்று ஒய் ரகமாக இருந்தாக வேண்டும். ஒய் குரோமோஸோம்தான் ஆண்மைப்படுத்தும் “சக்தி“ பெற்ற ஒரே குரோமோஸோம்.
இந்த ஒய் குரோமோஸோம் ஆணின் உடலில் மட்டும்தான் உற்பத்தி ஆகிறது என்பதால் பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று நிர்ணயிப்பது தந்தையின் விந்தணுக்கள்தானே தவிர தாயின் கருவணு அல்ல.
ஒய் குரோமோஸோம் கொண்ட விந்தணு போய் தாயின் கருமுட்டையோடு கலந்தால் ஆண் குழந்தை பிறந்துவிடும். ஆனால் ஆணின் உடலிலிருந்து வெளியேறும் விந்தணுக்களில் 50 சதவீதம் தான் ஒய் குரோமோஸோம் உள்ளவை. மிச்சமெல்லாம் எக்ஸ் குரோமோஸோம் உள்ளவை.
இந்த எக்ஸ், ஒய் ரக விந்து அணுக்களில் வெறும் ஒய் யை மட்டும் கருவோடு கலக்க வைத்தால் ஆண் பிள்ளைகள் பிறக்கலாம். ஆனால் இப்படி வெறும் ஒய் விந்தணுக்களைப் பிரித்தெடுத்து “ஆண்“ மட்டும் என்று பாராபட்சம் செய்ய முடியும் என்று பல போலி விளம்பரங்கள் இருந்தாலும் நடைமுறையில் இது சாத்தியமே இல்லை.

Previous articleஆண் பெண் நண்பர்கள் செக்ஸ் உறவு கொள்ளும் வீடியோ
Next article7 நாட்களில் கலராக என்ன செய்ய வேண்டும்?..