Home பாலியல் சுய இன்பத்தால் ஆரோக்கியத்திற்கு ஏதேனும் கேடு விளையுமா?

சுய இன்பத்தால் ஆரோக்கியத்திற்கு ஏதேனும் கேடு விளையுமா?

35

Penis,aankal ulladai,aanmai kuraivukku ,ankalin-karuvalam,suya inpam, aan suyainpam,vinthu kudithal,pen vinthu kudithal,penis big food,athika vinthu,naturel sperm pass,Curvature Of Penis,long penis, big penis,body welth.,sex tried,mastrubustion,சுய இன்பம் என்பது பாலியல் சார்ந்த ஒரு இயல்பான செயலே ஆகும், இது ஆரோக்கியத்திற்கு எவ்வித தீய விளைவுகளையும் ஏற்படுத்துவதாக இதுவரை அறியப்பட்டதில்லை.

சுய இன்பம் என்பது ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிப்பதல்ல. குற்ற உணர்ச்சி, பயம், மனக்கலக்கம் போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதுண்டு. ஆனால் இவை இயல்பானவை அல்ல. “சுய இன்பம் என்பது தவறு” அல்லது “உடல் நலத்திற்குக் கேடானது” என்பது போன்ற எண்ணங்களாலேயே இது போன்ற உணர்வுகள் உருவாகின்றன. மதங்களும் பண்பாடுகளும் சுய இன்பம் என்பதைக் கண்டிப்பதுடன் அதனை ஒரு பாவமாக அல்லது குரூரமான செயலாகச் சித்தரித்துள்ளன. இதே போன்ற எண்ணங்கள் பெற்றோர் மனதிலும் பெரியவர்கள் மனதிலும் பதிந்து, குழந்தைகள் வளரும்போது, சுய இன்பம் பற்றி ஒருவர் குற்ற உணர்ச்சி அடைகிறார். இது பொதுவாக பலரிடம் காணப்படுகிறது. அதுமட்டுமின்றி, சுய இன்பம் செய்வதால் உடல் நலம் கெட்டுப்போகும், உடல் பலவீனமடையும் அல்லது பிற உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என்பது போன்ற தவறான தகவல்களால் பயமும் மனக்கலக்கமும் ஏற்படக்கூடும். சுய இன்பம் சம்பந்தமாக நிலவிவரும் தவறான கருத்துகளையும் நம்பிக்கைகளையும் அகற்றி, சுய இன்பம் என்பது இயல்பான ஒரு செயல்தான் என்று வளரிளம் பருவத்தினருக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும், அதற்கு பாலியல் கல்வி மிகவும் முக்கியம் என்று பாலியல் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அதிகமாக சுய இன்பம் செய்தல் என்பது மற்றொரு பொதுவான பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது. அதீதமான சுய இன்பம் என்பதற்கான வரையறை எதுவும் இல்லை. ஒருவர் அளவுக்கு அதிகமாக முறை சுய இன்பம் செய்தால், அது வாழ்வின் சில அம்சங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம், அதுவே கவலையாக மாறலாம். மாற்றிக்கொள்ள முடியாத வழக்கமான பிற பழக்கங்களைப் (கம்பல்சிவ் பிஹேவியர்) போலவே மீண்டும் மீண்டும் சுய இன்பம் செய்வது உங்கள் வாழ்வில் குறுக்கிடலாம். இது போன்ற சூழ்நிலைகளில் அது வேறு ஏதோ பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். உதாரணமாக, அதிக மனக்கலக்கம் உள்ளவர் அதிலிருந்து விடுபடுவதற்காக சுய இன்பத்தை ஒரு வடிகாலாகப் பயன்படுத்தலாம். இந்தச் சூழ்நிலையில் இதற்குக் காரணமாக இருக்கும் மனக்கலக்கத்தை சரி செய்ய வேண்டும்.

சுய இன்பத்தின் போது சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். கிளிட்டோரிஸ் அல்லது பெண்ணுறுப்புப் பகுதிகளை கடுமையாகத் தேய்க்கவோ அடிக்கவோ கூடாது. அப்படிச் செய்வதால் ஏதேனும் தீங்கு ஏற்படலாம். லேசாகத் தேய்ப்பதால் அல்லது தூண்டுவதால் இப்பகுதிகளில் காயம் ஏதும் ஏற்படாது.
விரல்கள் அல்லது ஏதேனும் பொருள்களை பிறப்புறுப்பில் நுழைக்கும்போது, நோய்த்தொற்று எதுவும் வராமல் தடுக்க, தகுந்த சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். தீங்கு விளைவிக்கும் கிருமிகள் எதுவும் வராமல் தடுப்பதற்கு, கைகளையும் பாலியல் சாதனங்களையும் (செக்ஸ் டாய்ஸ்) சோப்பைப் பயன்படுத்தி வெந்நீரில் கழுவுவது முக்கியம்.

தூண்டுதலை ஏற்படுத்தவோ அல்லது பிறப்புறுப்பில் செருகவோ கூரான அல்லது குத்தக்கூடிய பொருள் எதனையும் ஒருபோதும் நுழைக்கக்கூடாது. அப்படிச் செய்வதால் காயம் ஏற்படலாம். கழன்று விழக்கூடிய சிறு பகுதிகளைக் கொண்ட பொருள் எதனையும் பயன்படுத்த வேண்டாம், அவை கழன்று விழுந்து பிறப்புறுப்பில் சிக்கிக்கொள்ளலாம். பிறப்புறுப்பில் காய்கள் கனிகள் எதனையும் செருக வேண்டாம், இவற்றால் நோய்த்தொற்று (இன்ஃபெக்ஷன்) ஏற்படலாம் அல்லது அவை உள்ளேயே உடைந்து சிக்கிக்கொள்ளலாம்.