Home பாலியல் 700 நாட்கள் சுய இன்பம் காணாமல் இருந்த ஆண், உடல மற்றும் மனதளவில் கண்ட மாற்றங்கள்!

700 நாட்கள் சுய இன்பம் காணாமல் இருந்த ஆண், உடல மற்றும் மனதளவில் கண்ட மாற்றங்கள்!

67

orgasm-face-575x356சுய இன்பம் என்பது ஆண், பெண் இருபாலினரிடமும் இருக்கும் ஒரு பொதுவான பழக்கம். இது பெரிய தீயப் பழக்கம் என கூறிவிட முடியாது. மேலும், அறிவியல் ரீதியாக இரு உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கிறது எனவும் சில ஆய்வறிக்கைகள் தெரிவித்துள்ளன.
உடல் அளவில் ஆரோக்கியம் அளிக்கிறது எனிலும், மனதளவில் எவ்வாறான தாக்கங்களை இது உண்டாக்குகிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். உங்கள் எண்ணங்கள் மற்றும் ஒரு வேலையின் மேல் நீங்கள் கொண்டிருக்கும் கவனத்தை சிதற வைக்க இது முக்கிய காரணியாக இருக்கிறது என்றும் சில உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இனி, 700 நாட்கள் சுய இன்பம் காணாமல் இருந்த ஆண், உடல மற்றும் மனதளவில் தான் கண்ட மாற்றங்கள் பற்றி கூறியுள்ளதை பார்க்கலாம்..

சய இன்பம் காண்பதை கைவிட்ட நாளில் இருந்து அதிக கூரிய கவனம் மற்றும் அமைதியை உணர்ந்ததாக அந்நபர் கூறியுள்ளார். தான் சூப்பர்பவர்களை உணர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிக தன்னம்பிக்கை, ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துதல், எனர்ஜி அதிகரித்தது, சிரத்தை எடுத்து வேலை செய்ய முடிந்தது எனவும், இவற்றை சூப்பர்பவராக கருதுகிறேன் என்றும் அந்நபர் தெரிவித்துள்ளார்.
செக்ஸ் பற்றிய எண்ணங்களை நான் கட்டுப்படுத்த துவங்கிவிட்டால், அதற்கு அப்பாற்பட்டு இருக்கும் உலகின் பல முக்கிய விஷயங்களில் நாம் கவனம் செலுத்த முடியும்.
பெண்களின் உடல் சார்ந்த எண்ணங்கள், இச்சை உணர்வுகளை கட்டுப்படுத்த ஆரம்பித்துவிட்டால், எந்த விஷயமாக இருந்தாலும், அதில் மாஸ்டராக திகழ முடியும் என அந்நபர் தெரிவித்துள்ளார்.
முன்பு நான் ஒரு நயவஞ்சகன் தான். வெளிப்படையாக உண்மையை பேசமாட்டேன், மற்றவரிடம் கூறுவது போல நடந்துக் கொள்ள மாட்டேன். ஆனால், நான் சுய இன்பம் காணுவதை கைவிட்ட நாளில் இருந்து நான் அடிக்ட் மற்றும் காதல் கொள்ள இந்த உலகில் நிறைய நல்ல விஷயங்கள் இருப்பதை உணர்ந்தேன்.
ஒவ்வொரு முறையும் மீண்டும் கைவிட்டதை தொடரலாம் என எண்ணம் வரும் தருணத்தில், அதை தவிர்த்து வேறு பாதையை தேர்வு செய்யும் போது, நான் அதிக தன்னம்பிக்கையை உணர்ந்தேன். மொபைல் பார்ப்பது, வேறு யாருடனாவது பேசுவது என எண்ணத்தை திசை திருப்பினேன்.

நம் வாழ்வில் நமக்கு சுய மரியாதையை விட, வேறு எதுவும் பெரிய சந்தோசத்தை கொடுத்துவிடாது என்பதை யும் இந்த நாட்களில் நான் பெரிதாக உணர்ந்தேன். சய இன்பம் காணுதல் மட்டுமல்ல, வேறு எந்த தீய பழக்கமும் உங்களுக்கு சுய மரியாதை தரும் அளவிற்கு சந்தோசத்தை அளிக்காது.

பலரும் சுய இன்பம் காணுதல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும் பழக்கம் என கூறுவார்கள். இது அறிவியல் ரீதியாக உண்மை என்ற போதிலும், இது தேவையற்ற அடிக்ஷன் என்று தான் நான் எண்ணுகிறேன் என அந்நபர் கூறியுள்ளார்.
நாம் அடிக்ஷனாக எடுத்துக் கொள்ள வேண்டிய பல நல்ல விஷயங்கள் இருக்கும் போது சுய இன்பம் காணுதல் அவசியமில்லை என இந்த 700 நாட்களில் உணர்ந்தேன். மன நிம்மது, மன தைரியம், தன்னம்பிக்கை, உடல் ரீதியாக, மன ரீதியாக பலசாலியாக உணர்கிறேன்.
இதை தவிர வேறு என்ன வேண்டும். இந்த சின்ன விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இறுகக் முடியவில்லை எனில், வேறு எந்த விஷயத்தில் நாம் நம்மை கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்.

Previous articleபெண்களின் கருவளத்தை அழிக்கும் விஷயங்கள்!
Next articleகாதலியை நண்பருக்கு விருந்தாக்கிய காதலன் குமரி மாவட்டத்தில் அதிர்ச்சி..!