Home சூடான செய்திகள் டாட்டூவில் டாப் நடிகைகளை முந்துகிறார் ஸ்ருதி..!

டாட்டூவில் டாப் நடிகைகளை முந்துகிறார் ஸ்ருதி..!

47

உடலில் டாட்டூ வரைந்துகொள்வதில் மற்ற நடிகைகளை முந்துகிறார் ஸ்ருதிஹாசன். பிடித்தவர்கள் பெயரையோ அல்லது உருவத்தையோ டாட்டூவாக வரைந்துகொள்வதில் போட்டியில் குதித்திருக்கின்றனர் பாலிவுட் ஹீரோயின்கள்.

அவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல் கோலிவுட் ஹீரோயின்களும் டாட்டூ ரசிகைகள் ஆகி இருக்கின்றனர். திரிஷா, நயன்தாரா, ஸ்ரேயா, ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன் போன்றவர்கள் டாட்டூ வரைந்திருக்கின்றனர். இவர்களில் தற்போது முதலிடத்தை பிடித்திருக்கிறார் ஸ்ருதி ஹாசன். ஏற்கனவே 4 டாட்டூ வரைந்திருந்தவர் தற்போது 5வது டாட்டூ வரைந்திருக்கிறார்.

இது பற்றி அவர் கூறும்போது, ‘ஏற்கனவே நான் சிறிய அளவில் ரோஜா மலர் டாட்டூ வரைந்தேன். தற்போது பெரிய அளவில் ரோஜா வரைந்துக்கொண்டிருக்கிறேன். இது என்னுடைய 5வது டாட்டூ. ஏற்கனவே தமிழில் முதுகு பகுதியில் என் பெயரை பச்சை குத்தி இருக்கிறேன். அடுத்து என் கால் பகுதியில் ரைஸ் (எழு) என்ற வார்த்தையை வரைந்திருக்கிறேன் என்றார்.