Home சமையல் குறிப்புகள் சுறா புட்டு செய்வது எப்படி ?

சுறா புட்டு செய்வது எப்படி ?

72

சுறா புட்டு செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

சுறா மீன் – 1/4 கிலோ
வெங்காயம் – 2
இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை – சிறிதளவு
கடுகு – 1 டீஸ்பூன்
மஞ்சளதூள் – சிறிதளவு
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை

சுறா மீனை சுத்தம் செய்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.
ஆறியதும் சுறா மீனின் தோலை நீக்கிவிடுங்கள்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு இட்டு பொரிந்ததும் பொடியாக பச்சை மிளகாய், வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

பின்னர், இஞ்சி, பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்தது நன்றாக வதக்கவும்.

பிறகு, அடுப்பின் தீயை குறைத்து அதில், தோலுரித்து வைத்துள்ள சுறா மீனைச் சேர்த்து அது உதிரி உதிரியாக வரும் வரை கிளறி விடவும்.

அதன் மேலாக கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை தூவி விட்டு இறக்கவும்.

நாக்கை சுண்டியிகுக்கும் சுறா புட்டு ரெடி!