Home பெண்கள் அழகு குறிப்பு வெயில் காலத்திலும் முகம் பளிச்சென்று பிரகாசிக்க சிறந்த டிப்ஸ் !

வெயில் காலத்திலும் முகம் பளிச்சென்று பிரகாசிக்க சிறந்த டிப்ஸ் !

105

எல்லாருக்குமே தங்களுடைய முகம் ஜொலிக்க வேண்டுமென்று தான் ஆசை. ஆனால் வெயில், மழை, குளிர் என பருவு கால மாற்றங்களாலும் நாம் அழகுக்காக பயன்படுத்துகிற செயற்கைப்பொருள்களும் நம்முடைய இயற்கையான அழகையே கெடுத்து விடுகின்றன. ஏராளமான அழகு சாதன பொருட்கள், க்ரீம்கள், பேக்குகள் என்று எதை எதையோ ட்ரை பண்ணுவதையும் அவர்கள் விடுவதில்லை.

ஆனால் இந்த மாதிரியான பொருட்களில் நிறைய கெமிக்கல்கள் கலந்து இருக்கலாம். இவை உங்களுக்கு ஒரு நிரந்தர பயனை தராது. உங்களுக்கு நிரந்தர ஆரோக்கியமான சருமம் வேண்டுமென்றால் கண்டிப்பாக இயற்கை வழிகளை பின்பற்றுங்கள். இதனால் உங்கள் சருமத்திற்கும் எந்த வித பாதிப்பும் இல்லாமல் பளபளக்கும் முக அழகை பெற இயலும். சரி வாங்க! இதோ உங்கள் முகத்தை ஜொலிக்க வைப்பதற்கான இயற்கையான பேஸ் பேக்குகள் ரெடி! ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க…

திராட்சை பழங்கள்
கொஞ்சம் திராட்சை பழங்களை எடுத்து நன்றாக பிசைந்து, அதில் உள்ள கொட்டைகளை நீக்கிவிட்டு, உங்கள் முகத்தில் அப்ளை செய்யுங்கள். கொஞ்சம் நேரம் கழித்து அலசினால் கண்ணாடி போல் உங்கள் முகம் பளபளக்கும். கொட்டையுடன் உள்ள கருப்பு திராட்சையைப் பயன்படுத்துங்கள். அதிலதான் சதைபற்று குறைவாகவும் நீர்த்தன்மை அதிகமாகவும் இருக்கும்.

வெள்ளரிக்காய் ஜூஸ்
வெள்ளரிக்காய் ஜூஸ், கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் இவற்றை ஒன்றாகக் கலந்து முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள். சூரிய ஒளியில் இதை உபயோகிக்க வேண்டாம். காலையிலோ அல்லது மாலை நேரங்களிலோ இதை செய்யுங்கள். ரோஜா இதழ்கள் போன்ற பட்டு போல பளபளப்பான சருமத்தை பெறுவீர்கள்.

சந்தன பொடி
ஒரு ஸ்பூன் சந்தன பொடி, அரை ஸ்பூன் மஞ்சள் மற்றும் பால் சேர்த்து நன்றாக பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ளவும். இதைக் கொண்டு முகத்தில் பேக் போட்டு வந்தால் உங்கள் முகம் புத்துணர்வோடு ஜொலி ஜொலிக்கும். தினமும் இரவு நேரத்தில் போட்டால், நீண்ட நேரம் அதை முகத்தில் அப்படியே வைத்திருக்க முடியும். ஒரு மணி நேரம்வரை இதை முகத்தில் வைத்திருக்கலாம்.

தேன் – க்ரீம்
தேன் மற்றும் க்ரீம் சேர்த்து தயாரிக்கும் பேஸ்ட் குளிர்காலத்தில் சருமத்திற்கு சிறந்தது. இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி வந்தால் சருமம் மென்மையாகவும் புத்துயிர் பெற்று காணப்படும். ஆனால் இதை வெயில் காலத்திலும் பயன்படுத்தலாம். குறிப்பாக, இது வெயில் மற்றும் குளிரால் உண்டாகும் சரும வறட்சியைத் தடுக்கும்.

ப்ரஷ் மில்க் – லெமன் ஜூஸ்
சுத்தமான பால், அதனுடன் கொஞ்சம் உப்பு மற்றும் சில துளிகள் லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாகக் கலந்து முகத்தில் தடவி வர சரும துளைகள் திறந்து,அழுக்குகள் வெளியேற்றப்படும். இதனால் முகம் மாசு மருவற்று தூய்மையாக காணப்படும்.

தக்காளி ஜூஸ்
தக்காளி ஜூஸூடன் லெமன் ஜூஸையும் கலந்து முகத்தில் தடவும் போது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து மிருதுவான ஜொலிப்பான முகம் கிடைக்கும்

மஞ்சள் தூள் – கோதுமை மாவு
மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன், கோதுமை மாவு அரை ஸ்பூன் மற்றும் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் இவற்றை நன்றாகக் கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் நீங்கி முகத்திற்கு அழகான நிறம் கிடைக்கும்.

முட்டைக்கோஸ் ஜூஸ் – தேன்
முட்டைக்கோஸ் ஜூஸூடன் கொஞ்சம் தேன் கலந்து முகத்தில் அப்ளே செய்தால் சரும சுருக்கங்கள் மறைந்து முகம் இளமையாக ஜொலிக்கும். ஆனால் முட்டைகோஸ் கொஞ்சம் நாற்றமடிக்கும். அதனால் யாருக்கும் அவ்வளவாகப் பிடிக்காது. ஆனால் முகம் அழகாக வேண்டுமென்றால் சிறிது நேரம் அதை பொறுத்துக் கொள்ளலாமே.

காரட் ஜூஸ்
காரட் ஜூஸை நேரடியாக முகத்தில் அப்ளே செய்யும் போது நல்ல நிறத்துடன் பளபளப்பை பெறுவீர்கள். இதனுடன் வேறு எதுவும் கலக்கவே தேவையில்லை. சருமத்தில் பளபளப்பும் கொஞ்சம் நீர்ச்சத்தும் அதிகமாக இருக்க வேண்டுமென்று நினைத்தால், அதில் இரண்டு துளிகள் மட்டும் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

கடலை எண்ணெய் – லெமன் ஜூஸ்
கடலை எண்ணெய் மற்றும் லெமன் ஜூஸை கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள் எல்லாம் மாயமாய் போகும். முதலில் கடலை எண்ணெயில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து ஸ்பூனால் நன்கு அடித்தால், லேசாக நுரைபோல பிசுபிசுவென்று இருக்கும். சங்கடப்படாமல் முகத்தில் அப்ளை செய்து பாருங்கள். நீங்களு வியந்து போவீர்கள்.

கற்றாழை ஜூஸ்
வெயிலால் முகத்தில் உண்டாகும் கருமை நிறத்திட்டுகளைப் போக்குவதில் கற்றாழையை மிஞ்ச வேறெதுவும் இல்லை. இந்த கற்றாழை ஜூஸை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வர சருமம் நல்ல ஈரப்பதத்துடன் இருக்கும். முகம் பளிச்செனவும் மாசு மருக்கள் இல்லாமலும் இருக்கும்.

முல்தானி மெட்டி
முல்தானி மெட்டி உடனடியாக நல்ல பலனை சருமத்துக்குத் தரும். ஆனாலும்கூட, வெறும் முல்தானி மெட்டியைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, ரோஜா இதழ்கள் மற்றும் வேப்பிலை பொடி சேர்த்து ரோஸ் அல்லது லெமன் வாட்டர் கலந்து முகத்தில் பூசி வர மற்றவர்கள் கண்டு வியக்கும் அழகை பெறுவீர்கள்.

இலந்தம் பழம் – யோகார்ட்
இலந்தம் பழம் மற்றும் யோகார்ட் சேர்த்து கலந்து முகத்தில் தடவி வர புத்துணர்வான முக அழகை பெறுவீர்கள். உங்கள் சருமம் வறண்ட சருமமாக இருந்தால் அதனுடன் சில துளிகள் தேன் சேர்த்து உபயோகித்து கொள்ளுங்கள்