Home பெண்கள் உடல் கட்டுப்பாடு பெண்களே உங்கள் இடுப்பை வலுவாக்கும் உளுந்து சாதம்!

பெண்களே உங்கள் இடுப்பை வலுவாக்கும் உளுந்து சாதம்!

21

இடுப்பு வலியால் அவதிப்படும் பெண்கள் தற்போதைய சூழலில் அதிகரித்த வண்ணம் இருக்கின்றனர். இடுப்பை வலுவாக்கும் உளுந்து சாதம் செய்வது எப்படி என்பது பற்றி காணலாம்.

தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி – ஒரு கப்

உடைத்த கறுப்பு உளுந்து – அரை கப்

கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்

பூண்டு – 2 பல்

இஞ்சி – சிறு துண்டு

பச்சை மிளகாய் – 4

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

உளுந்துப்பொடி – ஒரு டீஸ்பூன்

உடைத்த முந்திரி – ஒரு டேபிள் ஸ்பூன்

தாளிக்க வேண்டியவை

சீரகம் – ஒரு டீஸ்பூன்

கடுகு – கால் டீஸ்பூன்

உடைத்த உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்

ஓமம் – கால் டீஸ்பூன்

நெய் – ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

செய்முறை

ஒரு பாத்திரத்தில் உளுந்தை எடுத்து தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

இதனோடு, சாதம் வைத்து அதனை பொலபொலவென்று வடித்து ஆறவைக்கவும்.

இதனிடையே, ஊறிய உளுந்தின் நீரை வடித்துவிட்டு, கொத்தமல்லித்தழை, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்துக் அரைகுறையாக அரைக்கவும்.

பின்னர், வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் தாளிக்க வேண்டியதைச் சேர்த்து தாளிக்கவும்.

மிதமான சூட்டில் அரைத்தவற்றைச் சேர்த்து கிளறி பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைக்கவும். அதிக நேரம் உளுந்தை வதக்கினால் உளுந்து மொறுமொறுப்பாகி விடும்.

ஏற்கனவே தயார் செய்த சாதத்தில் தேவையான உப்பு, வதக்கிய மசாலாவைச் சேர்த்துக் கிளறி உளுந்துப் பொடியைத் தூவவும்.

பரிமாறும் முன் நெய்யில் கறிவேப்பிலை, முந்திரியை வறுத்து சாதத்தில் சேர்க்கவும். பின்னர், கொத்தமல்லித்தழை தூவ வேண்டும்.

உளுந்து சாதம் ரெடி!