Home ஆண்கள் இதை நிங்கள் செய்யாவிட்டால் விந்து இல்லை ஆண்களே

இதை நிங்கள் செய்யாவிட்டால் விந்து இல்லை ஆண்களே

126

சிறியவர்களோ பெரியவர்களோ யாராக இருந்தாலும் சரி அவர்களு அவசியமான ஓர் சத்து என்றால் ஜிங்க் குறிப்பிட வேண்டும். ஏன் இதனை மிகவும் அத்தியவசியமானது என்று சொல்கிறார்கள் தெரியுமா? ஒவ்வொரு எலும்பு, செல்,தசை என எங்கும் பரவியிருக்கிறது. அவற்றின் சீரான வளர்ச்சிக்கும், துரிதமான இயக்கத்திற்கும் ஜிங்க் மிகவும் அவசியமானதாகும். ஆனால் பெரும்பாலான மக்கள் தங்கள் உடலில் ஜிங்க் பற்றாகுறையினால அவதிப்படுகிறார்கள். ஜிங்க் நிறைந்த எண்ணற்ற உணவுகள் கிடைக்கிறது. ஆனால் அதனைப் பற்றிய விழிப்புணர்வு யாருக்கும் இருப்பதில்லை. மேலும் ஜிங்க் பற்றாகுறையினால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது என்பதையும் சரியாக அறியாததால் ஜிங்க் பற்றாகுறை குறித்த விழிப்புணர்வு இல்லாது தங்களது உடல் நலனை கெடுத்துக் கொள்கிறார்கள்.

ஜிங்க் : உலகில் மக்கள் நோய்வாய்படுவதற்கு ஐந்தாவது முக்கியக் காரணியாக இருப்பது இந்த ஜிங்க் பற்றாகுறை தான். வளரும் நாடுகளில் பிறக்கும் குழந்தைகள் நோய்வாய்ப்படுவது, நிமோனியா, வயிற்றுப் போக்கு ஆகிய பிரச்சனைகளால் பாதிக்கப்படுவது ஆகியவை போன்றவற்றுக்கும் ஜிங்க் பற்றாகுறை தான் காரணமாக இருக்கிறது. ஆப்ரிகா ஆசியாவின் தென்கிழக்கு பகுதிகளில் ஜிங்க் பற்றாகுறையினால் மரணம் கூட ஏற்படுகிறது. powered by Rubicon Project இதனை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை பெற வேண்டியது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். ஜிங்க் பற்றாகுறையின் ஆரம்ப கால அறிகுறிகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி : ஜிங்க் பற்றாகுறை இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானதாக இருக்கும். அடிக்கடி காய்ச்சல்,தலைவலி, வயிற்று வலி போன்றவற்றினால் அவதிப்படுவீர்கள். உடலில் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமெனில் ஜிங்க் மிகவும் அவசியமான ஒன்றாகும். அதோடு உடலில் இருக்கும் செல்களுக்கும் இது பாதுகாப்பு அளிக்கும். உடலில் ஹார்மோன்கள் சுரப்பதற்கும் , வெள்ளையணுக்கள் உற்பத்தியாவதற்கும் ஜிங்க் மிகவும் அவசியமாக இருக்கிறது.

வயிற்றுப் போக்கு : ஜிங்க் பற்றாகுறையிருந்தால் உங்களுக்கு அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படும். பொதுவாக இந்தப் பிரச்சனை அதிகமாக பிறந்த குழந்தைகளை தாக்குகிறது. ஆறு மாத குழந்தைக்கு வயிற்றுப் போக்கு தொடர்ந்து ஜிங்க் சப்ளிமெண்ட் கொடுக்கலாம். அதற்கு முன்னால் கொடுக்கக்கூடாது. அதோடு எவ்வளவு டோசேஜ் கொடுக்க வேண்டும் என்பதை குழந்தைகள் நல மருத்துவரிடம் ஆலோசனை பெற்றிடுங்கள்.

முடி கொட்டுதல் : ஜிங்க் உடலில் குறைவாக இருந்தால் ஹைப்போதைராய்டு உண்டாகும். அதோடு முடி வலுவிழுந்து அதிகப்படியாக கொட்ட ஆரம்பிக்கும். இவர்கள் தைராய்டிற்காக மட்டும் மாத்திரை சாப்பிட்டால் போதாது ஜிங்க் மாத்திரையையும் எடுத்துக் கொள்ள வேண்டும். போதுமான அளவு ஜிங்க் கிடைத்துவிட்டதென்றால் முடி கொட்டுவது தானாய் நின்றுவிடும். சிலருக்கு இது சருமப்பிரச்சனை,அலர்ஜி,சருமம் தடித்தல் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்திடும்.

அலர்ஜி : ஜிங்க் பற்றாகுறை இருந்தால் அதிக சென்ஸிடிவாக இருப்பீர்கள். லேசான தூசிக்கு கூட மூக்கொழுகுதல்,தும்மல் போன்ற பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படும். ஜிங்க் உடலில் குறைந்தால் அது ஹிஸ்டமின் என்ற அளவினை அதிகப்படுத்தும் இதனால் தான் தும்மல்,மூக்கு ஒழுகுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

சருமம் : நோய் எதிர்ப்பு சக்திக்கும், வளர்ச்சிக்கும் ஜிங்க் மிகவும் அவசியமான ஒன்றாகும். அவை பற்றாகுறையாகும் போது அது சருமத்தில் உள்ள திசுக்களை பாதிப்படையவிஅக்கிறது. இதனால் சருமத்தில் பருக்கள்,கரும்புள்ளிகள் ஆகியவை தோன்றிடும். அதோடு சருமம் வறட்சியடையும், சீக்கிரத்திலேயே சுருக்கங்கள் விழுந்திடும்.

பசியின்மை : சரியான நேரத்திற்கு உணவு செரித்து பசியெடுக்காது. ஏனென்றால் ஜிங்கில் இருக்கக்கூடிய என்சைம்கள் தான் சுவை மற்றும் வாசனைக்கு காரணமாய் இருக்கும். அவை குறையும் போது உணவின் சுவை எதுவும் உங்களுக்கு தெரியாது. இதனாலும் உணவின் மீது உங்களுக்கு ஆர்வம் குறைந்திடலாம். பசியில்லாமல் நேரம் மாற்றி நேரம் உணவினை உட்கொள்வீர்கள். இதனால் உணவு செரிமான பாதிக்கப்பட்டு வயிற்றுக் கோளாறுகளுக்கு ஆளாக நேரிடும்.

ஹைபோகோனாடிசம் : போதுமான அளவு டெஸ்டிரோன் உற்பத்தி ஆகாது. பாலியல் இச்சையை தூண்டக்கூடிய ஹார்மோன்கள் சுரப்பதில் சிக்கல்கள் உண்டாகும்.ஆண் பெண் இருபாலருக்கும் இந்தப் பிரச்சனை ஏற்படக்கூடும் என்றாலும் ஆண்களுக்கு அதிகமாக ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. உடலுக்கு உள்ளே ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் அளவு குறையும். இதனால் முழுதாக மூச்சை இழுத்து விட முடியாமல் மூச்சுத்திணறல் உண்டாகும். மாலைக் கண் நோய் : இருட்டில் பார்வை துல்லியமாக தெரியாமல் போகும். கண்களின் ஆரோக்கியத்திற்கு ஜிங்க் மிகவும் அவசியமான ஒன்றாகும். வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய பார்வை தொடர்பான குறைபாடுகளை தவிர்க்க முடியும். கண்களுக்கு விட்டமின் ஏ எவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறதோ அதேயளவு முக்கியத்துவம் ஜிங்கிற்கும் தரப்பட வேண்டும்.

மனம் : ஜிங்க் பற்றாகுறை இருந்தால் மன அழுத்தம், திடீரென்று கோபம்,தாழ்வு மனப்பான்மை ஆகியவை ஏற்படும். நிலையான ஒர் முடிவை உங்களால் எடுக்க முடியாது. கூர்ந்து ஒரு விஷயத்தில் உங்களால் கவனம் செலுத்த முடியாது. மூட்டு வலி : மூட்டுப் பகுதிகளில் தொடர்ந்து வலி அதிகரித்துக் கொண்டே சென்றால் ஜிங்க் பற்றாகுறை ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு ஜிங்க் மிகவும் அவசியமானதாகும். ஜிங்க் குறையும் பட்சத்தில அவை வலியை கொடுக்கும். அதைவிட ஜிங்க் இருந்தால் மட்டுமே உணவிலிருந்து கிடைக்கக்கூடிய கால்சியத்தினை எலும்புகள் கிரகத்திக் கொள்ள முடியும்.

எடை குறைவு : ஜிங்க் பற்றாகுறை இருந்தால் அதிகப்படியாக எடை காரணமே இல்லாமல் குறையும். கர்பிணிகள் இந்தப் பிரச்சனையினால் பாதிக்கப்பட்டால் குழந்தை அண்டர்வெயிட்டில் பிறக்கவும் வாய்ப்புண்டு. அதோடு எப்போதும் நீங்கள் சோர்வாகவே உணர்வீர்கள். ஜிங்க் பற்றாகுறை என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும், அவர்களது உணவுப்பழக்கம்,வாழ்க்கை முறைக்கு ஏற்ப இந்த விஷயம் வேறுபடும்

Previous articleஆண்களின் ஆணுறுப்பின் விந்துகுழாய் பிரச்சனை
Next articleஉடலுறவு முடிந்த உடன் கால்களை துக்கி பிடியுங்கள் – இதற்க்கு பின்னாடி இவ்வளவு இருகிறதா ?