Home பாலியல் செயற்கை மார்பக அறுவை சிகிச்சையால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் !

செயற்கை மார்பக அறுவை சிகிச்சையால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் !

29

தற்போது செயற்கை மார்பக சிகிச்சைகள் அதிகளவில் செய்யப்படுகின்றன. இந்த அறுவை சிகிச்சையின் போது, செயற்கையான இழை உங்களுடைய மார்பின் மேலாக பொருத்தப்படுகிறது.

இவ்வாறு பொருத்தப்படும் இழைகளின் தன்மையைப் பொறுத்து செயற்கை மார்பகங்கள் சிலிக்கான் மற்றும் சலைன் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன.

சிலிக்கான் மார்பக சிகிச்சையில் பயன்படுத்தப்படும் செயற்கை இழையில் சிலிக்கான் ஜெல் அடைக்கப்பட்டு மார்பகங்களில் பொருத்தப்படுகின்றன.

சிலிக்கான் ஜெல் அடைக்கப்பட்ட ஓடுகள் பெண்களின் செயற்கை மார்பக அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகின்றன.

சலைன் வகை அறுவை சிகிச்சையில், உப்பு நீர்; கொண்ட செயற்கைப் பொருளை சிலிக்கான் ஓடுகளில் அடைத்து பயன்படுத்துகிறார்கள். மார்பக அறுவை சிகிச்சைகளில் சிலிக்கான் வகை அறுவை சிகிச்சையை விட சலைன் வகை (உப்பு நீர்) அறுவை சிகிச்சையே சிறந்த வழிமுறையாக கருதப்படுகிறது.

சுலைன் வகை அறுவை சிகிச்சையின் போது பெருமளவு அபாயங்கள் தவிர்க்கப்பட்டாலும், அதை 100% பக்க விளைவுகள் இல்லாத சிகிச்சை என்று சொல்ல முடியவில்லை. செயற்கை மார்பக சிகிச்சைகள் செய்வதால் ஏற்படும் சில மோசமான விளைவுகளை பார்க்கலாம்..

1. மார்பக அறுவை சிகிச்சை செய்யும் பெண்கள் எதிர் கொள்ளும் முதன்மையான பிரச்சனையாக இருப்பது ‘லீக்கேஜ்’. அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டு பொருத்தப்படும் சிலிக்கான் அல்லது சலைன் ஒழுகத் தொடங்கி, மார்பில் அதன் விளைவுகளை காட்டத் தொடங்கும்.

இதன் காரணமாக மயக்க உணர்வு, நரம்புகளில் எரிச்சல் மற்றும் குமட்டல் போன்ற விளைவுகள் ஏற்படும். சலைன் வகை செயற்கை மார்பகத்தில் கோளாறுகள் ஏற்படும் போது அது பாக்டீரியாவை உருவாகவும், உடலில் அச்சுகள் உருவாகவும் வகை செய்யும்.

2. மார்பக அறுவை சிகிச்சை செய்வதால் மார்பகங்கள் ஒரே அளவாக இல்லாமல் போகவும் கூடும். அறுவை சிகிச்சையால் மார்பகங்களின் வடிவம் மற்றும் அளவுகள் மாறிவிடும். இந்த சிகிச்சை தவறாக முடியும் போது, இயற்கையான மார்பகங்களுக்கு உள்ள அழகு பாழ்பட்டுவிடுகிறது.

3. ஒவ்வொரு முறை மார்பக அறுவை சிகிச்சை செய்யும் போதும், அதை 7-8 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சரி செய்ய வேண்டும். மேலும், அது நிலையாக பயன்படுத்தப்படுவதாக இல்லாமல், மாற்றக் கூடியதாக இருக்கும். இந்த செயற்கை மார்பகங்களில் விரிசல்கள் ஏற்படவோ அல்லது ஒழுகல் ஏற்படவோ வாய்ப்புகள் உண்டு.

செயற்கை மார்பகங்களில் விரிசல்கள் ஏற்படுவது அவற்றின் முதன்மையான குறைபாடுகளில் ஒன்றாக உள்ளது. மார்பக ஓடுகளில் விரிசல்கள் ஏற்படுவதால் சிலிக்கான் ஜெல் அல்லது உப்பு நீர் ஆகியவை உடலில் ஓடத் துவங்குகின்றன. மேலும், இந்த விரிசல் எந்தவித அறிகுறியையும் வெளியே காட்டுவதில்லை.

4. மார்பக அறுவை சிகிச்சை செய்த இடத்தில் தழும்புகள் ஏற்படும். இந்த தழும்புகள் வாழ்நாள் முழுமையும் மறையாமல் நீடித்திருக்கும். தங்களுடைய மார்பக அறுவை சிகிச்சையை மறைக்க நினைக்கும் பெண்களுக்கு இது ஒரு பெருத்த பின்னடைவாக இருக்கும்.

5. இயற்கையாகவே நியூரோடாக்ஸின் உள்ள பொருட்களை கொண்டே செயற்கை மார்பகம் தயாரிக்கப்படுகிறது. எனவே, சிலிக்கான் ஜெல்லின் உள்ள சில குணங்கள் அது ஒழுகும் வேளைகளில் நரம்பு மண்டலத்தை பாதிக்கச் செய்கின்றன.

6. மார்பக சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சிலிக்கான் ஜெல் கார்சினோஜெனிக் என்ற இயற்கையான பொருளைக் கொண்டிருக்கிறது. இந்த பொருள் மார்பக புற்று நோய் வர காரணமாக இல்லாவிட்டாலும், வயிற்று புற்று நோய், குடல் புற்று நோய் மற்றும் வேறு பல வகையான புற்று நோய்கள் வரக் காரணமாக உள்ளது. உடலில் ஒழுகி ஓடும் சிலிக்கான் பல்வேறு தீய விளைவுகளின் தொடக்கமாக இருக்கும்