Home ஆண்கள் ஆண்குறி சிறிதாக இருக்க ஏதும் தாம்பத்திய பிரச்னை வருமா ?

ஆண்குறி சிறிதாக இருக்க ஏதும் தாம்பத்திய பிரச்னை வருமா ?

119

என் உறுப்பின் அளவு மிகச் சிறியதாக இருக்கிறது. திருமணமானால் என்னால் என் மனைவியைத் திருப்திப்படுத்த இயலுமா?

சிறியது என்று நீங்களே முடிவு செய்துவிட்டால் எப்படி? பொதுவாக தளர்ந்த நிலையில் மூன்றரையிலிருந்து நாலரை இன்ச்சும், விறைப்புற்ற நிலையில் 5-7 இன்ச்சும்தான் இப்பாகத்தின் சராசரி நீளம். இதைவிட ஒரு இன்ச் அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தாலும் எந்தப் பாதகமும் இல்லை.

இந்தக் கணக்குப்படி, ஒரு வேளை உங்கள் பாகம் சற்றே சிறியதாக இருந்தாலும் அதைப் பற்றி இவ்வளவு கவலைப்பட என்ன அவசியம்? நீங்கள் செக்ஸில் முழுமையாக ஈடுபட, அளவு ஒரு பிரச்னையே அல்ல. அதோடு, ஆணுறுப்பின் நீளத்துக்கும், பெண்ணின் சுகத்துக்கும் பெரிய தொடர்பில்லை. பெண்ணின் யோனிக் குழாயின் முதல் இரண்டு இன்ச் உட்தோலுக்குத்தான் சுகம் உணரும் தன்மையுண்டு. எனவே, ஆணின் குறி எவ்வளவு நீளமாக இருந்தாலும் முதல் இரண்டு இன்ச் மட்டும்தான் கலவி சுகத்துக்குத் தேவை.

இன்னொன்றையும் புரிந்துகொள்ளுங்கள். ஆண்மை என்பது பாகத்தின் நீள அகலத்தைப் பொறுத்ததல்ல – மனத்தின் வீரியத்தையும் ஆழத்தையும் பொறுத்தது. அதைப் போலவே திருமணம் என்பது வெறும் உடற்சோ்க்கை சார்ந்த சமாச்சாரமல்ல. பந்தம், பாசம், பிள்ளைப்பேறு சம்பந்தப்பட்டது.

பிள்ளைப்பேறு என்பது ஆண் பாகத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டதல்ல. அவன் விந்தணுக்களின் எண்ணிக்கையையும் அவற்றின் நீந்தும் வேகத்தையும் பொறுத்தது. உண்மை இப்படி இருக்க, வெறும் சைஸ் விஷயத்தை நினைத்து ஏன் இவ்வளவு சோகம்? இதற்கு மேலும் உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் ஒரு மருத்துவரை அணுகுங்கள்.

உங்களையும், உங்கள் விந்தணுக்களையும் பரிசோதித்துவிட்டு, திருமணத் தகுதியை அவர் கண்டறிந்து விளக்குவார்.