Home ஆரோக்கியம் போதிய உறக்கமின்மை நினைவுத் திறனை பாதிக்கும்- ஆய்வுகளில் தகவல்

போதிய உறக்கமின்மை நினைவுத் திறனை பாதிக்கும்- ஆய்வுகளில் தகவல்

19

sleepஉறக்கமின்மையும் குறைவாக உறங்குவதும் நினைவுத் திறனை பாதிக்கும் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.நெதர்லாந்தின் குரோனிங்கன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் ஹாவகிஸ் இது தொடர்பாக தெரிவித்ததாவது,
நமது நினைவுத் திறனுக்கும் உறக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது என்பது எல்லோரும் அறிந்த ஒரு விடயம்.
குட்டித் தூக்கம் போடுவது நினைவுத் திறனை ஊக்குவிக்கின்றது என்பதும் நமக்குத் தெரிந்ததுதான், ஆனால், உறக்கமின்மையும் குறைவாகத் தூங்குவதும் எவ்வாறு மனித மூளையில் நினைவுத் திறனை பாதிக்கிறது என்பது தெரியாமல் இருந்து வந்தது.இப்போது குரோனிங்கன் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், தூக்கம் – தூக்கமின்மை – நினைவுத் திறன் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நமது மூளையில் உள்ள நியூரோன்களுக்கு இடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள் நம் நினைவுத் திறனில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.தூக்கம் குறைவாக உள்ள நிலையில், இந்தப் பகுதிகளின் செயற்பாடு பாதிக்கப்பட்டு நினைவுத் திறன் பாதிக்கப்படுவது தற்போது தெரியவந்துள்ளது.

மூளையின் ஹிப்போகேம்பஸ் என்னும் பகுதியில் கற்றல் மற்றும் நினைவு ஆகியவற்றுடன் தொடர்புடைய நியூரோன்களின் நுனியில் டென்டிரைட் என்னும் உயிரணுக்கள் உள்ளன.பல்வேறு நேர அளவில் தூக்கமின்மை இந்த உயிரணுக்களில் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஐந்து மணி நேரத்தை விட குறைவாக உறங்கும்போது, நினைவுக் குவிப்பு எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்று அந்த ஆய்வில் தெரியவந்தது.
தூக்கக் குறைவு என்பது டென்டிரைட் உயிரணுக்களின் பருமனிலும் நீளத்திலும் பாதிப்பை ஏற்படுத்துவது தெரியவந்துள்ளது. இதுவே நினைவுத் திறனை பாதிக்கிறது.உறக்க நிலையை ஐந்து மணி நேரம் தள்ளிப்போடுவதால் இந்த பாதிப்பு பெரிய அளவுக்கு ஏற்படுகிறது இந்த நிலையானதுஇ நியூரோன்கள் இடையேயான தகவல் பரிமாற்றத்தை பாதிக்கிறது.
ஆனால் அதன் பின்னர் 3 மணி நேரம் உறங்கினால், டென்டிரைட் உயிரணுக்கள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகின்றன. அதனால் நினைவுத் திறனை ஓரளவு தக்க வைத்துக் கொள்ள முடிகிறது.
தொடர்ச்சியாக ஐந்து மணி நேரத்திற்கு உறக்கத்தை தள்ளிப்போடுவதும், சில மணி நேரம் உறக்கத்தை தாமதப்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்வதும் நியூரோன்கள் இடையேயான தகவல் பரிமாற்றத்தை பாதிக்கிறது.

இதையடுத்து, நினைவுத் திறன் வெகுவாக பாதிக்கப்படுகிறது என்பதை குரோனிங்கன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.எலிகளைக் கொண்டு நடத்திய ஆய்வில் உறக்கமின்மைக்கும் நினைவுத் திறன் குறைவுக்கும் உள்ள தொடர்பு தெரியவந்துள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் குறைவான உறக்கம் என்பது சர்வ சாதாரணமான விடயமாகிவிட்டது. ஆனால் நமது மூளையின் செயற்பாடு உட்பட ஒட்டுமொத்த உடல் நலத்தை அதுபாதிக்கிறது. நமது அன்றாட வாழ்வில் கேடு விளைவிக்கிறது.
உறக்கத்தைப் பல மணி நேரம் தள்ளிப்போடுவது, சிறிதளவே தூங்குவது ஆகிய பழக்கங்கள் மனித மூளையிலும் அதன் செயற்பாடுகளிலும் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றது என்று பேராசிரியர் ரொபர்ட் ஹாவகிஸ் மேலும் கூறியுள்ளார்.