Home ஜல்சா தங்கை கணவருடன் உல்லாசம் : இடையூறாக இருந்த கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி

தங்கை கணவருடன் உல்லாசம் : இடையூறாக இருந்த கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி

97

3949-1-f2889125449be54eb30fd02d54fa5176தங்கை கணவருடன் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் கொலை செய்ததாக மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்ததை அடுத்து மனைவி அவரது கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் கல்மாணிக்கம் கிராமத்தை சேர்ந்த விவசாயி தங்கராஜ் (60). இவருக்கு இரண்டு திருமணம் நடந்துள்ளது. முதல் மனைவி மூலம் 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

முதல் மனைவி இறந்த நிலையில் குழந்தைகளைப் பிரிந்த தங்கராஜ் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த ராமகனியை (36) 2ஆவது திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மனைவிக்கு 14 வயது மகள் உள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு வாழை தோட்டத்தில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த தங்கராஜ், மர்ம நபர்களால் இரும்பு கம்பி, கம்பால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இது குறித்து இரண்டாவது மனைவி ராமகனி கொடுத்த புகாரின் பேரில் நாங்குநேரி காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, மர்ம நபர்கள் யாரோ தனது கணவனை கொலை செய்துவிட்டதாகவும், நள்ளிரவில் நாய் குரைக்கும் சப்தம் கேட்டு பார்த்தபோதுதான் கணவரை கொலை செய்யப்பட்டது தெரியவந்தது என்றும் கூறியுள்ளார்.

காவல் துறையினர் முதல் மனைவியின் மகன்கள், உறவினர்களை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர்களுக்கு சம்பந்தம் இல்லை என்று தெரியவர, வேறு யாருடனும் முன்விரோதம் இருந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், ராமகனியை அழைத்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது ராமகனி முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறியது காவல் துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

தங்கை கணவருடன் கள்ளத்தொடர்பு:

பிறகு விசாரணையில், ராமகனிக்கும் அவரது தங்கை கணவர் அன்பழகனுக்கும் (36) இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து ராமகனி காவல் துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், திருமணத்தின்போது எனது கணவருக்கும், எனக்கும் அதிக வயது வித்தியாசம் இருந்தது. ஆரம்பத்தில் எங்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருந்தது என்றும் கடந்த ஓராண்டுக்கு முன் தங்கையின் கணவருக்கு தனக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், லாரி ஓட்டுநராக பணிபுரியும் அவர், அடிக்கடி வெளியூரில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு தன்னுடன் வந்து உல்லாசமாக இருந்ததாகவும், ராமகனி தங்கை வீட்டுக் செல்வதாக கூறிவிட்டு இருவரும் வெளியிடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், தங்கை கணவருடன் தொடர்பு இருந்தை தங்கராஜ் கண்டித்துள்ளார். இதனால், அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தங்கை கணவனை பிரிந்து இருக்க முடியாமல் தவித்த ராமகனி, கணவர் உயிருடன் இருக்கும் வரை அது நடக்காது என்று எண்ணி அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில் கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக தனது அக்காள் மகன் ராமு என்பவரிடம் நாடகமாடியுள்ளார். இதனை நம்பிய ராமுவும் தங்கராஜை தீர்த்துக்கட்டும் திட்டத்தில் இணைந்துள்ளார்.

இதனையடுத்து தங்கை கணவர் மற்றும் ராமு இருவரும் இணைந்து சம்பவத்தன்று ராமகனியை தோட்டத்து அறையில் பூட்டிவிட்டு தங்கராஜை தீர்த்துக்கட்டி உள்ளனர். ராமகனியும் ஏதும் அறியாதது போல காவல் துறையினரிடம் புகார் அளித்து மாட்டிக்கொண்டுள்ளார்.