Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உடல் பருமனின் விளைவு !

உடல் பருமனின் விளைவு !

21

அழகா இருக்க வேண்டும் என்று எல்லோருக்குமே ஆசை. ஆனால் அந்த அழகை வைத்தே ஒரு மனிதனுக்கு என்னென்ன பிரச்னைகள் அதாவது நோய்கள் இருக்கிறது என்று சொல்லிவிடலாம்.

ஒருவரை அழகா இருக்காங்கன்னு சொல்றதுக்கு முதல் விஷயம் ஒல்லியான உடல் வாகு..

அப்படியில்லாமல் குண்டா அல்லது தொப்பை தொந்தியோடு இருந்தால் எப்படி இருக்கும்… பெரும் பிரச்னைதான்… கேலி கிண்டல் மட்டுமல்லாமல் நோய்களின் ஆதிக்கம் வேறு.

இதை உடல் பருமன் என்று சொல்கிறோம். உடல் பருமன் பிரச்னையில் இரண்டு வகை உண்டு:

1. உடல் முழுவதும் பருமனாக இருக்கும் மார்பிட் ஒபிஸிட்டி (Morbid Obesity)

2. தொப்பை மட்டும் பெரிதாக இருக்கும் ‘அப்டமினல்’ அல்லது ‘சென்ட்ரீபீடல் ஒபிஸிட்டி’ (Centripetal Obesity)

மிக அதிக உடல் பருமன் கொண்டவர்களுக்கு சராசரி ஆயுட்காலத்தைவிட பதினைந்து வருடங்கள் குறைவான ஆயுட்காலம் என்பது மருத்துவத்தால் நிரூபிக்கப்பட்ட உண்மை. இவர்களுக்கு இதய நோய்கள், ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய் போன்றவை வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

உடல் பருமன் என்பது தேவைக்கு அதிகமாக உள்ள உடல் எடையைக் குறிக்கும்.Obesity_4

நாம் உட்கொள்ளும் உணவு நமது உடல் செய்யும் வேலை இந்த இரண்டுக்கும் இடையேயான வரவு – செலவு கணக்கில் ஏற்படும் சமமின்மையே உடல் எடை அதிகரிக்க காரணம். நம் உணவில் எடுத்துக் கொள்ளும் கலோரித்திறன் அதிகமாக இருந்து, நமது உடல் செலவழிக்கும் கலோரித் திறன் குறைவாக இருந்தால் காலப்போக்கில் படிப்படியாக உடல் பருமனாகிறது.

உடல் பருமனை அளவிடுவது எப்படி?

சராசரி அளவைவிட பெரிதாக இருப்போரை பருமனாக இருப்பதாக குறிப்பிடுகிறோம். உடல் பருமனை அளவிட உடல் எடை குறியீட்டு எண் (Body Mass Index) என்ற முறையைப் பயன்படுத்துகின்றனர். இது ஒருவரது உயரம் மற்றும் எடையைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. இந்த அளவை சுருக்கமாக பி.எம்.ஐ எனக் குறிப்பிடுகிறோம்.

பி.எம்.ஐ 18.5-க்கு கீழ் சென்றால் அவர் குறைந்த எடை உடையவர். அதுவே 25-க்கும் அதிகமானால் அதிக எடை என்கின்றனர். 30-க்கும் மேல் என்றால் பருமன். 40-க்கும் மேல் என்றால் ஐயோ! குண்டு பூசணிக்காய் தான், இந்தியர்களை பொருத்தவரை பி.எம்.ஐ 23-க்கு அதிகமாக இருத்தாலே அதிக எடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களுக்கு தொப்பைதான் பெரிய எதிரி.

உலக சுகாதார நிறுவனத்தின் கணிப்பின்படி உலகில் 100 கோடி பேர் அளவுக்கு அதிகமான எடையுடன் உள்ளனர். 30 கோடி பேர் உடல் பருமனால் பதிக்கப்பட்டுள்ளனர். அதிக எடையும் உடல் பருமனும் ஏராளமான நோய்களைக் கொண்டு வருகின்றன. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், மூட்டு நோய்கள், சிலவகை புற்று நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கிறது.

உடல் பருமன் எதனால் வருகிறது:
obesity-11aஉலக சுகாதார நிறுவனத்தின் கணிப்பின்படி உலகில் 100 கோடி பேர் அளவுக்கு அதிகமான எடையுடன் உள்ளனர். 30 கோடி பேர் உடல் பருமனால் பதிக்கப்பட்டுள்ளனர். அதிக எடையும் உடல் பருமனும் ஏராளமான நோய்களைக் கொண்டு வருகின்றன. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், மூட்டு நோய்கள், சிலவகை புற்று நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கிறது.

1. பரம்பரை உடல் வாகு
2. உடல் உழைப்பின்மை, எந்த வித உடற் பயிற்சியிலும்/நடைப்பயிற்சியிலும் ஈடுபடாதிருத்தல்.
3. அசைவ உணவு, எண்ணெய் உணவு பொருட்கள், ஜாம், ஜெல்லி, கேக், ஐஸ்கிரீம், குளிர் பானங்கள், சாக்லேட் ஆகியவற்றை அதிகமாக உண்ணுதல்.
4. மாறிவரும் கலாசாரமும், அடிக்கடி உணவகம் சென்று சாப்பிடுதலும், துரித உணவுகளும், உடல் பருமனுக்கு முக்கியப்பங்கு வகிக்கிறது. 5. மன அழுத்தம். 6. உடல் பருமன் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை.
7. உண்டி குறைத்தல் பெண்டிர்க்கு அழுகு. ஆனால் பெரும்பாலான தாய்மார்களோ மீதமுள்ள உணவை வீணாக்க மனமில்லாமல் தாங்களே உண்ணுதல்.
8. இந்த அவசர கணினி யுகத்தில் உண்பதற்கு கூட நேரம் இல்லாமல் உணவை மென்று விழுங்காமல் அவசர அவசரமாக விழுங்குவதன் மூலம் அதிக அளவில் உட்கொள்ளுதல். சுருக்கமா சொன்னால் ஸ்டைல் சாப்பாடு.

உடல் பருமன் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் :

சக்கரை, கொழுப்பு, உப்பு போன்றவற்றை அதிகம் கொண்ட அதிக கலோரி சத்தும், குறைவான ஊட்டச்சத்தும் கொண்ட உணவு வகைகள் தான் இன்றைய உடல் பருமன் சிக்கலுக்குக் காரணம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகின் மொத்த இறப்புக்களில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 1 கோடி 66 லட்சம் இறப்புகளுக்கு இதயம் தொடர்பான நோய்களே காரணமாகின்றன. இந்த ஆபத்துக்கு காரணமாக இருப்பது முறையற்ற உணவு பழக்கம்தான்.

உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் உணவுப்பழக்கம் ஒருபுறம், உடல் உழைப்பு இல்லாமல் கம்ப்யூட்டர், தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அதிக நேரத்தைச் செலவழிப்பது மற்றொருபுறம். இந்த இரண்டும் சேர்ந்து உடல் பருமனுக்கு வழி செய்கிறது.

அமெரிக்காவில் 65 சதவீதத்தினர் அதிக எடையுடன் காணப்படுகின்றனர். இதற்கான மருத்துவச் செலவுகளுக்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.4,600 கோடி செலவழிக்கப்படுகிறது.

நாமும் அந்த ஆபத்தான நிலையை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கிறோம். உணவில் இரண்டு தன்மைகள் இருக்கின்றன. ஒன்று ருசி. இன்னொன்று சத்துக்கள்.

ஆனால் நாகரிக உலகில் ருசி எல்லாவற்றையும் ஆக்கிரமித்துக் கொண்டதால் சத்துக்கள் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை.

எடை கூடுவது எப்படி:

ஒரே நாளில் எடை கூடி விடுவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாகக் கூடுகிறது.obesity-11bb

தொடக்கத்தில் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. ஒரளவுக்கு மேல் பிரச்னையான பிறகு தான், “ஐயோ” என்று அலறுகிறார்கள். உடல் நலபாதிப்பு அல்லது உடல் அழகு கெடும்போது தான் எல்லோரும் விழிக்கிறார்கள். அப்போதும் கண்டுகொள்ளாதவர்களும் உண்டு.

உடல் எடை கூடுவதால் அழகு மட்டும் கெடுவதில்ல. பல்வேறு நோய்களுக்கும் அது காரணமாகிறது. உடல் எடை அதிகமான பின் அதைக் குறைக்க கஷ்டப்படுவதை விட, எடை கூடிவிடாமல் உடல் எடையை பராமரிப்பதே சிறந்தது.

உடல் நலத்துக்கு டாக்டர்களின் ஆலோசனை கேட்பது போல் எந்த உணவை எவ்வளவு சாப்பிடலாம் என்று உணவு ஆலோசகரிடம் (Dietician) கேட்க வேண்டும். அவர்கள் சொல்லும் ஆலோசனைப்படி சாப்பிட்டால் ஆரோக்கியமாக வாழலாம்.

சிலபேர் குண்டாக இருக்கோம் என்று சரியா சாப்பிட மாட்டார்கள். அது மிகவும் தவறான விஷயம்.. அப்படி செய்வதால் உடல் எடை குறையாது… பலகீனம் தான் ஏற்படும். ஒரு சோர்வு எப்பொழுதுமே இருக்கும்.

அதனால் நேரத்துக்கு நல்ல சத்தான சாப்பாடு சாப்பிட்டு, முறையான தூக்கம் மற்றும் உடற்பயிற்சி செய்து வந்தாலே போதுமானது. அழகு மட்டுமல்ல ஆரோக்கியமும் கூடும்.