Home பாலியல் பாலியல் சம்பந்தமான பிரச்சினைகள்

பாலியல் சம்பந்தமான பிரச்சினைகள்

34

பாலியல் என்றால் என்ன?
பாலியல் என்பது தன்னை வெளிபடுத்துவதாகும்.இது சிந்தனைகள், உணர்வுகள், பாலியல் என்பவற்றை உள்ளடக்கியது.

பாலியல் சுகாதரம் என்றால் என்ன?
ஒருவரின் பாலியல் உணர்வுகளை, இலிங்க நோய் பிரச்சினையின்றி, தேவையற்ற பிரசவங்கள் இன்றி வெளிப்படுத்துவதாகும்.

பால் என்றால் என்ன?
ஒருவரின் உயிரியல் சம்பந்தமானவை

* கட்டமைப்பு: மார்பகம், யோனி(பெண்), ஆண்குறி, விதை(ஆண்).
*தொழிற்பாடு: மாதவிடாய் சச்சரம்(பெண்), விந்துற்பத்தி(ஆண்).
* பிறப்புரிமை: XX(பெண்), XY(ஆண்).

பாலியல் விருப்பு என்றால் என்ன?
அடுத்த பாலுடனான, அதே பாலூடான(தன்னின சேர்க்கை), இருபாலாருடனான ஈர்ப்பு.

பாலியல் பழ‌க்கவழக்கம் என்றால் என்ன?
ஒருவரின் பாலியலை வெளி கொண்டு வருவதற்கு செய்யப்படுபவை.
உதாரணம்: தொடுதல், முத்தமிடல்…

பாலியல் சக்கரம் என்றால் என்ன?
பாலியல் உணர்ச்சியினால் உடலில் எற்படும் தொழிற்பாட்டு மற்று உளரீதியான மாற்றங்கள்.

இது 4 நிலைகளை கொண்டது…

1. தூண்டப்படுதல்..
இது சில நிமிடங்கள் முதல் பல மணித்தியாலங்கள் வரை காணப்படலாம். இதன் போது இருதய துடிப்பு, மூச்சு விடுதல் அதிகரிக்கும். தசை இழுவையிலும் இலிங்க அங்கங்களுக்கான் இரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.
பெண்களில் மார்பக காம்புகள் நேராகும், மற்றும் மார்பகங்கள் பெருக்கும். ஆண்களில் விதைகள் வீங்கும்

2.சமனிலை
முழுமையான உணர்ச்சி நிலை அடைந்ததும் ஒரு சமனிலைக்கு உடல் வரும்..

3.உச்ச கட்டம்(Orgasm)
பாலியல் உணர்வுகளின் தீடீர் வெளிப்பாடு இது சமனிலையின் உச்ச நிலையில் ஏற்படும். இது சில நொடிகளே நீடிக்கும். பெண்களில் பிறப்புறுப்பு இறுக்கமடையும். ஆண்களில் ஆண்குறி சுருங்குதலும், சுக்கில பாய்பொருள் வெளியேற்றமும்.

4.முதன்மை நிலை..
உடல் படிப்படியான அதன் ஆரம்ப நிலைக்கு செல்லும். ஆண்களுக்கு ஒரு உச்ச கட்டத்தின் பின் நேர அவகாசம் தேவை.
பெண்களுக்கு பல உச்சக்கட்டங்கள் அடையலாம்.