Home இரகசியகேள்வி-பதில் ஆண் என்றால் உடலுறவுக்கு ஒரு துணை’ என்று . . . !

ஆண் என்றால் உடலுறவுக்கு ஒரு துணை’ என்று . . . !

48

imageஅன்புள்ள அம்மாவிற்கு—
நான் முதுகலை படித்துக் கொண்டிருக்கும் 23 வயது மாணவி. என் பிரச்னையை எப்படி கூறுவதெ ன்றே தெரிய வில்லை. நான் பரு வம் அடைவதற்கு முன்பே, என க்குள், “செக்ஸ்’ உணர்வுகள் வந்து விட் டது என்று கூறலாம். இருப்பினும், அன்றுமுதல் இன்று வரை கற்புடனும், கட்டுப்பாடு டனும்தான் இருக்கிறேன்.
எந்த ஆண்மகனை பார்த்தாலும், எனக்குள் ஒருவித தவிப்பு; அத னாலேயே, ஆண்களுடன் அதிக ம் பேசுவது கிடையாது. என் குடு ம்பம், கட்டுப்பாடு மிகுந்த நல்ல குடும்பம். ஆனால், என் சுதந்திர த்திற்கு எப்போதுமே தடை நின்றது கிடையாது.

என் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளனர். என்னால் தனிமை யில் இருக்க முடியவில்லை. தவறான வழியில் சென்று விடுவே னோ என்று பயமாக இருக்கிறது.
இரவில் தூக்கம் வருவதில்லை. சிறுவயதில் அலட்சியமாக இருந்து விட்டேன்; ஆனால், இப்போது பயமாக இருக்கிறது. திரைப்படம் கூட பார்க்க முடியவில்லை. அதில் வரும் காட்சிகள்கூட என்னை சலன ப்படுத்துகின்றன.

உளவியல் புத்தகங்கள்கூட படித்து வருகிறேன். மனநோயாக இருக் குமோ என்று கூட பயமாக இருக்கிறது. இரட்டை வாழ்க்கை வாழ் கிறேன் நான்.
கல்லூரியில் ஒரு மாதிரி, வீட்டில் ஒரு மாதிரி போலியாக வாழ்கி றேன் என்றே கூறவேண்டும். யாரிடமும் உண்மையாக சிரிக்கக் கூட முடிய வில்லை. தயவுசெய்து, “திருமணமானால் சரியாகி விடும்’ என்று கூறிவிடாதீர்கள். செக்ஸ் உணர்ச்சிகள் தான் அதிகமாக இரு க்கிறதே தவிர, உடலுறவில் ஈடுபாடு கிடையாது.
ஆண்களின் கை என்மீது பட்டுவிட்டால், உடனே கோபம் வந்துவிடு கிறது. அடிக்கிற அளவுக்கு சென்றுவிடுகிறேன். ஆனால், இது போலி என்று பிறகு உணர்கிறேன். படிப்பில் கவனம் செலுத்த
முடியவில்லை.

எனக்கு இருப்பது மனநோயா அல்லது செக்சிற்கு அடிமையான பெண்ணா? என்று குழம்பிக் கொண்டிருக்கிறேன். தயை கூர்ந்து நீங்கள் தான் தீர்வு கூற வேண்டும்.
— இப்படிக்கு,
அன்பு மகள்.

அன்பு மகளுக்கு —
உன் கடிதம் கிடைத்தது. உன்வயதில், பல பெண்களுக்கும் ஏற்படு கிற அதே நிலை தான் உனக்கும் ஏற்பட்டிருக்கிறது. இதற்காக பயப் படுவதோ, கவலைப்பட வேண்டியதோ இல்லை.
நான் நினைக்கிறேன், உன் வீட்டில் உன்னை மிகவும் கட்டுப்பாடோடு வைத்திருப்பர் என்று…
“ஆண் என்றால் உடலுறவுக்கு ஒரு துணை’ என்று மட்டும்தான் உன் மனதில் மிக அழுத்தமாக பதிந்திருக் கிறது.
சிறுவயதில், ஆண் பிள்ளை பக்கத்தில் உட்கார்ந்தால், “காது அறுந்து போகும்’ என்றும், ஒரு ஆணுடன் மிக சாதாரணமாக பேசினாலே, அவனுக்கும், அவளுக்கும் ஏதோ கள்ளத்தொடர்பு இருக்கிறது என் பது போலவும், “ஆண் வாடையே இல்லாது வளர்ந்த பெண்தான் உத்தம ஜாதிப்பெண்’ என்றும், சொல்லி சொல்லி வளர்க்கிற குடும் பங்கள் உண்டு.

இக்குடும்ப பெண்களுக்கு, ஆணின்மீது ஒருவித கவர்ச்சியும், ஒரு வித பயமும், ஒருவித ஆவலும், அதே சமயத்தில் ஒருவித வெறுப்பும் கலந்து, ஒரு தெளி வான நோக்கம் இல்லாமல் இருக்கும்.
“கல்யாணம் செய்து கொண்டால் சரியாகி விடும் என்று மட்டும் சொல்லி விடாதீர்கள்’ என்று நீயாகவே எழுதியிருக்கிறாய்… அதை பார்த்து சிரித்துக் கொண்டேன் நான். உண்மையிலேயே கல்யாணம் செய்துகொண்டால், உன்னுடைய இந்த நிலைமை மாறித்தான் போ கும்.
காரணம் என்ன தெரியுமா?
புரியாத புதிராக, ரகசியங்களை உள்ளடக்கியதாக எல்லாராலும் விமர்சிக்கப்பட்ட, “அந்த’ விஷயத்தை, நீயும் அறிந்து கொள்வாய். அதன்பின், பயப்படுவதற்கோ, திருட்டுத்தனமான ஆசைக்கோ இட மே இல்லை.
யோசித்துப் பார்… புது கணவன், அவனிடம் உள்ள அழகு, அறிவு சார் ந்த பேச்சு, இரண்டில் உன்னை முதலில் கவருவது எது? கண்டிப்பாய் அவனின் உருவமும், அழகும் தான். காரணம், அது ஒன்றுதான் பார்த்தவுடன், “பளிச்’சென்று கண்ணுக்குதெரிகிறது. கண்களின் வழி யே மூளையில் பதிவாகி, “ஜிலு ஜிலு’வென முதுகுத்தண்டு வழியாக ஒருவித லாகிரியை உடம்பு முழுக்க பரவச் செய்கிறது. இதுதான் தாம்பத்தியத்திற்கு முதல்படி.
அவன் யார், எப்படிப்பட்டவன், புத்திசாலியா, அசலா, கோபக்காரனா என்பதெல்லாம் அவனுடன் பழக பழகத்தான் புரிகிறது.
புரிந்த பிறகோ, பழைய பிரமிப்பு இல்லை. உற்சாகம் கூட கொஞ்சம் குறைந்து விடுகிறது.
“அவர் தான் வந்திருக்கார்… தானே தட்டை எடுத்து போட்டுண்டு சாப் பிடுவார். நீங்க உக்காருங்கோ…’ என்று அடுத்த வீட்டு மாமியிடம் அலட்சியமாய் விமர்சிக்க முடிகிறது.
காலப்போக்கில், அவனது பார்வையே, உனக்குள் கிளப்பிய மோகம் எல்லாம் அழிந்து போய், உன் தோளில் முகம் புதைத்து அவன் தூங் கினாலும் கூட, “த்ச்… நகர்ந்து படுங்களேன்… ஏற்கனவே புழுங்கு கிறது; கரன்ட் வேற இல்ல…’ என்று உன்னை முனகச் செய்யும்.
யோசித்துப்பார்… திருமணத்துக்கு முன், உன்னை மணக்கப் போகிற வனிடம் உனக்கு இருந்த கவர்ச்சி, நாணம், ஆசை, பயம் இவையெ ல்லாம் எங்கே போயிற்று? ஆக, திருமணம் ஆனால் சரியாகப் போய் விடும் என்று சொல்வது எதற்காக என்று புரிகிறதா?
வேறு வழியில்லை. எதையும் நெருங்கிப் பார்க்காமல் இது இப்படி த்தான் இருக்கும் என்று உத்தேசமாய் சொல்ல முடியாது. உனக்கோ, ஆண்களுடன் பேசுவதற்கோ, பழகுவதற்கோ உன் வீட்டுச் சூழ்நிலை இடமளிக்காதவாறு இருக்கிறது.
அதனால் தான், இந்த பயமும், விறுவிறுப்பும், மோகமும், உணர்ச்சிப் பெருக்கும். பல ஆண்களுக்கும் கூட இதே போன்ற நிலைமை ஏற் படுவது உண்டு.
பெண்களைப் பார்த்தால் பேச்சு தடுமாறும்; இல்லா விட்டால் வார் த்தை திக்கும்; வேர்த்துக் கொட்டும்; வெட் கமும், சொல்ல முடியாத அவஸ்தையுமாய் தவிப்பர். இதற்குக் காரணம், அவர்கள் இன்னும் பெண் என்கிற புத்தகத்தை திறந்து படிக்க வில்லை என்பதுதான்.
கடைசியாக சின்னதாய், அதே சமயத்தில் ஆன்மிகமாய் ஒரு விஷ யம் சொல்லட்டுமா? கடவுளிடம் நாம் பயபக்தி யுடன் இருக்கிறோம்.. காரணம் என்ன? அவர் இருக்கிறாரா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. இருக்கிறார் என்றால், எத்தனை தலை, எத்தனை கை என்றும் தெரியாது. இல்லை என்று நிச்சயமாகக் கூறி, ஒதுக்கித் தள்ளவும் நம்மால் முடியாது.
இந்த பயமும், பக்தியும், நமக்கு இருப்பதற்கு காரணமே, அவர் இருக் கிறாரா, இல்லையா என்ற சந்தேகத்தினால் தான்.
அவர் இருக்கிறார்; நிச்சயமாக இருக் கிறார்; அதுவும் நமக்குள்ளே இருக்கிறார்; அவரை விட்டு நாம் பிரியவோ, ஓடிப்போகவோ முடி யாது என்பதை நிச்சயமாகத் தெரிந்து கொண்ட ஞானிகளுக்கு இந்த பயமோ, பக்தியோ இருக்காது; பதிலாக அன்பும், பிரேமையும்தான் இருக்கும்; உரிமையும், கோபமும் தான் இருக்கும். ஏனெனில், உண் மை, உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கி விட்டது.
ஆதலால், கவலைப்படாதே… வாழ்க்கையில் ஆணும் ஒரு பகுதி என்று நினை. எல்லாமே சரியாகி விடும்.

Previous articleஉறவுகளில் விரிசலை ஏற்படுத்தும் பிரச்சனைகள்!!!
Next articleதுணையைப் புரிந்து கொள்ளுங்கள்