Home ஆரோக்கியம் Sexual Activities for Patients- நோயாளிகள் எப்போது செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும்

Sexual Activities for Patients- நோயாளிகள் எப்போது செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும்

31

ஆஸ்துமா நோயாளி:
பாலுறவு என்பது தொல்லை தரக்கூடியது அல்ல. ஆஸ்துமா நோயாளிகளுக்கு பாலுறவின்போது மூச்சுவிடச் சிரமமாக இருப்பது இயற்கையான ஒன்று தான். அதிக வேட்கையுடன் ஈடுபடும்போது இது இன்னும் அதிகரிக்கும். பாலுறவிற்கு முன் Bronchodilator பயன்படுத்துவது உதவியாய் இருக்கும்.

சிறுநீரகக் கோளாறு நோயாளி:
பாலியல் வேட்கை குறைவாக இருக்கும். விரைப்புத் தன்மை ஏற்படுவது அனீமியா, யுரேமீயா அல்லது விந்துப்பைகளின் இயக்கமின்மை காரணமாக கடினமாக இருக்கும். டெஸ்டோஸ்டிரான் சுரப்பு குறைய இது காரணமாகும். மனத்தளர்ச்சி ஏற்படுவதால் ஆர்வம் குறையும்.

வயதானால் முடியாதா?
ஐம்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்நோய் ஏற்படக்கூடும். தசை நார் வீக்கம் போல ஏற்பட்டு, ஆணுறுப்பு விரைப்பின் போது வளைந்த தோற்றம் பெறும். இதனால் பாலுறவின் போது வலி ஏற்படக்கூடும். தானாகவே இது சரியாகி விடுமென்பதால் சிகிச்சை தேவையில்லை.

விந்துடன் ரத்தம் வந்தால்:
சிறுநீர்ப்பை முன் வாயில் சுரப்பி மற்றும் விந்துப்பைகளில் அழற்சி ஏற்படும்போது விந்துடன் ரத்தம் கலந்து வருகிறது. விபத்துக்காயம், சிறுநீர் வடிகுழாய் அழற்சி ஆகியவற்றினாலும் இது ஏற்படக் கூடும்.

மஞ்சள் காமாலை நோயாளி:
மஞ்சள் காமாலை, இது பாலியல் ஆர்வத்தைக் குறைக்கிறது. பாலியல் நோய்கள் பரவ வழி வகுக்குமோ என்ற எண்ணத்தினாலும் வேட்கை அற்றுப் போகிறது. இது ஹெபாடைடிஸ் நோய்க்கான காரணம் மற்றும் அதன் தன்மையை பொறுத்து மாறுபடும். பரவக்கூடிய ஹெபாடைடிஸ்ஸாக இல்லாமலிருப்பின் பாலுறவில் ஈடுபடலாம். வைரஸினால் ஏற்பட்ட ஹெபாடைடிஸ்ஸாக இருப்பின் இது பாலுறவின் மூலம் பரவக்கூடும்.

மூட்டுவாத நோயாளி:
மூட்டுவாதம் உள்ளோருக்கு ஏற்படும் வலி பாலுறவின்போது தொல்லை தரக்கூடும். கோபம், எண்ணம் அல்லது செயல் குறைவு, பிறரைச் சார்ந்திருத்தல், தன் உடல் பற்றிய தாழ்வு மனப்பான்மை ஆகிய மனவியல் காரணங்கள் சோர்வடையச் செய்கின்றன. ஸ்டீராய்டின் பக்க விளைவான பருமன் போன்றவற்றினாலும் பிரச்சினை ஏற்படும்.

தன் துணைவரோடு மாற்று முறைகள் மற்றும் வசதியான பாலுறவு நிலை பற்றி ஆலோசிப்பதே சிறந்த தீர்வாக அமையும்.