Home காமசூத்ரா செக்ஸ் உறவின் போது பெண்கள் எப்போது பெயிலாகிறார்கள்?

செக்ஸ் உறவின் போது பெண்கள் எப்போது பெயிலாகிறார்கள்?

88

தாம்பத்ய உறவின் போது பெண்களுக்கு சில சிக்கல்கள் எழுகின்றன. உச்சக்கட்டம் அடைவதில் ஏற்படும் சிக்கல் மனரீதியான சிக்கல்களை அளிக்கின்றன. உடல்ரீதியான, மனரீதியாக பிரச்சினைகள் இருந்தாலும் பெண்கள் பெயிலாகிவிடுவார்கள் என்கின்றனர் நிபுணர்கள். எந்த சமயத்தில் பெண்கள் ஜெயிக்காமல் தோற்றுப்போகிறார்கள் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போதோ, அல்லது பாலியல் ரீதியான நோய் தாக்கியுள்ள போதோ அவர்களுக்கு மனரீதியான ஒரு அழுத்தம் ஏற்படுகிறதாம். இதனால் அவர்களுக்கு ஆர்கஸம் ஏற்படுவதில் சிக்கல்கள் எழுகின்றன என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். எனவே கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பான உறவு முறை பற்றி மகப்பேறு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

உச்சக்கட்டம் என்பது ஒரு உணர்வு. இது அடிப்படையில், பால் உறுப்புகளின் தூண்டுதலில் தொடங்கி, உடலளவிலான பலவகையான மாற்றங்களையும், மனதளவிலான சில மாற்றங்களையும் உள்ளடக்கிய ஒரு எழுச்சி நிலை. இந்த எழுச்சி நிலைக்கு உடலின் பல்வேறு பாலுறுப்புகளிலிருந்து மூளைக்கு செல்லும் ரசாயன சமிக்ஞைகளும், அதற்கான மூளையின் எதிர்வினையாய் உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் உடலியக்க மாற்றங்களுமே காரணம்!

உலகில் எல்லாருக்குமே, உடலுறவின்போது உச்சக்கட்டத்தை அடைவதுதான் குறிக்கோள். ஆனாலும், உச்சக்கட்டத்தை அடைவது என்பது பலருக்கு கைவராத ஒரு கலையாகத்தான் இருக்கிறது என்கிறது விஞ்ஞானம் இந்த நிலையை அடைதல் என்பது எல்லோராலும் எளிதில் முடியாது. உடல் ரீதியான கோளாறுகள், நோய் பாதிப்புகள் இருந்தாலும் பெண்களால் உச்சக்கட்டத்தை எளிதில் அடைய முடியாது. எனவே செக்ஸாலஜிஸ்ட்களை சந்தித்து ஆலோசனை பெறவும்.

உச்சக்கட்டம் தொடர்பான பிரச்சினை காரணமாக ஒருவர் மருத்துவரை அணுகினாலும், தீர்வுக்கான சிகிச்சை சிக்கலானது. காரணம், உச்சக்கட்டத்தைப் பொருத்தவரை இத்தனை நாட்களில், இத்தனை தரம் உச்சக்கட்டத்தை அடைவதுதான் இயல்பானது என்று சொல்லும் ஒரு திட்டவட்டமான வரையரை கிடையாது! ஆக, மருத்துவர்கள் நோயாளிகளின் வயது, செக்ஸ் அனுபவம் மற்றும் திருப்தி ஆகியவற்றைக் கொண்டே ஒரு தீர்வை காண முயலவேண்டும் என்கின்றனர்

உளவியல் நிபுணர்கள்.
பெண்களுக்கு “Female Sexual Arousal Disorder (FSAD) எனப்படும் குறைபாடுகள் இருந்தாலும் பாலுணர்வு தூண்டுதல் ஏற்படுவதில்லை. உறுப்புகளில் வலி, வறட்சி போன்றவை ஏற்படும். இதுபோன்ற காரணங்களினாலும் உடலுறவினால் அவர்களுக்கு திருப்தி ஏற்படாத நிலை ஏற்படுகிறது.

சிறுநீர் தொற்றுப் பிரச்சினையினால் பெண் உறுப்புகளில் ஏற்படும் புண்களும் உடலுறவில் ஆர்வமின்மையை ஏற்படுத்துகிறது. எனவே உடல் உறவில் திருப்தி இன்மையும், உச்சக்கட்டம் ஏற்படுவதில் சிக்கல் உள்ள பெண்கள் சரியான உளவியல் நிபுணர்களையோ, செக்ஸாலஜிஸ்ட்களையோ சந்தித்து ஆலோசனை பெறலாம்.