Home சூடான செய்திகள் பாலுறவு வேட்கையை அதிகரிக்கும் வழிகள்

பாலுறவு வேட்கையை அதிகரிக்கும் வழிகள்

95

பாலுறவு வேட்கை குறைவுக்கு , மனம் சார்ந்த பிரச்னைகள் காரணமாக வந்ததா ? உடல் சார்ந்த பிரச்னைகளால் வந்ததா என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

மனம் சார்ந்த பிரச்னைகளால் வரும்போது அதைத் தீர்த்துக்கொள்ள முன்வர வேண்டும்.

தற்போதைய ஆய்வுகளின்படி சுமார் அறுபது சதவீதப் பெண்கள் எந்தவிதமான பாலுறவுக் குறைகளையும் தெரியப்படுத்தவில்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஒருவேளை பாலுறவுக் குறைகள் இருந்தாலும் மனைவியிடம் கணவன் மனம் விட்டு தனது குறைகளைப் பற்றிப் பேசுதல் , கணவனின் குறைகளைக் களைய மனைவி ஒத்துழைப்புக் கொடுத்தல், அழிந்து – அடங்கி – முடங்கிக் கிடக்கும் ஆசையைத் தூண்டுதல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

உறவு முறைகளைச் சீரமைத்துக்கொள்ள வேண்டும்.

பாலுறவு வேட்கையைக் குறைக்கும் கோபம் , குற்ற உணர்ச்சி , தாழ்வு மனப்பான்மை போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு , தனது இணையுடன் முழுமையான மதுடன் உறவுக்கு முன்வர வேண்டும்.

உறவு முறை சரியாக மாற்றப்பட்டுவிட்டால் பாலுறவு வேட்கை குறைகிற பிரச்னையும் சரியாகிவிடும்.

டெஸ்டோஸ்டீரான் என்ற பாலின ஊக்கி ஹார்மோன்களின் குறைபாட்டினாலும் பாலுறவு வேட்கை குறைந்துவிடும்.

இதை மருத்துவப் பரிசோதனையில் கண்டுபிடித்து சிகிச்சை மேற்கொண்டாலும் பாலுறவில் வேட்கை வந்துவிடும்.

சர்க்கரை நோய் , நரம்புகளை முடக்கிவிடுவதால் இயல்பு நிலையிலேயே பாலுறவு எழுச்சிக் குறைபாடுகள் வருவதால், இந்த வியாதியை முழுக்கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள மறந்துவிடக் கூடாது.

மற்ற மாத்திரைகளால் ஏற்படும் பக்க விளைவுகள், பாலுறவு வேட்கை இயல் பாகவே குறைந்து போயிருத்தல், உணவு முறை மாற்றத்தால் பாலுறவு வேட்கை குறைந்திருத்தல் என எத்தகைய பிரச்னையாக இருந்தாலும் அதை முதலில் அனுபவம் வாய்ந்த பாலியல் நிபுணரிடம் கலந்தாலோசித்து , பரி சோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை பெற்றால் சிக்கல் தீர்ந்துவிடும்.