Home பாலியல் செக்ஸ் தலைவலி – புணர்ச்சிப் பரவசநிலையுடன் சம்பந்தப்பட்ட தலைவலி

செக்ஸ் தலைவலி – புணர்ச்சிப் பரவசநிலையுடன் சம்பந்தப்பட்ட தலைவலி

43

penkal suyainpam easy sex mater,actor sex,hindi sex,vipacchari,vipasari,vipasari kathai,,sonaccacchi, mumbasi sonaccaci.,bathroom mater, bathroom ,seelp,night sleep wel,wel sleep,good sleep,samayal manthiram.diviya,antharankamசெக்ஸ் தலைவலி (காய்ட்டல் செஃபால்ஜியா) என்பது உடலுறவின்போது அல்லது சுய இன்பம் செய்யும்போது ஏற்படும் தலைவலியைக் குறிக்கிறது. பொதுவாக புணர்ச்சிப் பரவசநிலையின்போது (க்ளைமேக்ஸ்) ஏற்படும் தலைவலிகளை செக்ஸ் தலைவலிகள் என்கிறார்கள்.

இந்த வகை தலைவலிகள் மிக அரிதானவை (360 பேரில் ஒருவருக்கு மட்டுமே வரலாம்), பெண்களை விட ஆண்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகமாக ஏற்படுகிறது.

காரணங்கள்

புணர்ச்சிப் பரவசநிலையை நோக்கிய எந்தப் பாலியல் செயல்பாட்டாலும் செக்ஸ் தலைவலி வரக்கூடும்.

செக்ஸ் தலைவலிகளில் பெரும்பாலானவை பிரதான தலைவலிகளாகும். அதாவது இவை வேறு பிற பிரச்சனைகளின் அடையாளமல்ல. மேலும் இவை கவலைப்பட வேண்டிய பிரச்சனையும் அல்ல. எனினும் சில சமயம் செக்ஸ் தலைவலி என்பது, மூளைக்குச் செல்லும் இரத்த நாளங்களில் இருக்கும் பெரிய பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம்.

திடீரென உண்டாகும் தலைவலிக்கு பல காரணங்கள் இருக்கலாம், அவற்றில் சில:

மண்டையோட்டுக்குள் இரத்த நாளம் விரிவடைதல் – தலைக்குள், தமனிச்சுவர் விரிவடைந்து பெரிதாதல்
தமனி சிரை இணைப்புப் பிரச்சனை – தவறான முறையில் மூளையில், தமனிகளும் சிரைகளும் இணைதல்இதனால், மூளையைச் சுற்றிலும் தண்டுவடத் திரவம் நிரம்பியுள்ள பகுதியில் இரத்தக்கசிவு ஏற்படலாம்.
தமனியில் பிளவு: தமனிச் சுவரில் இரத்தக் கசிவு
பக்கவாதம்:
கரோனரி இதய நோய்
கருத்தடை மாத்திரைகள் போன்ற சில மருந்துகள்
செக்ஸ் தலைவலியுடன் மயக்கம், வாந்தி, கழுத்தில் தசை கெட்டியாவது, பிற நரம்பு சம்பந்தப்பட்ட அறிகுறிகள் மற்றும் ஒரு நாளுக்கும் அதிகமாக நீடிக்கும் வலி போன்றவை உடனிருந்தால், இந்தத் தலைவலி வேறு பிரச்சனையின் அறிகுறியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

ஆபத்துக் காரணிகள்

இந்தத் தலைவலி யாருக்கும் வரலாம், எனினும் பின்வருபவை இதற்கான ஆபத்துக் காரணிகளாகும்:

ஆண்பாலினம்: ஆண்களுக்கே இந்தப் பிரச்சனை வர அதிக வாய்ப்புள்ளது
ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள்: ஒற்றை தலைவலி உள்ளவர்களுக்கு, செக்ஸ் தலைவலி ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம்.
அறிகுறிகள்

இரண்டு வகை செக்ஸ் தலைவலி இருப்பதாகத் தெரியவந்துள்ளது:

கழுத்தில் வலியுடன், மந்தமான தலைவலி இருக்கும். பாலியல் கிளர்ச்சி அதிகரிக்கும்போது தலைவலி அதிகரிக்கும்
திடீரென கடுமையாக தலைவலி ஏற்படும், புணர்ச்சிப் பரவசநிலைக்கு சற்று முன்பு அல்லது புணர்ச்சிப் பரவசநிலை தொடங்கிய தருணத்தில் ஏற்படும்.
சிலருக்கு இரண்டு வகை தலைவலியும் இருக்கலாம்.
இந்த செக்ஸ் தலைவலி பெரும்பாலும், சில நிமிடங்களே நீடிக்கும். சில வகை தலைவலிகள் சில மணிநேரம் முதல் இரண்டு மூன்று நாட்களும் நீடிக்கலாம். செக்ஸ் தலைவலி பிரச்சனை உள்ளவர்களில் சுமார் பாதி பேருக்கு, ஆறுமாதங்களுக்கும் மேலாக அந்தப் பிரச்சனை இருக்கலாம். சிலருக்கு வாழ்வில் ஒரு முறை மட்டுமே வந்திருக்கலாம்.

நோய் கண்டறிதல்

சில பொதுவான அறிகுறிகளை வைத்து உங்களுக்கு செக்ஸ் தலைவலி உள்ளது என்பதைக் கண்டறியலாம்.

பின்வரும் சில சோதனைகளையும் மருத்துவர் பரிந்துரைக்கலாம்:

மேக்னடிக் ரெசனன்ஸ் இமேஜிங் (MRI): காந்தப் புலத்தையும் ரேடியோ அலைகளையும் பயன்படுத்தி, மூளையின் அமைப்புகள் படமெடுக்கப்படும்.
கணினி மூலம் செய்யப்படும் டோமோகிராபி (CT) ஸ்கேன்: மூளையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைப் படமெடுக்க, சுழலும் எக்ஸ்ரே கருவியும் கணினி மென்பொருளும் பயன்படுத்தப்படும்.
மேக்னட்டிக் ரெசொனன்ஸ் ஆஞ்சியோகிராபி (MRA) மற்றும் கணினி மூலம் செய்யப்படும் டோமோகிராபி (CT) ஸ்கேன்: இதில் காந்தப்புலம் அல்லது எக்ஸ்ரே கதிர்களைப் பயன்படுத்தி, மூளை மற்றும் கழுத்துப் பகுதியில் இருக்கும் இரத்தக் குழாய்கள் படமெடுக்கப்படும்.
செரிப்ரல் ஆஞ்சியோகிராம்: அடர் நிறமுள்ள ஒரு சாயம், கழுத்து மற்றும் மூளையில் இருக்கும் சிரை மற்றும் இரத்தக் குழாய்களில் செலுத்தப்பட்டு, காட்சிப்படுத்தப்படும்.
லும்பார் பங்ச்சர்: திடீரென ஏற்படும் தலைவலிகள் இருந்தால், மூளைக்கு செய்யப்படும் வழக்கமான ஸ்கேன் சோதனைகளுடன் கூடுதலாக, ஸ்பைனல் டேப் எனப்படும் இந்தச் சோதனையும் செய்யப்படும். இதில், மூளை மற்றும் தண்டுவடத்தைச் சுற்றிலும் இருக்கும் தண்டுவடத் திரவம் ஊசிமூலம் சிறிது எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும். இரத்தக் கசிவு அல்லது நோய்த்தொற்று ஏதேனும் இருந்தால், இந்தச் சோதனையில் கண்டறியலாம்.
சிகிச்சை

வலி நிவாரணத்திற்கு:

எளிய வலி நிவாரண மருந்துகள்
பாதிக்கப்பட்ட பகுதியில் குளிர் ஒற்றடம் கொடுக்கலாம்
அமைதியான, இருண்ட அறையில் ஓய்வெடுக்கலாம்
பலருக்கு, ஓரிரு முறை இந்தத் தலைவலி வந்து போனால், அதன் பின் அதுவாகவே படிப்படியாகக் குறைந்து இல்லாமல் போய்விடும். எனினும், அடிக்கடி இந்தத் தலைவலி வந்தால் அல்லது தலைவலி கடுமையாக இருந்தால் மருத்துவரிடம் செல்லவும்.

தடுத்தல்

உடலுறவில் ஈடுபடாமல் இருப்பது அல்லது சுயஇன்பம் செய்யாமல் இருப்பதன் மூலம் இதனை முற்றிலுமாகத் தடுக்க முடியாது. ஆனால் பலருக்கு இந்தத் தீர்வு நடைமுறையில் சாத்தியமானதும் இல்லை.

இந்தத் தலைவலி அடிக்கடி வருபவர்கள் அல்லது நீண்ட நாட்கள் பாதிப்பு இருப்பவர்களுக்கு, தலைவலியைத் தடுப்பதற்காக மருத்துவர், தினசரி எடுத்துக்கொள்ளும் பீட்டா ப்ளாக்கர்ஸ் (ப்ரோப்ரனால் அல்லது மேட்டோப்ரோலால் போன்ற) போன்ற மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்.

இண்டோமெத்தாசின் (அழற்சி எதிர்ப்பு மருந்து) அல்லது ட்ரிப்ட்டான் வகையைச் சேர்ந்த (நாராட்ரிப்ட்டான்) போன்ற பிற மருந்துகள் பரிந்துரைக்கலாம். பாலியல் செயல்பாட்டில் ஈடுபடும் முன்பு இவற்றை எடுத்துக்கொள்வதால் தலைவலியைத் தடுக்க முடிகிறது.