Home உறவு-காதல் ரகசியங்கள் நிறைந்த வாழ்க்கை பிரச்சினையானது

ரகசியங்கள் நிறைந்த வாழ்க்கை பிரச்சினையானது

32

“கணவன்- மனைவி இருவரும் தினமும் ஒரு மணி நேரமாவது தங்களை பற்றியும், குழந்தைகளை பற்றியும் பேசவேண்டும். தினமும் ஒருமுறையாவது குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும். வாரத்தில் ஒரு நாளாவது குடும்பமாக வெளியே சென்று பொழுதுபோக்கவேண்டும். மாதம் ஒருமுறை அருகே உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்றுவரவேண்டும்.

கணவன்-மனைவிக்குள் ரகசியங்கள் எதுவும் இருக்கக்கூடாது. எல்லாவற்றையும் மனம்விட்டுப் பேசவேண்டும். ரகசியங்கள் நிறைந்த வாழ்க்கை பிரச்சினைக்குரியதாகிவிடும். உடலுறவு திருப்தி, அதிருப்தி முதல் அனைத்து விஷயங்களும் மனம்விட்டு பேசப்படவேண்டும். இருவரும் சின்னச்சின்ன விஷயங்களுக்கு கூட ஒருவரையொருவர் பாராட்டிக்கொள்ளவேண்டும்.

‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற வாழ்வியல் நெறிமுறையை பெற்றோர் தங்கள் வயதுக்கு வந்த மகன், மகள்களுக்கு உணர்த்த வேண்டும். கணவனோ, மனைவியோ தடம்மாறி செல்லும்போது அது தங்கள் எதிர்கால சந்ததியை எப்படி பாதிக்கும் என்பதையும் சொல்லிக்கொடுக்கவேண்டும்.

பெற்றோருக்கு தெரியாமல் பெண்கள் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும். தாங்கள் கரம்பிடிக்கும் காதலனின் சொந்த ஊர், அவருடைய பெற்றோர் பற்றிய முழு விவரங்களை அவர்கள் தெரிந்து வைத்திருப்பதுடன் முடிந்த வரை பதிவுத்திருமணம் செய்ய வேண்டும். நெறியற்ற வாழ்க்கை நிச்சயம் வெற்றி பெறாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.